ரஜினி, கமல் நடித்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தின் ரீமேக்கில் தனுஷ், சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார்களாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா ஆகியோரை வைத்து ஸ்ரீதர் எடுத்த சூப்பர் ஹிட் படம் இளமை ஊஞ்சல் ஆடுகிறது. 1978ல் ரிலீஸான இந்த படம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது. இந்நிலையில் இப்படத்தை தற்போது ரீமேக் செய்யவிருக்கின்றனர். ரீமேக்கில் ரஜினி கதாபாத்திரத்தில் அவரது மருமகன் தனுஷ், கமல் வேடத்தில் சிம்பு மற்றும்
ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளார்களாம். ஆனால் இது குறித்து நடிகர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. எலியும், பூனையுமாக இருந்த தனுஷும், சிம்புவும் திடீர் என்று நண்பர்களாகினர். சிம்பு தனது பிறந்தநாள் விழாவுக்கு தனுஷை அழைத்திருந்தார். இதன் மூலம் அவர்களுக்கிடையே இருந்த பகை மறைந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவிருக்கின்றனர். அவர்கள் இருவரும் தற்போது பிசியாக இருப்பதால் கையில் உள்ள படங்களை முதலில் முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார்கள் என்று தெரிகிறது.