புதுமுகங்கள் தேவை சினிமா விமர்சனம்

நடிகர்கள்: சிவாஜி தேவ், விஷ்ணு பிரியா, பானு
இசை: டிவின்ஸ்டியூன்ஸ்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்–ஆர்.சரவணன்
இயக்கம்: மனீஷ்பாபு
தயாரிப்பு: மனீஷ்பாபு

சிவாஜி தேவ், சினிமா உதவி டைரக்டர். திரைக்கதையை கையில் வைத்துக்கொண்டு டைரக்ஷன் வாய்ப்புக்காக அலைகிறார். அப்போது, பழைய நண்பன் ஆதிசை சந்திக்கிறார்.
அவர் மூலம் ராஜேஷ் யாதவ் அறிமுகம் ஆகிறார். விஷ்ணு பிரியாவின் காதல் கிடைக்கிறது.

உள்ளூர் தாதா எம்.எஸ்.பாஸ்கரிடம், ‘பைனான்ஸ்’ வாங்கி, ‘புதுமுகங்கள் தேவை’ என்ற படத்துக்கு பூஜை போடுகிறார்கள். படத்தில் நடிக்க ஆசைப்படுபவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். ‘நம்பர்–1’ கதாநாயகியான பிந்துதாரா (பானு)வை ஏமாற்றி, ‘கால்ஷீட்’ வாங்குகிறார்கள்.

பல சங்கடங்களை சந்தித்து, சமாளித்து, படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள். படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. அடுத்த படத்துக்கு அவர்கள் தயாராவது போல் படம் முடிகிறது.

டைரக்டர் ஆக வேண்டும் என்ற துடிப்புடன் அலையும் உதவி டைரக்டராக சிவாஜி தேவ். ராஜ்கபூரிடம் இவர் வாய்ப்பு கேட்டுப்போய் அவமானப்படுவது, மனநலம் பாதிக்கப்பட்ட ஜமீன்தாரை நம்பி ஏமாறுவது ஆகிய காட்சிகளில், சிவாஜி தேவி அனுதாபம் சம்பாதிக்கிறார்.

படப்பிடிப்பின்போது, கதாநாயகனின் அலட்சியத்தையும், அவமரியாதையையும் பார்த்து ஆவேசப்படுகிற காட்சியில், நிஜமான ஒரு புதுமுக டைரக்டரின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், முதன்முதலாக நடிகர் அவதாரம் எடுத்து இருக்கிறார். சிவாஜி தேவ் உணர்ச்சிவசப்பட்டு துவண்டு போகும்போதெல்லாம், ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டுகிற ஜீவனுள்ள பாத்திரமாக ராஜேஷ் யாதவ், மனதில் இடம்பிடிக்கிறார்.

பிரபல நடிகை பிந்துதாராவாக பானு, சிவாஜி தேவை காதலிக்கும் விஷ்ணு பிரியா, கவனம் ஈர்க்கிறார்கள்.

வள்ளிமுத்து அண்ணாச்சியாக எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய அறிமுகமே அமர்க்களம். அண்ணாச்சி வரும் காட்சிகளில் எல்லாம் காமெடி கலாட்டா.

ராஜேஷ் யாதவ்–ஆர்.சரவணன் ஒளிப்பதிவில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பசுமை பிரதேசங்கள், ஆச்சரியப்பட வைக்கின்றன. பாடல்கள் ஒன்று கூட மனதில் ஒட்டவில்லை.

மனீஷ்பாபு டைரக்டு செய்து இருக்கிறார். இடைவேளை வரை படம் மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்குப்பின் வரும் திடீர் திருப்பங்களும், படத்துக்குள் படம் என்ற யுக்தியுடன் கூடிய எதிர்பாராத கிளைமாக்சும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget