28 மார்., 2011

ரேபிட்ஸேர் போன்ற பைல் ஷேரிங் தளங்களில் இருந்து பைல்களை தரவிரக்க ஒரு
சிறந்த தரவிரக்கி.  க்ளிக் செய்வது, காத்திருப்பது போன்று நேரத்தை வீணடிக்காமல்
வெறும் லிங்க்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தாலே போதும். மற்றதை இது பார்த்துக்கொள்ளும்.

முக்கிய அம்சங்கள்:
* பயன்படுத்த சுலபமானது.
* பல பைல் ஷேரிங் தளங்களை ஆதரிக்கிறது.
* தானாக plugin அப்டேட் ஆகும்.
* தானாக shutdown ஆகும் வசதி.
* proxy லிஸ்ட் கொண்டு தரவிரக்கம் செய்கிறது.
* மற்றவற்றை போல் இல்லாமல் இது நன்கு வேலை செய்கிறது.
* 230க்கும் அதிகமான பைல் ஷேரிங் தளங்களை ஆதரிக்கிறது.
* 2,000,000க்கும் அதிகமான பயனர்களின் திருப்தி அடைந்துள்ளனர்.

ஆதரிக்கும் தளங்கள்:

மார்ச் 14 (3.14) உலகமெங்கும் π தினம் கொண்டாடப்படுகிறது! கணக்கில் பல அற்புதமான எண்கள் உள்ளன பை, i, e என்று இவை ஒவ்வொன்றும் விசேடமானவை. இவற்றுக்குள்ளே πமிகவும் விசேடமானது. πகுறித்து சில உபயோகமான(மற்ற) தகவல்கள்:
1. எந்த ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்குமான விகிதம் எப்பொழுதும் π-ஆக இருக்கும்.
2. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பை தினத்தில் பிறந்தார் (14 மார்ச் 1879)
3. பையின் மதிப்பு பல காலங்களில் தோராயமாக அறியப்பட்டிருந்தது. ஆரம்பகால மதிப்பீடுகளில் சில:

3, 22/7, 333/106, 355/113, 103993/33102, ….
4. π-ந் மதிப்பு விகிதமுறா எண் (Irrational Number), அது ஒரு விஞ்சிய எண்ணும் கூட (Transcendental Number).
5. பல இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல π-ந் மதிப்பீட்டில் இந்தியர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது. பல “வேத கணித” புத்தகங்கள் சரடுவிடுவதை நம்பாதீர்கள். தீர்க்கமான வரலாற்று ஆராய்ச்சிகளின்படி இதை முதலில் அறிந்தவர்கள் பாபிலோனியர்களும் எகிப்தியர்களும்தான். இவர்கள் மதிப்பீட்டில் π= 3

Botanical name ZINGIBER OFFICINALEEnglish : Ginger
Tamil : Enchi
Malayalam : Enchi
Hindi : Aadhark

Mom’s popular home medicine serves two purposes both curative and universal remedy.
It is used for headache and cough. For headache dry Ginger to be taken, powder it and mix half tsp of the powder with water 
and heat it to make it a paste. Apply over the fore head. 
For cold and stomachache, fresh Ginger to be taken and extract juice, add one tsp of Ginger juice with honey and take thrice daily.

 
Botanical name ALOE BARBADENSISEnglish : Alovera 
Tamil : Kathazhaei
Malayalam : Katervazha 
Hindi : Kumari

Aloevera has the miraculous healing virtues of a medicinal 
plants and their practical application is within the reach of every one.

It is used for headache and constipation. Dry and powder the leaf pulp. 
Mix two pinches of the powder, with equal quantity of turmeric powder 
and dissolve in ¼ cup of water and drink.It is used for sore eyes. Slit 
the leaf lengthwise and expose pulp. Place the leaf on

Botanical name CELASTRUS PANICULATUS WILD
English : Black Oil Tree or Intellect Tree
Tamil : Valuluvai
Malayalam : Polulavam 
Hindi : Malkangni
It is an unique herbal and a natural
hypertension 
treatment plant. It is famed for it’s 
effects on 
brain cells and was traditionally used for 
sharpening  memory.

The oil extracted from its seed is used as memory and intellect promoter.
It is used  in stammering and mental retardation

Botanical name AZADIRACHTA INDICA
English : Neem
Tamil : Vaembu
Malayalam : Vaeppu
Hindi : Neem

Neem is benevolent to the environment and is mentioned as the pinnacle in the traditional Indian medical science. It is free or noble tree of India
used for many occasion and to solve many problems. It has antimicrobial and anti-inflammatory properties.
The infusion of the bark of the neem tree is used to cure headache and stomach ache. Crush about 3”x.3’ piece of bark and keep it in cup of hot water for 15 minutes and strain. Drink one cup of the infusion in the morning and evening for three days. It will prevent continuous headache and stomachache.
The leaf is used to cleanse the stomach from worms. Powder the leaf and take 1 tsp of neem leaf powder twice daily with milk or hot water for six to seven days.

 
Botanical name PUNICA GRANATUM
English : Pomegranate
Tamil : Mathulam
Malayalam : Mathulam or Urumambazham
Hindi : Dadhim

This plant is the first and the greatest bequeath of India noted for its highly nutritious and medicinal value l.
It is used for sore eyes. Make decotion from dried fruit cover, and apply 1 to 10 drops in both the eyes for three to four days.
For acidity take ½ cup of decotion with honey three times a day, for five to seven days.
For diarrheas take one cup of decotion twice daily on empty stomach.

1 Aaduthenapalai ____ aristolochia bracteolata
2 Aagayathamarai ____ Pistia stratiotes
3 Aalamaram ____ ficus-benghalensis
4 aamanakku ____ Ricinus communis
5 aanai nerunji ____ pedalium murex
6 aathondai ____ capparis zeylanica 
7 aavarai ____ Cassia auriculata
8 adathodai ____ Adhatoda vasica
9  adavi ____ Hibiscus furcatus   
10 agathi ____ Sesbania grandiflora
11 akkarakaram ____ anacyclus pyrethrum
12 alari ____ Nerium odorum 
13 alingil ____ Alangium salviifolium 
14 alukanni ____ Drosera burmannii-
15 ammanpacharisi ____ Euphorbia hirta, Euphorbiaceae

அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக்கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தினையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட்டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகிறது.

ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது

நம் வாழ்க்கையின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிட்டலாகி வருகின்றன. நினைவுகளைத் தாங்கி நிற்கும் படங்கள், போட்டோக்கள் ஆகியன இதில் முதலிடம் பெறுகின்றன. இவற்றை டிஜிட்டலாக்குவது மிக எளிமையான ஒரு பணியாகக் கம்ப்யூட்டர் மூலம் நிறைவேறி வருகிறது. முன்பெல்லாம் சித்திரங்கள் வரையப்பட்டு அதில் சிருங்கார வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது டிஜிட்டல் பைல்களாக படங்கள் எடுக்கப்பட்டு, அவற்றை நம் விருப்பங்களுக்கேற்ப நகாசு வேலைகளை மேற்கொள்கிறோம். படங்களையே மாற்றி அமைக்கிறோம். இந்த போக்கின் அடிப்படை வசதிகளை இங்கு காணலாம்.
முதலில் கம்ப்யூட்டரில் படங்கள் எந்த எந்த பார்மட்களில் உருவாக்கப்படுகின்றன என்று பார்க்கலாம். 
1. பி.எம்.பி. (BMP Bit Map) பைல் பார்மட்டாகும். இது முன்னாலேயே வரையறை செய்யப்பட்ட வகையில் உருவாக்கப்படும் பார்மட். இந்த வகையிலான பார்மட் படம் எப்படி டிஸ்பிளே செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில் அல்லாமல், படத்திற்கேற்ற வகையில் பிக்ஸெல் மற்றும் கலர் ஆழம் அமைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தன்மைகளில் இது உருவாகிறது. இதன் அனுகூலம் என்னவென்றால் இதனைப் பல சாப்ட்வேர் தொகுப்புகளில் நம் விருப்பப்படி பயன்படுத்தலாம். 

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய வுடனேயே, கூகுள் மிக அருமையான ஒரு வசதியைத் தன் தளத்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் தேடுபவர்கள் அறிந்து கொள்ள தகவல்களைத் தரலாம்.
அதே போல, ஒருவரைத் தொலைத்து விட்டுத் தேடுபவர், தான் இன்ன அடையாளம், பெயர் உள்ளவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன் எனத் தகவல் தரலாம். இதன் மூலம் இருவகையினரும் உதவி பெற்று, தொலைந்தவர்களுக்கு உதவலாம். 
தங்கள் நண்பர்களையும் உறவினர் களையும் தேடிய பலர், இந்த தளம் குறித்துக் கேள்விப் பட்டு உடனே தகவல்களைத் தரத் தொடங்கினார்கள். சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் நூறு பேரைப் பற்றிய தகவல்கள் வந்து விழுந்தன. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. சுனாமி தாக்கிய சென்டாய் என்ற பகுதியில் "Sato" என்ற பொதுப் பெயர் கொண்டவர்கள் அதிகம். இந்த பெயரில் மட்டும் பல நூற்றுக்கணக் கானவர்களைப் பற்றிய பதிவுகள் இருந்தன. 
குண்டுஸான் என்பவர், சென்டாய் பகுதியில் பல் மருத்துவராகப் பணியாற்றிய அகி சாட்டோ என்பவரைத் தேடித் தகவல் கொடுத்து, புகைப் படத்தினையும் வெளியிட்டிருந்தார். பூகம்பத்திற்குப் பின், ஆனால் சுனாமி அலை வரும் முன் அவருடன் பேசியதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அவர் செய்தியைப் படிக்க பரிதாபமாக இருந்தது. இன்னொரு செய்தியில், பாட்டிமா சாட்டோ என்பவர், அம்மா நலம். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என்று எழுதி இருந்தார். படிக்க நமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 
ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இந்த தளம் இயங்கியது. தள முகவரி: http://japan.personfinder. appspot.com/?lang=en. இந்த அரிய சேவையினை அனைத்துப் பிரிவினரும் பாராட்டினார்கள். பலரும் பயன்படுத்தி உதவி பெற்றனர்.
ஜப்பானில் இயங்கும் அகில உலக செஞ்சிலுவை சங்கத்தின் கிளையும் இதே போல ஒரு தளத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தது. 


சிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர்பிரைசஸ் நிறுவனம், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் நூல்களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல மாடல்களாக, இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை யும், டேப்ளட் பிசிக்களையும் வெளியிட்டுள்ளது. 
நூல்களைப் படிப்பதில் ஒரு டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வருகிறது. அச்சில் மட்டுமின்றி, நூல்கள் இப்போது டிஜிட்டலாகவும் இணைய வலைகளில் வெளியாகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றை டவுண்லோட் செய்து இ-ரீடர் என்னும் சாதனத்தில் பதித்துப் படிக்கலாம். பல நூல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. கைக்கு அடக்கமாக இயங்கும் இந்த சாதனத்தில் பல்லாயிரக் கணக்கான நூல்களைப் பதித்து வைத்து, எங்கும் எளிதாக எடுத்துச் சென்று, தேவைப்படும்போது படிக்கலாம். இதனால் ஒரு நூலகமே நம் கைகளுக்குள் அடங்கிவிடுகிறது. இந்த நூலகத்தில் நம் விருப்பப்படி நூல்களைப் புதிதாகச் சேர்க்கலாம். படித்தவற்றை நீக்கி, இன்னொரு இடத்தில் பத்திரப்படுத்தலாம். 
அச்சில் நூல்களைப் படிக்கையில், அதன் பக்கங்களில், உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை எழுதி வைக்கிறீர்களா! அப்படியானல் இதில் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு, இதிலும் பக்கங்களில் கருத்துக்களை, மிக எளிமையாகவும், வேகமாகவும் எழுத வசதிகள் செய்து தரப்படுகின்றன. 

இந்த சாதனங்கள் அனைத்தும் 6 மற்றும் 9 அங்குல திரைகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. கிரே கலரிலும், பல வண்ணங்கள் கொண்ட டிஸ்பிளே திரைகளுடனும் உள்ளன. வழக்கமான திரை, தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, 3ஜி மற்றும் வை-பி தொழில் நுட்பம் எனத் தேவைக்கேற்ற வகையிலும், வாங்குபவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நிலையிலும் இவை வடிவமைக்கப்பட்டு விற்பனை யாகின்றன. சில மாடல்கள் எம்பி3 ஆடியோ பைல்களையும் இயக்கு கின்றன. குறைந்த பட்சம் 2 ஜிபி மெமரி தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள வசதியும் உண்டு. இந்த சாதனங்களின் தொடக்க விலை ரூ.8,999.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இ-டைரியில் பேப்பர் நோட்புக், டிஜிட்டல் பேனா மற்றும் பிளாஷ் மெமரி கொண்ட ஒரு சிறிய சாதனம் உள்ளது. தாளில்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவுஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம்தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட்கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணைந்த ஒரு கட்டளை ஆகும். 
கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக்கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை மாற்றி அமைக்கும் கீ. ஆல்ட், ஷிப்ட், கண்ட்ரோல் (Alt, Shift, Ctrl) கீகள் இத்தகைய கீகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் எழுத்து அல்லது எண்களுக்கான கீகள் இணைந்து செயல்பட்டு ஷார்ட் கட் கீ தொகுப்பினைத் தருகின்றன. இந்த தொகுப்பினைப் பயன்படுத்துகையில் கம்ப்யூட்டரில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
பல ஷார்ட்கட் கீகள் உலகெங்கும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பொதுவானதாக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக கண்ட்ரோல் + சி (Ctrl + C) காப்பி செய்வதற்கும், கண்ட்ரோல் + வி (Ctrl+V) பேஸ்ட் செய்வதற்கும் கண்ட்ரோல் + எஸ் (Ctrl+S) சேவ் செய்வதற்கும் அனைத்து நாடுகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ளன. சில

"சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.
1. முதலில் நீங்கள் அந்த புரோகிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து அமைக்கப்போகிறீர்களா என்று சாய்ஸ் கேட்கப்படும். விஸார்ட் மூலம் எழுதப் போகிறேன் என்பதனை செலக்ட் செய்திடவும். இதில் பல வசதிகள் தரப்படும்.
2. அடுத்து பெரும்பாலும் என்ன வகை சிடியில் எழுதப்போகிறீர்கள் என்று கேட்கப்படும். அதாவது ஆடியோவா? அல்லது வீடியோ சிடியா? என்று கேட்கப்படும். தகவல்களைப் பதிந்து வைக்க விரும்பினால் data என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்களி டம் உள்ள மற்ற ஆடியோ சிடிக்களைப் பயன்படுத்தி புதிய ஆடியோ சிடி ஒன்று தயாரிப்பதாக இருந்தால் music என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மியூசிக் சிடி மற்றும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய பைல்கள் என்றால் உங்களுக்கு CDR வகை சிடிக்கள் தான் சரியான தேர்வாக இருக்கும். உங்களிடம் CDRW வகை சிடி இருந்தால் அதனை டேட்டா எழுதப் பயன்படுத்தவும். இதற்குக் காரணம் சில மியூசிக் பிளேயர்கள் CDRW வகை சிடிக்களை ஏற்றுக் கொள்ளாது என்பதே.

கம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.
முதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம். 

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget