பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குங்குமப்பூ போட்டு பால் குடிக்கச் சொல்வார்கள். ஏன் தெரியுமா? ஏனெனில் குங்குமப்பூ போட்டு பால் குடித்தால், கருவில் இருக்கும் குழந்தை ரோஜாப்பூ நிறத்தில் பிறக்கும் என்பதால் தான். அத்தகைய குங்குமப்பூ சற்று விலைமதிப்புடையது. ஒரு கிராம் குங்குமப்பூ செய்வதற்கு நிறைய சாஃப்ரன் குரோகஸ் என்னும் பூக்கள் தேவையாக உள்ளது. இருப்பினும், இந்த குங்குமப்பூ அழகை அதிகரிக்க உமதவும் மிகவும் சிறப்பான பொருள். இப்போது இந்த குங்குமப்பூவை வைத்து எப்படி பேஸ் பேக் செய்வதென்று பார்ப்போமா!!!
குங்குமப்பூ ஃபேஸ் பேக்குகள்...
குங்குமப்பூ மற்றும் பால்: இந்த ஃபேஸ் பேக் மிகவும் எளிது. இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு குங்குமப்பூவை கொதிக்க வைத்த பாலுடன் கலந்து, காய வைத்து, பின் அதனை முகத்திற்கு தடவி, ஊற வைத்து, முகத்தை கழுவினால், முகம் நன்கு பொலிவோடு மின்னும். இதிலும் இந்த ஃபேஸ் பேக்கை தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்லது. இந்த ஃபேஸ் பேக் முகப்பருக்களை போக்கும்.
குங்குமப்பூ மற்றும் சந்தனப் பொடி: முகத்தை அழகாக்க உதவும் அழகுப் பொருட்களில் சந்தனப்பொடியும் ஒன்று. நிறைய ஃபேஸ் பேக்குகளில் சந்தனப் பொடியை மையமாக வைத்து தான் செய்யப்படுகிறது. இந்த சந்தனப் பொடி எண்ணெய் மற்றும் சென்சிட்டிவ் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இதனை குங்குமப்பூவுடன் சேர்த்து ஃபேஸ் பேக் செய்யும் போது, பழுப்பு நிற சருமம், முகப்பரு போன்றவை நீங்கிவிடும். அதற்கு குங்குமப்பூ மற்றும் சந்தனப் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் நன்கு மின்னும். வேண்டுமெனில் இதில் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
குங்குமப்பூ மற்றும் பப்பாளி: பப்பாளியில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே குங்குமப்பூவுடன் பப்பாளியை சேர்த்து ஃபேஸ் பேக் செய்தால் சூப்பராக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு பப்பாளியுடன், பால், தேன் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
குங்குமப்பூவுடன் பால் மற்றும் எண்ணெய்: முகத்திற்கு நிறத்தைக் கொடுப்பதற்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்ததாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள நிறத்தைக் கொடுக்கும் டோனின் அளவை குறைக்கும். இதற்கு ஒரு பௌலில் குங்குமப்பூ, பால், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியில் சிறிது பிரட் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மாஸ்க் போட்டால், சருமம் அழகாகும்.
குங்குமப்பூவுடன் தேன் மற்றும் பாதாம்: பாதாமை இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டில் குங்குமப்பூ மற்றும் வெதுவெதுப்பான பால், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை நீங்கி சருமம் பொலிவாகும்.