உலக நாயகனை புகழ்ந்து தள்ளும் ஆண்ட்‌ரியா!

யுத்தம் என்றாலு‌‌ம், முத்தம் என்றாலும் அவ்வளவு எளிதில் ஷேக் ஆகாதவர் ஆண்ட்‌ரியா. நடிகை, பாட‌கி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று திறமைகள் பல வைத்திருப்பவர் தன்னைப் பற்றி எப்போதும் போல ஓபனாகப் பேசுகிறார். அவரது பேட்டியிலிருந்து... நீங்க ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அந்த அனுபவம் சினிமாவுக்கு உதவியாக இருக்கிறதா?

நாடகங்களில் நடிக்கிற போது நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்த கஷ்டம்தான் நான் சினிமாவில் தொடர்ந்து இருக்க காரணம். நேரடியாக சினிமாவுக்கு வந்திருந்தால் சினிமாவை விட்டே ஓடிப்போயிருப்பேன். இந்த பொறுமைக்கு என்னோட நாடக அனுபவங்கள்தான் காரணம். இன்னைக்கு சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் இருக்கிறதுக்கு நாடக அனுபவங்கள் முக்கிய காரணம்னு சொல்லலாம்.

கமல் படத்தில் நடிச்சிருக்கீங்க...?

சினிமாவில் திறமை இருந்தும் சாதிக்க முடியாதவங்க இருக்காங்க. அதே மாதி‌‌ரி எதுவுமே இல்லாம முன்னுக்கு வந்தவங்களும் இருக்கிறாங்க. நான் திறமையான பொண்ணு. திறமை இருந்தால் யார் படமாக இருந்தாலும் உங்களை தேடி வரும். செல்வராகவ‌ன், கௌத‌ம், கமல் சார்னு பெ‌‌ரி கலைஞர்களுடன் வேலை செய்யும் போது பெருமையாக இருக்கு.

விஸ்வரூபம் அனுபவம் எப்படியிருந்தது...?

என் சினிமா கே‌ரிய‌ரில் மிக நல்ல அனுபவம்னு சொல்லலாம். இப்படியும் ஒரு ஷுட்டிங் ஸ்பாட் இருக்கும்னு விஸ்வரூபம் படப்பிடிப்பில்தான் தெ‌ரிஞ்சுகிட்டேன். கமல் சார் படங்களில் வேலை பார்ப்பது ஒருவகையில் சவாலானது. அதை நான் வெற்றிகரமாக கையாண்டிருக்‌கிறேன்னு நினைக்கிறேன். அப்படியே ஆளையே மாத்துற கேரக்டர் எல்லாம் இல்லை. அழகான ஸ்டைலிஷான ஆண்ட்‌ரியாவை இதில் நீங்கப் பார்க்கலாம்.

உங்களுக்கு நீங்களே டப்பிங் பேசுவதில் உறுதியாக இருக்கிறீர்களாமே?

நாம் நடித்தால் நாம்தான் டப்பிங் பேச வேண்டும். அப்படி பேசினால்தான் ச‌ரியாக இருக்கும். எந்த உச்ச‌ரிப்பையும் கவனத்தில் வாங்கி சொந்தமாக பேசிடுவேன். ஆனால் மலையாளம் மட்டும் இன்னும் ச‌ரியாக வரவில்லை. மலையாளப் படங்களிலும் நடிக்கிறீர்களே...?

ஆமா, அங்கேயிருந்து நல்ல கேரக்டர்கள் வருது. இப்போதுகூட அன்னையும் ரசூலும்ங்கிற படத்தில் நடிக்கிறேன். இயக்குனர் ரா‌ஜிவ் ரவி. அனுராக் காஷ்யபின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாசிலோட மகன் பஹத் பாசில் ஹீரோ. இந்தமுறை எப்படியும் மலையாளத்தை படித்து டப்பிங் பேசிடுவேன்னு நினைக்கிறேன்.

தாப்‌ஸி, இலியானாவுக்கெல்லாம் டப்பிங் பேசறீங்களே...?

ஆண்ட்‌ரியான்னா இவ்வளவுதான்னு ஒரு இமே‌ஜில் சிக்க எனக்கு விருப்பமில்லை. என்னால் எல்லாமும் முடியும். இதுதான் சந்தோஷமாக இருக்கு.

சமீபத்தில் வெளியான அந்த முத்தக் காட்சி...?

18 மாதங்களுக்கு முன்னாடி நடந்த சம்பவம். அந்தப் படங்கள் வெளியானதில் எனக்கு கவலையில்லை. முக்கியத்துவம் இல்லாத அந்த ‌ரிலேஷன்ஷிப்பை மறுபடிமறுபடி பேசிக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget