பெரிய முயற்சி இல்லாமலேயே பெரிய ஆளாய் ஆகிவிடும் ராசி கார்த்தியுடையது. பொதுவாக தீபாவளி போன்ற பெரிய விசேஷ நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும் அல்லது சோலோவாக விளையாடும். ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி யோடு (தலைப்பு உறுதியில்லை) மோதுவது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன். விஜய் - அஜீத், விஜய் - சூர்யா என்பது போய், இப்போது விஜய் - கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.
லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் சரிவில் இருந்த அவரது தமிழ், தெலுங்கு சினிமா மார்க்கெட் தடாலடியாக உயர்ந்து உச்சாணிக்கு சென்றது. இதன்காரணமாக தெலுங்கு படம் இயக்கும் வாய்ப்பினை பெற்ற லாரன்ஸ, அடுத்து காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இந்த நிலையில், காஞ்சனா இரண்டாம் பாகத்திலும் லட்சுமிராயே நடிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்திப் படத்தில் நடிப்பது எப்படி நடிகைகளின் லட்சியமோ அதற்கு சற்றும் குறையாத ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். பணம், புகழ் இரண்டும் இந்தியில் அமோகம். ஷங்கர் தனது முதல்வன் படத்தை அனில்கபூரை வைத்து நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் ப்ளாப். எந்திரன் தமிழ், இந்தி இரு மொழிகளில் வெளியாகி இந்தியிலும் வெற்றி கண்டது. இதுதான் ஷங்கரின் இந்தி பெல்ட் பற்றிய சுருக். வரலாறு.
கள்ளத்துப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதால் துப்பாக்கி என்ற பெயரில் படத்தை அனுமதிக்கக் கூடாது. மேலும் கள்ளத்துப்பாக்கி எழுத்து வடிவில் துப்பாக்கி எழுத்தை அமைத்திருக்கிறார்கள். இதுதான் துப்பாக்கி மீது கள்ளத்துப்பாக்கி டீம் சுமத்தியிருக்கும் குற்றச்சாற்று. துப்பாக்கி பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்தலாமா கூடாதா என்பதற்கான விசாரணை ஏழாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.