தடை கல்லையும் படி கல்லாக்கிய உலக நாயகன் கமலஹாசன்
ரசிகர்களும், மக்களும் காட்டிய அன்பால் தாம் பாடம் கற்றுக் கொண்டேன் என்று கூறிய நடிகர் கமல்ஹாசன், ரசிகர்கள், மக்களின் பேரன்புக்கு முன் தாம் ஒன்றுமே இல்லை என நெகிழ்ச்சியுடன் கூறினார். விஸ்வரூபம் படம் வெளியானதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.