இன்றைய தேதியில் முக்கியமான பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. மாற்றான், விஸ்வரூபம், சுந்தரபாண்டியன், பரதேசி, தாண்டவம், முகமூடி, கும்கி போன்றவை இவற்றில் சில. இதில் முகமூடி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரதேசி அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் தெரிவித்திருக்கிறார்கள். மாற்றான் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. இப்போது ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பிரபுதேவாவை பிரிந்த பிறகு, சோர்ந்து போகாமல், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிக்கும் வேகத்தோடு இரண்டாவது இன்னிங்சுக்கு ரெடியாகி விட்டார், நயன்தாரா. திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில், வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித்தள்ளிய நயன்தாரா, தற்போது தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை, தானே தொடர்புக் கொண்டு வாய்ப்பு வேட்டையாடுகிறார். இதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது. அஜீத்தின் புதிய படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இதுதவிர, தெலுங்கு
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ஜூஹி ஜாவ்லாவும், தற்போதைய ஹீரோயின் சோனாக்ஷி சின்காவும், விரைவில் வெளியாக உள்ள ஒரு இந்தி படத்தில், இணைந்து நடிக்கின்றனர். இருவருக்குமே, இந்த படத்தில் முக்கிய வேடம். இதன் படப்பிடிப்பு, சமீபத்தில் பஞ்சாபில் நடந்தது. வெளிப்புறப் படப்பிடிப்புகளில், நடிகர், நடிகைகள் தங்குவதற்கான கேரவன்கள், போதிய அளவில் கிடைக்காததால், ஜூஹி, சோனாக்ஷி ஆகிய இருவருக்கும், ஒரே கேரவனை ஒதுக்கி கொடுத்தனர். ஆரம்பத்தில் இருவருமே,