நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவை நோக்கி! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும்! எரிசக்தி ஹைடிரஜன் வாயு இருக்கிறதா வென்றும் துருவி ஆய்ந்திடும்! வருங் காலத்தில் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்வெளி விமானிகட்குத் தங்குமிடம் காண நிலா யாத்திரை புரியும் இந்த நீண்ட பயணம்!
“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும்
சுவாமி விவேகானந்தர் (1863-1902) பாரதத் துறவி. சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலகட்டத்தில் பாரத தேசம் பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்தது. அதற்கு முன்னரும் அன்னிய ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாட்சி பாரதத்தின் மீது கடுமையான பொருளாதாரச் சுரண்டலை ஏற்படுத்தியிருந்தது. பாரதத்தின் சமுதாய வாழ்க்கை தேக்க நிலை அடைந்திருந்தது. அத்துடன் அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரதத்தின் பண்பாட்டு, ஆன்மிகப் பாரம்பரியங்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். பாரதம் ஒரு இருண்ட பிரதேசமாகவும், பாரத சமுதாயம் பண்பாடற்ற சமுதாயமாகவும், ஐரோப்பியரைக் காட்டிலும் இழிந்த சமுதாயமாகவும் உலகத்துக்கும், பாரத மக்களுக்குமே காட்டப்பட்டன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) அறிவியலாளர். பிறப்பால் யூதர். அவர் வாழ்ந்த ஜெர்மனியில் யூத வெறுப்பு சுவாசித்த காற்றோடு கலந்திருந்தது. ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு அகதியாக வர