இடி இடிக்கும் போது காமா கதிர்கள் வெளிப்படும்: கண்டறிந்தனர் நாசா ஆய்வாளர்கள்
சாதாரணமாக மின்னல் தோன்றும் போது இடி இடிப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. அந்த சமயத்தில் வானில் ஆன்டிமேட்டர் துகள்கள் நிறைந்த மேகக்கூட்டம் தோன்றுவது போன்ற நிகழ்வு காணப்படுகிறது. இதனை ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வழக்கமான அணுக்களில் இருந்து வேறுபட்டு நெகட்டிவ் உட்கரு பகுதியும், பாசிட்டிவ் தன்மை வாய்ந்த எலெக்ட்ரான் துகள்களும் கொண்டது ஆன்டிமேட்டர் துகள்கள். இந்த துகள்கள் வானில் இடி இடிக்கும்போது மேக கூட்டம் போல் பூமியில் இருந்து வானத்தை நோக்கி செல்கிறது. அப்போது மின்புலம் தோன்றி காமாகதிர் வெளிப்பட்டு சிதறும் நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்வை நாசா