குயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட
டி.டி.பி. துறையில் பணி புரியும் ஒருவர், அடிக்கடி விண்டோஸ் கேரக்டர் மேப்பினைப் பயன்படுத்து வார். தான் தயாரிக்கும் டெக்ஸ்ட் பைல்களில், ஸ்பெஷல் கேரக்டர்க்ளை அடிக்கடி அமைக்க வேண்டிய திருப்பதால், அவற்றை கேரக்டர் மேப்பிலிருந்து, ஸ்பெஷல் கேரக்டர்களை காப்பி செய்து, கிளிப் போர்டுக்குக் கொண்டு சென்று பயன்படுத்துவார். அவர் கேரக்டர் மேப்பினை எப்படி குயிக் லாஞ்ச் பாரில் பின் செய்வது என்று கேட்டு கடிதம் எழுதி உள்ளார். சற்று விரிவாக இதனை இங்கு தருகிறேன். இவர் பயன்படுத்து வது விண்டோஸ் எக்ஸ்பி, சர்வீஸ் பேக் 3 பதியப்பட்டது.