Windows 7 USB/DVD download tool - ப்ளாஷ் இயங்குதளம் உருவாக்க மென்பொருள்

கணினியில் இயங்கு தளங்களை நிறுவ பல்வேறு வழிகள் உள்ளன, கணினியில் இயங்கு தளங்களை சீடி/டிவிடி, ப்ளாப்பி, ப்ளாஷ்ட்ரைவ், ஈத்தர்நெட் போன்ற வழிகளில் நிறுவலாம். இதில் பெரும்பாலும் சீடி/டிவிடிக்களை பயன்படுத்தியே இயங்கு தளங்களை நிறுவுகிறனர். ப்ளாப்பியானது காலபோக்கில் மறைந்து விட்டது, தற்போது ப்ளாப்பியினை
அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் ஈத்தர்நெட் மூலமாக இயங்கு தளங்களை நிறுவ முடியும். ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்தி எவ்வாறு கணினியில் இயங்கு தளங்களை நிறுவுவது என்று கீழே பார்ப்போம். நம்முடைய நண்பர்களின் கணினியில் சீடி/டிவிடி ட்ரைவானது இருக்காது, இல்லை பழுதடைந்து இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் அந்த கணினியில் ப்ளாஷ் ட்ரைவ் மட்டுமே இயங்கும். அந்த நிலையில் இயங்கு தளங்களை நிறுவ வேண்டுமெனில் என்ன செய்வது, ஒரே வழிதான் ப்ளாஷ் ட்ரைவ் மூலமாக மட்டுமே கணினியில் இயங்கு தளத்தை நிறுவ முடியும். இல்லையெனில் புதியதாக சீடி/டிவிடி ட்ரைவை கணினியில் இணைத்து இயங்கு தளத்தை நிறுவ வேண்டும். இதற்கு தீர்வு தான் Windows 7 USB/DVD Download tool மென்பொருளாகும்.


இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
Size:2.59MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget