தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார். இந்த மையத்தில், சம்பந்தப் பட்டவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று கார்த்திக், ராதா இணைந்து நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும், அதன் பிறகு அவர்கள் நடித்த பல படங்களுக்கும் பாடல்கள் எழுதிய வைரமுத்துவின் கைகள் இன்று அவர்களது மகன், மகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளது.
தமிழ் சினிமாவில் இது ஒரு அரிய நிகழ்வு. இரு தலைமுறையினருக்கு அதுவும், ஒரே நடிகர், நடிகைக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் ஒரே கவிஞர் பாடல்கள் எழுதுவது என்பது மிகவும் அரியதாகும்.
எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது.
எங்கள் வீட்டில், எனது மகன்களுக்குள் ஒருபோதும் பிரச்சினை வந்ததே இல்லை. இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அண்ணன் சொல்வதை தம்பி அப்படியே கேட்பான். புதுசாக ஏதாவது பொருள் வாங்கினால், அண்ணன் கையினால் பிரித்துக் கொடுத்த பிறகுதான் தம்பி எடுத்துக் கொள்வான். இப்போது மூத்தவன் பச்சைக்கொடி காட்டிய பிறகுதான் இளையவன் நடிக்க வருகிறான்
இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது.