20 மார்., 2011

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.
இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…
வெந்தயம்: 
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.
எள்ளுச்செடி: 
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும்

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது. என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள் இதோ சில டிப்ஸ்…

* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.
* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.
* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.
* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.
* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.
* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.
* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.
* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.


தேங்காய் அரைத்த குழம்பு
வெண்டை, பூசணி, சௌசௌ, முருங்கைக்காய் இவற்றுள் ஏ தேனும் ஒன்றை உபயோகிக்கலாம். காய் துண்டுகளை புளியில் வேக வைத்து கெள்ளவும், சிவப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை சிவக்க வறுத்து, தேங்காயுடன் சேர்த்து அரைத்து வெந்த காயுடன் கலக்கவும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். (குழம்பை மிக அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம்)

புளிசேரி
தேங்காயுடன் பச்சைமிளகாய், சிறு துண்டு, இஞ்சி, சீரகம் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து புளித்த மோரில் கலக்கவும். பூசணி அல்லது வெண்டைக்காய்த் துண்டுகளை உப்பு சேர்த்து வேக வைத்து, ஆறிய பின் அரைத்து விழுதைக் கலக்கவும். சாப்பிடுவதற்கு சற்று முன்பாக, குறைந்த சூட்டில் பொங்கும் வரை வைத்து இறக்கவும், (கொதிக்க வைத்தால் மோர் பிரிந்து விடும்)
குறிப்பு: இஞ்சி சேர்த்தும், சேர்க்காமலும் செய்யலாம். சளி, ஜுரம் உள்ள போது தயிர் சேர்க்க கூடாது. சாததத்தில் புளிசேரியை சேர்த்து சாப்பிடலாம்.
புளிக்குழம்பு
பூசணி அல்து பரங்கித் துண்டுகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். சாம்பார் பொடியை சேர்த்து நன்கு கொதித்த பின் பொரி கடலைமாவு சற்று நீரில் கரைத்து, குழம்புடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கறிவேப்பிலை அல்லது கொத்துமல்லி சேர்க்கவும். கடுகு தாளிக்கவும்.


கதம்ப குழம்பு
ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் தனியா, ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், வெந்தயம், சுக்குப்பொடி, கடுகு, இவற்றை வாணலியில் வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ஆறு பூண்டு பற்கள் ஆகியவற்றை கடுகு தாளிப்பு செய்து வதக்கி கொள்ளவும். புளிக்கரைசலில் காரப்பொடி, மஞ்சள் தூ, உப்பு சேர்தது வதக்கியவற்றை போட்டு குழம்பை கொதிக்கவிடவும். நன்றாக கொதித்தவுடன் பொடி செய்ததை போட்டு கறிவேப்பிலை சேர்த்து திக்காக இறக்கவும். சுவையான கதம்ப குழம்பு ரெடி. தோசைக்கும், சாதத்துக்கும் தொட்டு கொள்ள ஏற்றது. தயிர் சாதத்துக்கும் சூப்பராக இருக்கும்

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

செய்முறை

* ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சுறாவை வேக விடவும்.
* சுறா வெந்த பிறகு தோல், முள் நீக்கி விடவும், சதைப் பகுதியை மட்டும் உதிரி உதிரியாகச் செய்து

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகளிகள் பட்டணங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளது. நகர் பேசிகளின் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதில் இன்று அது நாடங்கும் ஸகஜமான பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவங்கள்... இங்கு நகர்தொலைதொடர்பின் தொழில்நுட்பங்களை சந்தித்து ஆராய்வோம்.
முதலாக சந்திப்போம் CDMA என்றழைக்கப்படுகிற குறியீடு பிரிப்பு பன்னணுகல், அதாவது Code Division Multiple Access. வானொலியை சுருதிகூட்டும் போது ஒரே அலைவெண்ணில் இரண்டு நிலையங்களில் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்கலாம். இதற்கு காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் கிறிகைகள் (radio signals) ஒரே அலைவெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகிறன. CDMAயில் இந்த குறுக்கிடுதல் நம்மை அறியாமல் ஏற்படுகிறது. CDMA முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு (digital voiced data) ஒரு பரவல் குறியீடு (spreading code) மூலம் அலைவெண் கற்றையகலம் (frequency bandwidth) முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலைவெண்ணில் பரவப்பட்ட அழைப்புகள் ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். CDMA வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகள் மட்டும்தான் கருவிகளில் அதே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதெனும் வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அவர் முதல்கூறப்பட்ட அழைப்பு சிறுதளவும் உணரமாட்டார்கள். இது மூலம் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இதற்கு பரவல் நிறமாலை தொழில்நுட்பம் (spread spectrum technology) என்று அழைக்கப்படுகிறது.
CDMA தொழில்நுட்பம் ஒப்புகையில் GSM என கூறப்படும் ஸகல நகர்தொலைதொடர்பு முறைமை, அதாவது Global System for Mobile Communication. GSM எனப்படுவது காலப்பிரிப்பு பன்னணுகல் (Time Division Multiple Access) முறையில் அழைப்புகள் வலையத்தை பகிர்க்கின்றன. GSM மூலம் குரல் தரவுகள் குறுகப்பட்டு (compressed voice data) அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது.
ஒரு கம்பியில்லா முறைமையில் (Wireless Network) பல உறுப்புக்கள் உள்ளன. முதலில் இருப்பது நகர் நிலையம் அதாவது Mobile Station. இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி (mobile phone). இது வானலைச் செலுத்துப்பெறுவி (radio transceiver), காட்சி (display), இலக்கக்குறிகைச்

 குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது. 
ஆனால் சில அம்மாக்களும், அம்மம்மாக்களும் 'தாய் சாப்பிடுகிறாள் இல்லை, களைச்சுப் போனாள். மாவைக் கரைச்சுக் கொடு' என்று தூண்டாமலும் இல்லை. 
தன் அழகு கெட்டுவிடும் எனப் பால் கொடுப்பதில்லை எனச் சிலர் தாய்மாரை நக்கல் அடிப்பதும் உண்டு.
எவ்வாறாயினும் இவை யாவும் தவறான கருத்துக்களாகும். குழந்தைக்கு ஏற்றது தாய்ப் பால் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது.
தாயின் பிற்கால ஆரோக்கியத்திற்கும் பாலூட்டுதல் அவசியமானதே.
எல்லாத் தாய்மாரும் போலவே நீங்களும்! 
உங்கள் குழந்தை பிறந்த உடனேயே அதற்கான உணவு உங்களிடம் தயாராக இருக்கிறது. 
இயற்கை தந்த வரம் அது. தாய்ப்பால். 
அதைக் குழந்தைக்குக் கொடுக்கத் தவறாதீர்கள்.
நீடித்த உறவு

இஞ்சிச் சம்பல், இஞ்சி தேநீர் போன்றவை நாக்கைச் சப்புக் கொட்டிச் சாப்பிடுபவர்கள் பலரின் தேர்வாக இருக்கிறது. பிட்ஸா ஹட்டின் ஹார்லிக் பிரட்டின் (GARLIC BREAD) சுவை பிரசித்தம் அல்லவா? இஞ்சி போடாத இறைச்சிக் கறி சுவைக்கு உதவாது என்பார்கள் பலர்.
சமிபாடின்மை என்றால் "இஞ்சிச் சோடா கொண்டுவா" என்பார்கள். எமது நாளாந்த பாவனைகள் இவ்வாறிருக்க, சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளில் இஞ்சியின் பயன்பாடு அதிகம். தடிமன், காய்ச்சல், பசியின்மை, சமிபாட்டுப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு இஞ்சி தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில் இஞ்சிக்கு மருத்துவக் குணங்கள் உள்ளனவா? இருப்பின் அவை விஞ்ஞான பூர்வமாக ஏற்கப்பட்ட கருத்துகளா? அமெரிக்கன் AMERICAN FAMILY PHYSICIAN 2007; 75: 1689-91 இதழில் இஞ்சியின் மருத்துவப் பயன்பாடு பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ப்ப கால மசக்கையின் போது சத்தி, ஓங்காளம் போன்றவை பெருந்தொல்லை கொடுப்பதுண்டு. இந் நேரத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு மருந்துகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேவையற்ற மருந்துகள் கொடுப்பதற்கு மருத்துவர்கள் தயங்குவதுண்டு. இத்தகையவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் இருப்பதை விட இஞ்சி கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என 675 பேரைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில் நான்கு ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன. அவர்களுக்கு விற்றமின் ஆ6 கொடுக்கும் அதே அளவு பலனை இஞ்சியும் கொடுக்கும் என வேறு ஓர் ஆய்வு கூறுகின்றது.
சத்திர சிகிச்சைகளுக்குப் பின்னர் பலருக்கும் ஓங்காளமும் வாந்தியும் ஏற்படுவதுண்டு. மருந்தற்ற மாத்திரைகளை ( placbo)விட இஞ்சியானது அவர்களது அறிகுறிகளைக் குறைக்கும் என மற்றுமொரு ஆய்வு கூறுகிறது.
யாழ்.- திருமலை கப்பல் பிரயாணிகள் பலர் கப்பலில் வாந்தி வருவதை நினைத்துப் பயந்தே பிரயாணம் வேண்டாம் என அலறி ஓடுகிறார்கள். பிரயாணங்களின் போது கப்பல் அடங்கலாக வாந்தி வருவதை ஆங்கிலத்தில் motion sickness என்பார்கள். அத்தகைய வாந்திக்கு dimenhydrinate என்ற மருந்தும் பாவனையில் உள்ளது. இஞ்சியானது அந்த மருந்தை விட மேலான ஆற்றல் உள்ளது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
ரூமற்வொயிட் மூட்டு வாதம் (Rheumatoid arthiritis) மற்றும் முழங்கால் எலும்புத் தேய்வு வாதம் (Osteoarthiritis of knee) ஆகியவற்றுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும் எனத் தெரிகிறது.
சரி எவ்வளவு இஞ்சி சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் 250 மி.கி. முதல் 1 கிராம் அளவிலான காய வைத்து தூள் செய்யப்பட்ட இஞ்சியை கூட்டுக் குளிசையையாக தினமும் ஒன்று முதல் நான்கு தடவைகள் கொடுத்தே செய்யப்பட்டன. ஆழ் கடலில் கப்பலில் செல்லும் மாலுமிகளுக்கு வாந்தியைத் தடுக்க 1 கிராம் தினமும் நான்கு தடவைகள் கொடுக்கப்பட்டன.
பக்கவிளைவுகள் கிடையாதா என்பது சிலரது சந்தேகமாக இருக்கும். நெஞ்செரிவு, வாய் எரிவு, வயிற்றோட்டம் போன்ற பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். ஆயினும் குருதி உறைதல் தொடர்பான பக்க விளைவு வோபெரின் ( Warfarin) உபயோகிக்கும் நோயாளர்களுக்கு பிரச்சினை ஆகலாம். அத்தகையவர்கள் அதிகமாக இஞ்சி உட்கொண்டால் INR இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது உசிதமானது.
ஒரு பிற்குறிப்பு; இஞ்சிக் கிழங்கு என்று சொல்கிறோம் . உண்மையில் இது சரிந்த பாட்டில் கிடக்கும் தண்டாகும். இதிலிருந்து வேர் கீழ் நோக்கி வளர்கிறது. இது ஆசியா போன்ற உலர் வலய நாடுகளில் வளரும் தாவரமாகும். மருத்துவக் குணங்கள் உள்ள போதும் அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான திணைக்களம் இஞ்சியை உணவுத் தயாரிப்பில் உபயோகப்படுத்தும் பொருளாகவே வகைப்படுத்துகிறதே அன்றி மருந்தாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
நான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.
இப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.
அந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்ந்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.
அதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும்  உண்மையே.
மற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,
நட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,
தாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.
பொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.
நாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது

அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
 * வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
 * பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.
 அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.
 * அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.
 * ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
 * சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில்

நீங்கள் முதலில் NERO மென்பொருளை   விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்ளவும்.NERO வை OPEN செய்துகொள்ளவும்.NERO மென்பொருளில் BURN IMAGE TO DISC என்ற OPITION னை CLICK செய்யவும்.

 

NERO மென்பொருளை விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்ளவும் பின் NERO மென்பொருளை OPEN செய்துகொள்ளவும் 
நீங்கள் ISO FILE ஆக மாற்ற நினைக்கும் அந்த BOOTABLE இயங்குதளம் CD ஐ CD DRIVE இல் உள்ளிடவும்.

NERO மென்பொருளில் COPY DISC என்ற OPTION CLICK செய்யவும்.பொதுவாக COPY என்ற OPTION DISC உள்ள DATA வை மற்றொரு DISC ற்க்கு மாற்ற(அதாவது COPY செய்ய) பயன்படுகிறது.ஆனால் நாம் இந்த COPY OPTION ஐ BOOTABLE  FILE ஐ ISO FILE ஆக மாற்றுவதற்க்கு பயன்படுத்துகிறோம்
நாம் அந்த COPY OPTION ஐ CLICK செய்த பிறகு நீங்கள் அந்த திரையில் IMAGE FILE: என்பதற்க்கு நேராக உள்ள DESTINATION PATH ஐ DESKTOP ற்க்கு 
  மாற்றிக்கொள்ளவும்.(இதை படத்தில் காண்க) பின்பு அந்த திரையில் BURN BUTTON ஐ CLICK செய்யவும்.BURN  PROCESS முடிந்தவுடன் CD DRIVE  இன் TRAY வெளியில்வரும்(EJECT).இதில் CD எடுத்துவிட்டு CD DRIVE இன் TRAY ஐ உள்ளே தள்ளக்கூடாது.
அந்த TRAY ஐ தள்ளாமல் நீங்கள் நேரடியாக DESKTOP இல் உள்ள அந்த TEMP FILE(ISO) COPY செய்து MY DOCUMENT இல் PASTE  செய்து விடவும்.வேறு இடத்தில்(MY DOCUMENT) PASTE செய்த பிறகுதான் அந்த CD DRIVE யின்  TRAY  யை உள்ளே தள்ளவும்.நீங்கள் PASTE செய்த பிறகுதான் DESKTOP பில் உள்ள அந்த TEMP FILE  ISO FILE ளாக மாறும் .
நீங்கள்  PASTE செய்த இடத்தில்(MY DOCUMENT) அந்த இயங்குதளத்தின்  ISO FILE லை பார்க்கலாம்

MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது.
இது WINDOWS 7 னை விட வேகமாகவும் ,பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது

  விண்டோஸ் பயனாளர்க்கு புதிய வசதிகளை அறிமுகம் ஆகிறது.

விண்டோஸ் 8 128 BIT என்று எதிர்பார்க்க படுகிறது .

INTEL நிறுவனத்தின் உதவியுடன்  USB 3.0 இதில்  அறிமுகம்   செய்யப்படுகிறது. 
  
USB 2.0 வில்  அதிக  பச்சமாக  480 MBits/s. USB 3.0 வில்  அதிக  பச்சமாக  5 Gbits/S .

 விண்டோஸ் 7  உள்ள குறைகளை கண்டறிந்து  விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது .

நாம் கணினியை ON செய்யும் பொழுது,
             BIOS ஆனது முதலில் BOOT DEVICE யை CHECK செய்யும்.அது  இயங்குதளம்  எந்த DEVICE  உள்ளது  என்று பார்க்கும் அது HARDDISK ஆக இருந்தால் HARDDISK கில்உள்ள முதலில் SECTOR ரில் MASTER BOOT RECORD (MBR) உள்ள இயங்குதளத்தின் BOOT LOADER ரை RAM வில் நிறுவிட்டு BIOS நிங்கிவிடும்.
அதன் பிறகு RAM ஆனது  BOOT LOADER ரை  இயக்கும் பொழுது HARDDISK வில் உள்ள இயங்குதளம் LOAD ஆக ஆரம்பிக்கும் .
பிறகு இயங்குதளத்தில் USERNAME மற்றும் PASSWORD கேட்கும் .

கம்பில்லா தொடர்ப்பு வசதி -WIRELESS )
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமாக ஆகிவிட்டது  .இதில் WIRELESS சின் பங்கு அதிகரித்து.வருகிறது.
 
WIRELESS   எங்கெல்லாம்  இதன்னுடய பங்கு   உள்ளது என்று பார்ப்போம்.
அவை,
  • WIRELESS BROADCASTING
  • CELLULAR BROADCASTING
  • BLUETOOTH TECHNOLOGY
  • WIFI
  • SHORT RANGE POINT TO POINT COMMUNICATION.

நாம் WIRELESS BROADCASTING பற்றி பார்ப்போம்.இந்த BROADCASTING இல், 
  1. TELEVISION BROADCASTING
  2. RADIO BROADCASTING
  3. AMATEUR (HAM)RADIO
  4. OTHER DEDICATED RADIO BROADCASTING NETWORK
CELLULAR TELEPHONY :

இயங்குதளம் நிறுவுவது முன் எப்போழுதும் கடைப்படிக்க வேண்டிய வலிமுறைகள்:

பேக் அப்:(BACKUP FOR ENTIRE HARD DISK):
நாம்  இயங்குதளம் நிறுவும்போது நமக்கு தெரியாமல் சிறு தவறு ஏற்ப்படலாம்.அப்போழுது நாம் வைத்து உள்ள தகவல்கள் இழக்க நேரிடும்.

அதனால் HARDDISK முழுவதும் BACKUP எடுத்துக்கொள்ளவும்.

LAPTOP ஆக இருந்தால் அதில் CHARGE முழுவதும் ஏற்றிக்கொள்ளவும்.

நம்முடைய PC அல்லது LAPTOP பற்றிய விவரங்கள்



நம்முடைய PC அல்லது LAPTOP HARD DISK இல் - C: ,D: ,E: ,F: இருப்பதாக வைத்துக் கொள்ளவும்:

"நாம் DOUBLE BOOTING செய்யப்போவதாக நிணைத்துக் கொள்ளவும்.WINDOWS C:(சி:) னில்

  1.  மடிகணினியை  பயணம் செய்யும் போது  அதிக நேரம் பயன்படுத்த கூடாது .
  2.  POWER  DISCHARGE  ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும் .
  3. ORINIGAL CHARGER  ரை  பயன்படுத்துவது நல்லது. 
  4. சிறு பிரச்சனை ஏற்ப்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு .
  5. கணினியில் இருந்து   வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா !அதனால் மடி கணினியை   சமம்மான இடத்தில் 
    பயன்படுத்தவேண்டும் .
  6. அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது.(தோள் பாதிப்பு வரலாம்)
  7. மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்பது இந்தியர்களின் தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது.
இவை இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு. வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும் புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை

ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.
 தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்வது மற்றும் புகைப்பழக்கம் இல்லாமை ஆகிய நான்கினையும் பின்பற்றினால், ஆயுட்காலத்தில் 14 ஆண்டுகளைக் கூட்டலாம் என்று இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொண்ட மருத்துவ ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
 45 வயது முதல் 79 வயது வரையிலான 20 ஆயிரம் பேர்களைக் கொண்டு, இந்த ஆய்வு 1993-ல் இருந்து 2006 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.
சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.
இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.
பெரும்பாலும் 1 முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.
இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சினைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.

உயிரினங்களுக்கும் ஆக்ஸிஜன் அதாவது பிராணவாயுவை தருவது மரங்களே. மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம்.  மரங்கள் பிராண வாயுவை மட்டும் தரவில்லை, அவன் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. 
மரங்களின் பட்டை, வேர், இலை, பூ, காய், கனி அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது. எல்லா மரங்களும் ஏதாவது ஒரு வகையில் மனிதனுக்கு பயன்படுகிறது. அந்த வரிசையில் பூவரசு மரத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
பூவரசு
பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால் இதன் பெயர் பூவரசு என்று அழைக்கப்படுகிறது. கிராமங்களில் வீடுகளில் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதை நாம் காணலாம். பூவரச மரம் மருத்துவப் பயன் கொண்ட மரமாகும். நூறாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.
இது இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது. இதன் இலை, பூ, காய், விதை பட்டை என அனைத்து பாகங்களும் பயன்கொண்டவை.
Tamil - Poovarasam
English - Portia tree
Sanskrit - Gardha bhanda
Telugu - Gangaravi
Botanical name - Thespesia populnea
பொதுவாக பூவரசம் மரம் நான்கு வகைப்படும். இதில் வருடம் முழுவதும் பூத்துக் காய்க்கும் மரம்தான் நாட்டுப் பூவரசு.

1. மூலிகையின் பெயர் :- நாயுருவி.
2. தாவரப்பெயர் :- ACHYRANTHES ASPERA.
3. தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை.
5. வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.
6. வளரியல்பு :- நாயுருவியின் பிறப்பிடம் சைனா. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள் இருக்கும். விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்களின் துணிகள் மீது ஒட்டிக்கொண்டு சென்று வேறு இடங்களில் விழுந்து முழைக்கும். எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும் இதற்குண்டு. புதன் மூலிகை என்பர். அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். செந்நாயுருவியே தெய்வீக ஆற்றல் பெற்றது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
7. மருத்துவப் பயன்கள் :- நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.
நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.
நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.
கதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-

  • 1. மூலிகையின் பெயர் :- கோவை.
2. தாவரப்பெயர் :- COCCINIA INDICA.
3. தாவரக் குடும்பம் :- CUCURBITACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய் மற்றும் கிழங்கு.
5. வளரியல்பு :- கோவைக் கொடி நன்கு படர்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சேர்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படர்ந்து தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலர்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வரியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிரமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவர் புலவர்கள். வேர் கிழங்காக வளரும்.
6. மருத்துவப்பயன்கள் :- கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar)

சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர்



பெங்களூரில் செயல்பட்டுவரும் சுவாமி விவேகானந்தா யோக ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் ஆரோக்யா சித்த மருத்துவமனையும் இணைந்து “நீரிழிவை யோகத்தால் கட் டுப்படுத்தலாம்“ என்ற கருத்தரங்கத்தை ஜனவரி 23ம் தேதியன்று சென்னை ஃப்லிம் சேம்பர் அரங்கத்தில் நடத்தின.
இருதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.தணிகாசலம் விழாவை தொடங்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். “எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதே நமது உடனடி தேவை” என்று தனது உரையில் குறிப்பிட்டார் தணிகாசலம்.\

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கினைப்பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். மாணிக்கவாசகம் உரையாற்றினார். “நீரிழிவில்  இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் சுரக்காமல் போவதை முதல் வகை என்கிறோம். இதை யோகாவால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனால் இரண்டாம்  வகை நீரிழிவை தொடர்ந்து யோகப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். தேசிய சித்த மருத்துவம் ஒவ்வொரு புதன் கிழமையும்  நோயாளிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் யோகப்பயிற்சியை நடத்திவருகிறது. இரண்டாம் வகை நீரிழிவை எண்பது சதவீதம் முன்கூட்டியே தடுக்க முடியம் என் பதால் வருமுன் காத்துக்கொள்வதே சிறந்த மருத்துவம் ஆகும்“ என்றார் மாணிக்கவாசகம்.

தோப்பா போட்டுக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது. அமெரிக்காவில் அறிவியல் ஆய்வாளர்கள் வழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யும் சூத்திரத்தைக் கண்டுப்பிடித்துள்ளனர். எலியில் நடத்திய ஒரு ஆய்வில் ஐந்தே நாள்களில் வழுக்கை எலிக்கு முடி வளர்ச் செய்து சாதனை செய்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் இந்த ஆய்வை தொடர்ந்து நடத்தியதில் இதனை மீண்டும் மீண்டும் உறுதிச் செய்யக் கூடியதாக இருந்ததாம்.இந்த ஆய்வின் வெற்றியால் இனி மனிதர்களுக்கும் வழுக்கைத் தலையில் முடி வளர வைக்க முடியும் என UCLA பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசியர் மில்லியன் முலுகெட்டா கூறியுள்ளார்

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget