அகத்தியன் மகள் விஜயலட்சுமி, "சென்னை-28"ல் அறிமுகமாகி "அஞ்சாதே"வில் பாப்புலர் ஆனார். அதற்பிறகு அம்புலி உள்பட சில படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் அனிமேஷன் படமான "சுல்தான் தி வாரியர்" படத்தில் அனிமேஷன் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் டிராப்பாகவே வெறுத்துப்போன விஜயலட்சுமி கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது "வெண்ணிலாவின் வீடு" என்ற படத்தில்
நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெண்ணிலா என்கிற லீட் ரோலில் நடிக்கிறார். அவர் முகபாவத்துக்கு ஏற்ற மாதிரி கிராமத்து பெண் வேடம். கிராமத்திலிருந்து புதிதாக திருமணம் செய்து கொண்டு நகரத்திற்கு வரும் பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை சித்தரிக்கும் படம். "அரும்பு மீசை குறும்பு பார்வை" இயக்கிய வெற்றிமகாலிங்கம் இயக்குகிறார். விஜயலட்சுமிக்கு ஜோடி செந்தில். காமெடியோடு நகர்புற வாழ்க்கையை சொல்லும் படம்.