ரத்த அழுத்தம் வராமல் தடுக்க
இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது.
இந்த இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் இரத்த அழுத்தம் என்று (Blood pressure) பெயர் .
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர்