15 மார்., 2011

இண்டர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா?
அதாவது எல்லாவற்றுக்கும் ஒரு பட்டன். இமெயிலா அதற்கு ஒரு பட்டன். பேஸ்புக்கா அதற்கு ஒரு பட்டன். டிவிட்டரா அதற்கும் ஒரு பட்டன். எந்த தளத்திற்கு செல்வதாக இருந்தாலும் பிரவுசரை அழைத்து அதில் இணையதள முகவரியை டைப் செய்ய வேண்டியதில்லை. அதற்கான பட்டனை கிளிக் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்று விடலாம்.

இண்டர்நெட்டில் நாம் அணுகக்கூடிய தளங்கள் மற்றும் சேவைக்கான குறுக்கு வழியாக இந்த பட்டன்கள் அமையக் கூடும். இணையத்தில் உலா வர பிரவுசர் இருக்கிறது. அடிக்கடி செல்லும் தளங்களுக்கு உடனடியாக செல்ல புக்மார்கிங் வசதியும் உள்ளது.
ஒரு சில பிரவுசர்களில் நாம் தின‌ந்தோறும் பார்வையிடும் தளங்கள் பிரவுசரை இயக்கியதுமே தோன்றி விடும். அவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த பட்டன்கள் என்று நினைக்கக் கூடும். இண்டர்நெட் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்து வரும் நிலையில் பெரியவர்களையும் அதில் சங்கமிக்க கைகொடுப்பது தானே சரியாக இருக்கும்.
ஆனால் எத்தனை பேருக்கு இதற்கான நேரமும் பொறுமையும் இருக்கும் என்று தெரியவில்லை. இந்த இடத்தில் தான் இண்டர்நெட்டுக்கான பட்டன்கள் வருகின்றன. இண்டர்நெட்டில் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்கள் இணையதளங்களை பயன்படுத்த முற்படும் போது தட்டுத்தடுமாறும் நிலை ஏற்படலாம்.
அப்போதெல்லாம் அருகே இருப்பவரிடம் உதவி கோரலாம் அல்லது தொலைபேசியில் அழைத்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். இந்த சங்கடம் கூட இல்லாமல் இணையதளங்களை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளவை தான் இண்டர்நெட் பட்டன்கள்.
உதாரண‌த்திற்கு இமெயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் இமெயில் என்னும் பட்டனை கிளிக் செய்தால் போது இமெயில் பக்கத்திற்கு அழைத்து சென்றுவிடும். அதே போல பேஸ்புக்கிற்கு போக வேண்டும் என்றால் பேஸ்புக் பட்ட‌னை கிளிக் செய்தால் போதும்.
இப்படி பல்வேறு இணையதளங்களுக்கான பட்டன்களை உருவாக்கி கொள்வதற்கான சேவையை இண்டர்நெட் பட்டன்ஸ் டாட் ஆர்ஜி தளம் வழங்குகிற‌து. இமெயில், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், கூகுள் போன்ற இணையதளங்களுக்கான பட்டன்களை இந்த தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். இந்த‌ தளங்கள் தான் என்றில்லை. எந்த த‌ளத்திற்கும் அழைத்து செல்லக்கூடிய பட்டன்களை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம்.
பட்டன்களை தேர்வு செய்து அதில் இணையதளங்களுக்கான முகவரியை டைப் செய்தால் பளபளக்கும் வண்ணங்களில் அழகிய பட்டன்கள் தயாராகி விடும். அந்த பட்டன்களுக்கான இணைய முகவரியை சேமித்து கொண்டால் எந்த‌ கணணியிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.
இணையதள முகவரி செல்ல இங்கே கிளிக் செய்யவும்

நீதி நூல்கள்
ஔவையார்
இயற்றிய
கொன்றை வேந்தன்
ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.


நூல்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

8. ஏவா மக்கள் மூவா மருந்து

9. ஐயம் புகினும் செய்வன செய்

10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை

15. காவல் தானே பாவையர்க்கு அழகு

16. கிட்டாதாயின் வெட்டென மற

17. கீழோர் ஆயினும் தாழ உரை

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி

23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை

27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு

28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

31. சூதும் வாதும் வேதனை செய்யும்

32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு

34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

40. தீராக் கோபம் போராய் முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்

43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு

46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது

47. தோழனோடும் ஏழைமை பேசேல்

48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்

49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை

50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு

52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி

53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

55. நேரா நோன்பு சீர் ஆகாது

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

58. நோன்பு என்பது கொன்று தின்னாமை

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்

62. பீரம் பேணில் பாரம் தாங்கும்

63. புலையும் கொலையும் களவும் தவிர்

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

67. பையச் சென்றால் வையம் தாங்கும்

68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்

69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

71. மாரி அல்லது காரியம் இல்லை

72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

77. மேழிச் செல்வம் கோழை படாது

78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

80. மோனம் என்பது ஞான வரம்பு

81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை

89. வைகல் தோறும் தெய்வம் தொழு

90. ஒத்த இடத்து நித்திரை கொள்

91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், மூதுரை, ஆத்திசூடி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

நூல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து. 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; - கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? 22

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40

தேவையான பொருட்கள்

கோழி கறி (பெரிய துண்டாக) - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பட்டை - 5
கிராம்பு - 5
அன்னாசி பூ - 3
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி
புதினா தழை - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
நெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கோழிக்கறி துண்டுகளை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

2. பெரிய வெங்கயம், பச்சை மிளகாயை தனித்தனியே நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

3. தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஆகிய இரண்டையும் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, மராட்டி மொக்கு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

5. அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

6. பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.

7. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, புதினா தழை, கொத்தமல்லித்தழை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை (சுமார் 3 நிமிடம் மிதமான தீயில்) நன்கு வதக்கவும்.

8. அதனுடன் கோழிக்கறி சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.

9. பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

10. அதில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பிரியாணி அரிசி என்றால் 1 மடங்கு அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர்) குக்கர் மூடி போட்டு விசில் போடாமல் வேக விடவும்.

11. விசில் துவாரம் வழியாக ஆவி வந்ததும் மூடியைத் திறந்து காரம், உப்பு சரியாக உள்ளதா எனப் பார்த்து, தேவையானதைச் சேர்த்துக் கொள்ளவும்.

12. பின்னர் ஊற வைத்த பிரியாணி அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் 2 விசில் வரும் வரை (சுமார் 15 நிமிடம் வரை) வேகவிடவும்.

13. பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, குக்கர் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. தண்ணீர் அளவு : பாசுமதி அரிசி - 1 மடங்கு அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர், புழுங்கல் அரிசி - 1 மடங்கு அரிசிக்கு 2 3/4 மடங்கு தண்ணீர், பச்சை அரிசி - 1 மடங்கு அரிசிக்கு 2 1/2 மடங்கு தண்ணீர்.

2. கடைசியாக அரிசி வெந்து 2 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி குக்கர் மூடியைத் திறந்து பார்க்கும் போது தண்ணீர் இருந்தால் சிறிது நேரம் மிதமான தீயில் வேக விடவும்.



சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தற்காலத்தில் அனைவரும் வயது வித்தியாசமின்றி தொட்டுக் கொள்ள விரும்பும் சைடு டிஷ் `சென்னா மசாலா’ அதி அற்புத சுவையை தன்னகத்தே அடக்கி உள்ள சென்னா, புரதம், நார்ச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. குறைந்த கொழுப்புச்சத்துடன் வயிற்றை நிரப்பும் தன்மை வாய்ந்தது.

சென்னா மசாலாவுடன் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு சீரகத்தூள் போன்றவற்றை சென்னா உறிஞ்சிக் கொள்வதால் நம் வயிற்றில் சேரக்கூடிய வாயுவை தடுக்கும்.

சிறப்பு மிகுந்த சென்னா!

சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து கையால் நன்கு நசுங்கும் பதத்திற்கு வேக வைப்பது மிக மிக அவசியம். இது சென்னா எளிதில் ஜீரணமாக உதவும்.

தானிய வகைகளில் மிகுந்த சுவையும், சத்தும் வாய்ந்த சென்னாவை நன்கு ஊறப்போட்டு வேக வைத்து கமகமவென மசாலா கிரேவி செய்து சேர்த்து சுவைத்தால் அதி அற்புதமாக இருக்கும்.

இம்முறை நாம் சென்னா மசாலா செய்வோமா?

சென்னா மசாலா

தேவையான பொருட்கள்

வெள்ளைச் சென்னா – 2 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்

வதக்கி அரைக்க

எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 8 பற்கள்
இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்

அலங்கரிக்க

கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை

* வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

* வதக்கி அரைக்க என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை நன்கு சுருள வதக்கி, 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த சென்னா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் விழுதாக அரைக்கவும். (வேக வைத்த சென்னா 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்ப்பதானது கிரேவியை கெட்டியாக்குவதுடன் சுவையை அதிகரிக்கும்.)

* அரைத்த விழுதை மேலும் சிறிது எண்ணையில் நன்கு வதக்கி, வேக வைத்த சென்னா, உப்பு, வேக வைத்த சென்னாவில் இருந்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டதும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவைக்கான குறிப்பு

* தேவையானால் வேக வைத்த உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி கடைசியில் சேர்த்து ஒரு கொதி விடலாம். சுவை பிடித்தோர் உண்பதற்கு முன்பு சென்னாவில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து உண்ணலாம்.

* சுவையான, சத்தான சென்னா மசாலா தயார்.

சூரியக்குடும்பத்தில் உள்ள புதனைத்தான் `பார்க்க முடியாத கிரகம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் `மெர்குரி’ என்று அழைக்கப்படும் புதன், சூரியனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. புதன் குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம்…

* பூமியின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தான், புதனின் விட்டம். அதேபோல பூமியின் மொத்த எடையில் 5.5 சதவீதம் தான் புதனின் எடை.

* சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் புதன், சூரியனில் இருந்து சுமார் 5.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

* நம்முடைய நாள் (24 மணி நேரம்) கணக்குப்படி 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது, புதன். அதாவது, புதனில் ஒரு வருடம் என்பது நமக்கு 88 நாட்களாகும்.

* புதன், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 55 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. * மெர்குரி என்பது, ரோம் நாட்டிலுள்ள `சந்தனத்தால் ஆன இறக்கைகளைக் கொண்ட தேவதூதனின்’ பெயராகும். * இந்தக் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், சூரிய ஒளியின் பிரகாசத்துக்கு நடுவே இதைக் காண்பது கடினம். பொதுவாக சூரிய உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு ஒருமணி நேரத்திற்குப் பின்பும் தான் இதைப் பார்க்க முடியும். அதையும் எப்போதாவது தான் பார்க்க முடியும். எனவே, புதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

* புதனுக்கு மிக மெல்லிய வளிமண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலம், சோடியம், பொட்டாசியம், ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆனது. * பகல் நேரத்தில் 427 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 173 டிகிரி செல்சியஸ் வெப்பமும் புதனில் காணப்படும்.

உலகிலேயே மிகச் சிறிய பறவை கிபா நாட்டில் உள்ளது. `மெல்லிஸிகா ஹெலனே’ என்ற தேன்சிட்டுதான் அது. அப்பறவையின் எடை வெறும் 2 கிராம்தான். அலகு முதல் வால் வரை அதன் நீளம் 2 அங்குலம். பெண் பறவையை விட ஆண் பறவை கால் அங்குலம் சிறியது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகச் சிறிய பறவை இதுதான். இதில் ஆண் பறவை வேகமாகச் சிறகுகளை அடிக்கும் தன்மை கொண்டது. அது ஒரு வினாடிக்கு 80 தடவைகள் இறக்கையை அடிக்கும். அப்போது `விர்’ என்ற சப்தம் மட்டும் கேட்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் தனித்தனியாகவே பறக்கும். இவற்றின் இனச்சேர்க்கை சில வினாடிகளில் முடிந்து விடும். இந்த நேரத்தைத் தவிர மற்ற வேளைகளில் ஆணும், பெண்ணும் ஒன்றையொன்று கண்டு கொள்ளாது. இவை சிலந்தியின் வலையைக் கொண்டு மரக்கிளைகளில் மிகச் சிறிய கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் இப்பறவை களுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும். சிறிய சிலந்திகளும், ஈக்களும்தான் இவற்றின் உணவு. ஆனால் இதற்கு மிகவும் பிடித்த உணவு பூந்தேன்தான். எனவே மலர்களைத் தேடி இவை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சளைக்காமல் பறக்கும்.


சனிக்கிரகத்தைச் சுற்றி அழகான மூன்று வளையங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. அவற்றில் வெளிப்புறம் காணப்படும் இரண்டு வளையங்களும் மிகப் பிரகாசத்துடன் திகழ்கின்றன. இவற்றைத் தாண்டி சனியின் மிக அருகாமையில் காணப்படும் உள் வளையம், அவ்வளவு ஒளியுடையது அல்ல. பிரகாசமான இரண்டு வளையங்களையும் 1610-ம் ஆண்டு கலிலியோ என்ற வானவியல் அறிஞர் தான் கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. 1850-ம் ஆண்டு தான் மூன்றாவது வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.

வளையங்களாகத் தெரிபவை, உண்மையில் வளையங்கள் கிடையாது. முன்பு எப்போதோ சனியைச் சுற்றி வந்த உபகிரகம் ஒன்று, சனியை நெருங்கி வரும்போது உடைந்து துகள்களாகி சனியைச் சுற்றி வருகிறது என்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்த வளையங்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய துகள்களால் ஆனவை என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துகள்கள் எங்கிருந்து வந்தன என்பது மட்டும் மர்மமாகவே உள்ளது.
செயற்கைக்கோளை சனிக்கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பும்போது, செயற்கைக் கோள் அந்த வளையங்களை உடைத்து விடாதா? என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம்.

தற்போதைய ஆய்வுகளின்படி சனியைச் சுற்றி 11 வளையங்கள் இருப்பதாகத் தெரிவிக் கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இன்னும் கூட சில வளையங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்புகூட புதிதாக இரண்டு வளையங் கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வளையங்கள், பெரும்பாலும் தூசியும், பனித்துகள் களும் நிறைந்தவை.

பயனியர் 2 (1979), வாயேஜர் 1 (1980), வாயேஜர் 2 (1981) ஆகிய விண்கலங்கள் இதுவரை சனிக்கிரகத்துக்குச் சென்றிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் பயனியர் விண்கலம், சனிக்கிரகத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் பறந்தது. வாயேஜர் விண்கலங்களும் சனியின் குறிப்பிட்ட தூரத்தில் பறந்து ஆராய்ச்சி செய்துள்ளன.

2004-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று, சனிக்கிரகத்தின் வளையங்களைத் துளைத்துக் கொண்டு ழைந்தது காசினி-ஹைஜீன்ஸ் விண்கலம். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி ஹைஜீன்சை மட்டும் சனியின் துணைக்கோளான டைட்டனில் இறக்கி விட்டது, காசினி.

காசினி, சனிக்கிரகத்தின் வளையங்களுக்குள் ழைந்ததால், அந்த வளையங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், வளையங்களில் இருப்பவை தூசியும், பனித் துகள்களும் தான். இவை ஒரே இடத்தில் திடப்பொருள் போல இருக்காது. விண்கலம் அவற்றில் மோதினாலும், அவை வளையத்துக்குள்ளேயே வேறொரு இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.

விமான வேகத்தையும், வசதிகளையும் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றது, ஜெட் என்ஜின். இதற்கான உரிமம் பிராங் ஒயிட்டில் என்ற பிரிட்டீஷ்காரரால் 1930-ல் பெறப்பட்டது.

அது ஏழு ஆண்டுகளுக்குப் பின் சோதிக்கப்பட்டு, அதன்பின்னும் நான்காண்டுகள் கடந்த நிலையில் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.

அதைத் தொடர்ந்து கான்கார்ட், ஜம்போ ஜெட், ஜம்ப் ஜெட் என்று பல விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

லியனார்டோ டாவின்சி 1500-ம் ஆண்டுகளிலேயே ஹெலிகாப்டர் போன்ற ஒரு பறக்கும் சாதனத்தை வடிவமைத்திருந்தார். 1754-ல் ரஷிய அறிவியல் கழகத்தில் ஒரு பெரிய பொம்மை ஹெலிகாப்டர் செயல்விளக்கமாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது. ஆனால் ஒரு மனிதனை அப்படியே மேலே தூக்கிச் சென்று கீழே இறக்கும் சக்தி கொண்ட ஹெலிகாப்டரை 1907-ல் பால் கோர்னு என்ற பிரெஞ்சுக்காரர் உருவாக்கினார். அமெரிக்காவில் பிறந்த ரஷ்யரான இகோர் சிகோர்ஸ்கி அந்த டிசைனை மேம்படுத்தினார். அவர் உருப்படியான, முழுமையான ஹெலிகாப்டரை 1939-ல் பறக்கவிட்டார்.

எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கிய எடிசன், ஹெலிகாப்டர் என்ஜினை தயாரிக்கவும் முயற்சித்தார். ஆனால் வெடிமருந்தைப் பயன்படுத்தி அந்த ஆராய்ச்சி செய்தபோது ஆய்வகமே வெடித்துச் சிதற, முயற்சியைப் பாதியில் கைவிட்டுவிட்டார்.

`போன்சாய்’ என்பது ஜப்பானிய முறையில் தாவரங்களை வளர்க்கும் முறையாகும். `போன்சாய்’ என்பதற்கு ஜப்பானிய மொழியில் ஒரு மரத்தையோ அல்லது தாவரத்தையோ குட்டையான தொட்டியிலோ அல்லது தட்டிலோ அழகுக்காக வளர்க்கும் பூந்தோட்ட முறை என்று பொருள். இதில் கலையும் அறிவியலும் இணைந்திருப்பதை உணர முடியும்.

போன்சாய் கலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தோன்றியது. இம்முறையில் செடிகளை வளர்க்க விரும்புகிறவர்கள், பொதுவாக மரத்தன்மை கொண்ட தாவரங் களையே தேர்ந்தெடுப்பார்கள். எடுத்துக்காட்டாக, மா, நாவல், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற பலன் தரக்கூடிய செடி வகைகளையும், அழகுக்காக வளர்க்கக்கூடிய காகிதப் பூச்செடி போன்றவற்றையும் தேர்ந்தெடுப்பார்கள். இம்முறையில் செடிகளை வளர்க்கக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்: 10 செ.மீ. உயரத்துக்குக் குறைவான தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், இயற்கை உரம் நிறைந்த மண்ணை இடவும். பிறகு, தாங்கள் விரும்பும் சிறுசெடியை வேருடன் பிடுங்கி, பிரதான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேர்களையும், தண்டின் அடிப்பகுதியில் 3 அல்லது 4 இலைகளை விட்டுவிட்டு மற்ற னி இலைகளையும் வெட்டிவிட வேண்டும்.

தொட்டியில் குறைந்த அளவுக்கு நீர் விடவும். அவ்வப்போது தொட்டியை வெயிலில் வைத்து ஒளிச்சேர்க்கை நடைபெறும்படி பார்த்துக்கொள்ளவும். இவ்வாறு ஆறு மாதத்துக்கு ஒருமுறை செடியைத் தொட்டியிலிருந்து எடுத்து வேர்களையும், இலைகளையும் வெட்டி விடவும். இவ்வாறு வளர்ந்த தாவரங்கள் சிறியதாக இருக்கும். ஆனால் நான்கு அல்லது ஐந்தாண்டுகள் கழித்துப் பலன் தரத் தொடங்கும்.

சூரியனில் இருந்து ஒன்பதாவதாக அமைந்திருக்கும் கிரகம், புளூட்டோ. இதுதான் சூரியக்குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகமாகும். அதேபோல், சூரியக்குடும்பத்தின் கடைசி எல்லையில் இருக்கும் கிரகமும் இது தான். புளூட்டோவைப் பற்றிய சில தகவல்களை இங்கு காண்போம்.

கண்டுபிடிப்பு
சூரியனில் இருந்து எட்டாவதாக அமைந்திருக்கக் கூடிய நெப்டின் கிரகத்திற்கு அப்பால் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்ற உண்மையை எடுத்துரைத்தவர், பெர்சிவல் லோவல். இவர், அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் அறிஞர். செவ்வாய்க் கிரகம் குறித்து பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டவர். இவர் இறந்து (1916) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான் `புளூட்டோ’ கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இந்தக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டறிந்தவர், வானியல் ஆராய்ச்சியாளரான கிளைட் டாம்பே. மிகச்சிறிய கிரகமாக இருந்தாலும், பெரிய நீள்வட்டம் போட்டு சூரியனைச் சுற்றி வருகிறது. இது சூரியனுக்கு 440 கோடி கிலோமீட்டர் அருகாமையிலும், 730 கோடி கிலோமீட்டர் தூரத்திலும் நீள்வட்டம் போடுகிறது.

எட்டாவது கிரகம் சில சமயங்களில், நெப்டினின் சுற்றுப்பாதையைத் தாண்டி சூரியனுக்கு அருகில் வந்து விடுகிறது இந்தக் கிரகம். அதுபோன்ற சமயங்களில் நெப்டினே சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும் கிரகமாகக் கருதப்படும். கடந்த 1979-ம் ஆண்டு ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டு வரை புளூட்டோ இப்படி இருந்ததால், நெப்டின் தான் கடைசி கிரகமாக இருந்தது. பின்னர் வழக்கம்போல தூரத்துக்குச் சென்றுவிட்டது புளூட்டோ. சூரியனைச் சுற்றும் காலம்புளூட்டோ, ஒருமுறை சூரியனைச் சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம், 248 ஆண்டுகள். இதில் 228 ஆண்டுகள் ஒன்பதாவது கிரகமாகவும், 20 ஆண்டுகள் எட்டாவது கிரகமாகவும் இருக்கும். இப்படி எட்டாவது இடத்துக்கு புளூட்டோ வரும்போது, நெப்டினின் பாதையில் குறுக்கிட்டாலும், இரண்டின் சுற்றுப்பாதைகளும் மிகப்பெரியவை என்பதால், இதுவரை இவை இரண்டும் மோதிக்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டதில்லை. ஆய்வு செய்வதற்காக இதுவரை எந்த விண்கலமும் அனுப்பப்படாத கிரகம், புளூட்டோ. ஆராய்ச்சியாளர்கள் இதனை `மிகவும் மர்மமான கிரகம்’ என்றே வர்ணிக்கின்றனர். துணைக் கிரகம்
புளூட்டோவின் துணைக் கிரகம், காரோன். இது 1978-ம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளரான ஜேம்ஸ் கிறிஸ்டி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது புளூட்டோவில் இருந்து சுமார் 12 ஆயிரத்து 200 மைல் தொலைவில் உள்ளது. காரோனின் விட்டம், சுமார் ஆயிரத்து 200 கிலோமீட்டர். புளூட்டோ மற்றும் காரோன் ஆகிய இரண்டும் ஒரே அளவுடையவை. இவை இரண்டும் இரட்டைக் கிரகங்கள் போல, ஒன்றையொன்று பார்த்தவாறு சுற்றி வருகின்றன. புளூட்டோ, இரண்டு மாறுபட்ட பகுதிகளால் ஆனது. ஒரு பகுதியில் பனியும், பனி இல்லாத மற்றொரு பகுதியையும் கொண்டது. பனிப்பகுதி, உறைந்த நைட்ரஜனால் ஆனது. மேலும், சிறிதளவு உறைந்த கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் ஆகியவற்றையும் அந்த பனிப்பகுதி பெற்றுள்ளது.

வைரம்!


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?
பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?
வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.

இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?
இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?
ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.

உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?
தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?
ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே,அதனை விளக்கவும்?
வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.

பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரத்தில் தோஷம் என்றால் என்ன ?
அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?
வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?
கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?
தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.


தென் பசிபிக் கடலில் சென்று கொண்டிருந்த டச்சுக் கப்பலின் தலைவர் ஜேக்கப் ராசீவன், ஒரு தீவில் கோட்டை போல காணப்பட்ட சுவரின் மீது 30 அடி உயரமுள்ள ராட்சதர்கள் நிற்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோதுதான் அவை ராட்சதர்கள் அல்ல, சிலைகள் என்பதும், கோட்டைச் சுவர் போலத் தோன்றியது மேடை என்பதும் தெரிந்தன. அந்தச் சிலைகள் நீண்ட காதும், சிவந்த மூக்கும் கொண்டவையாக இருந்தன. மாலுமி ஜேக்கப் அந்தச் சிலைகளைக் கண்டது 1722-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று. எனவே அத்தீவுக்கு `ஈஸ்டர் தீவு’ என்றே பெயரிட்டார். பின்னர் நூறு வருடங்கள் கழிந்த பின்னரே அத்தீவைப் பற்றி பிறர் ஆராயத் தொடங்கினர்.

அப்போது சிலைகள் நின்றுகொண்டிருக்கவில்லை. அவை தரையில் தாறுமாறாக விழுந்து கிடந்தன. அருகில் உள்ள உறங்கும் எரிமலையில் சிலைகள் செதுக்கப்பட்டு, கீழே கொண்டு வந்து நிறுவப்பட்டிருக்கின்றன. அப்படி 300-க்கும் மேற்பட்ட சிலைகள் காணப்படுகின்றன. இன்னும் பூர்த்தியடையாத 400 சிலைகள், மலையில் உள்ளன. உளிகளும், சுத்தியல்களும் கூட அத்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடி உயரம் உள்ளது. முடிக்கப்படாத ஒரு சிலை 66 அடி உயரமுள்ளதாக உள்ளது. மலையில் இருந்து 10 மைல் தூரத்தில் கூட சிலைகள் உள்ளன. அவ்வளவு பெரிய சிலைகளை எப்படித் தூக்கிவந்து மேடை மீது நிறுத்தினார்கள் என்பது விளங்கவில்லை.

ஈஸ்டர் தீவில் முற்காலத்தில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வாழ்ந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த மக்கள், காதில் எடையைத் தொங்கவிட்டு நீளமாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சிலைகள், அரசர்களுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இப்போது ஈஸ்டர் தீவில் யாரும் இல்லை. அங்கு முற்காலத்தில் வசித்த மக்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை. அம்மக்கள், அந்த மாபெரும் சிலைகளை எப்படி வடித்தார்கள், அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வழியே இல்லாமல் போய்விட்டது.

பத்து வருடங்களுக்கு முன், அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும் விடுத்தக் கூட்டறிக்கையில் மனித ஜீனோமின் மாதிரி வரைவு உருவாக்கப்பட்டதாக அறிவித்தபோது, மரபணு (அ) ஜெனிடிக்ஸ் துறையில் மிகப்பெரிய புரட்சி தொடங்கிவிட்டதை உலகம் உணரத் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே மருத்துவத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்வதற்கான ஆராய்ச்சிகள் ஜெட் வேகத்தில் பறக்கத் தொடங்கிவிட்டன. உயிரியல் ரகசியத்தை அணுவணுவாக தோண்டத் துவங்கி யது விஞ்ஞான உலகம். மிகச் சாதாரணமாக கூறவேண்டு மானால் “நீ யார் என்பதை உன்னுள் தேடு’. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது மரபணு ஆராய்ச்சிகள். ஒவ்வொரு மனிதனின் தனி அடையாளங்களும், உடல் கூறுகளும் பாரம்பரியமாக கிடைக்கப்பெற்றது. கண்களின் நிறம், சருமம், மூக்கு வடிவம். போன்ற எல்லா அம்சங் களும் வழி வழியாக, சந்ததிகளாக தொடருபவை.

நாம் எல்லோரும் எண்ணற்ற செல்களினால் ஆக்கப்பட்டிருக்கிறோம். செல் என்பது நுட்பமான, நுண் ணிய உயிரணு. செல்லில் பாரம்பரியத்தின் வரலாற்றுப் பதிவு பொதித்து வைக்கப்பட்டுள்ளது. பிறப்பின் ரகசியம் எழுதப்பட்டிருக்கிறது. மொழியில்லாத மொழி, சாங்கேத மொழி. நம் எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கப் போகும் வம்ச ரகசியம். செல்லின் நடுவே நியூக்கிளியஸ் -கரு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நியூக்கிளியஸினுள்ளே சிக்கலான 46 குரோமோசோம்கள் இடம் பெற்றிருக்கிறது. குரோமோசோம்களை நுட்பமாக கவனித்தால் டி.என்.ஏ (டி.ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) எனும் சிக்கலான மாலிக்யூல்கள் காணப்படுகின்றன. இது முறுக்கிய ஏணிப்படி போன்ற சங்கிலித்தொடர் அமைப்பு. சற்று வித்தியாசமான ஏணி. ஏணியின் இருபுறம் இரு தண்டுகளும், அதனை இணைக்கும் எண்ணற்ற படிகள் உள்ளதாக கற்பனை செய்து கொண்டால் இதன் அமைப்பு எளிதில் விளங்கும், இந்த ஏணி, நான்கு படிகள் இடைவெளியில் ஒன்றுக் கொன்று எதிர்திசையில் முறுக்கிவிட்டுக் கொண்டே சென்றதைப் போன்ற அமைப்பு. தண்டுகள் சர்க்கரை மற்றும் பாஸ்பேட் குழுக்களால் ஆனது. இவையனைத்தும் எஸ்டர் பிணைப்பினால் பிணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு முறுக்கமும் ஒரு நியூக்ளிடைடு. நியூக்ளிடைடில் நான்கு படிகள் போல காணப்படுவது அடினைன் (ஆ), குவனைன்(ஏ) சைட்டோசைன் (ஈ) தைமின் (ப) ஆகிய கார வரிசைகள், உதாரணமாக, ஏஆபஈ என்பது ஒரு கார இணை என்று வைத்துக்கொண்டால் இந்த நான்கு காரங்களை எண்ணற்ற விதத்தில் மாற்றி கார வரிசைகளை உருவாக்கலாம். இந்தக் கார வரிசைகள் தான் மரபுத் தகவல் கள். இதை சாங்கேத மொழி என்பதை விட கட்டளைகள் என்பதே பொருத்தமாக இருக்கும். இது போன்ற சாங்கேத தகவல்கள் அமைந்த சிறு துண்டம்தான் ஜீன். ஒரு குறிப் பிட்ட செயலுக்கான தகவல் தொகுப்பு ஜீன். முழு டி.என்.ஏவில் உள்ள அனைத்து ஜீன்களையும் சேர்த்து ஜீனோம் என்கிறார்கள்.

ஒவ்வொரு மரபணுத் தகவலும் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தை குறிக்கும். அமினோ அமிலம் தகவலுக்கு தகுந்த புரோட்டீன்களை (புரதம்) உருவாக்கும். பின்னர் புரோட்டீன்கள் நொதிகளாகவும், ஹார்மோன்களாகவும், ஆண்டிஜென்களாகவும் (எதிர்புரத தூண்டி) மாறுகிறது. புரோட்டீன்கள் முக்கியமாக உடல் உறுப்புகளாகவும், உருவ மற்றும் செயல் வடிவம் பெற்று, பல்வேறு செயல்களுக்கும், உயிர் வேதியில் மாற்றங்களுக்கும் காரணமாகிறது. காரங்களின் வரிசைக்கும் (மரபணு தகவல்) புரோட்டீனை உருவாக்கப்போகும் அமினோ அமில வரிசைக்கும் உள்ள தொடர்புதான் ஜெனிடிக் கோடு. மரபணுத் தகவல்களால் நம் கண், காது, மூக்கு, உடல் அமைப்பு போன்ற நுட்பமான தகவல் மட்டும் பல சந்ததிகளாக தொடரவில்லை. நம் முந்தைய சந்ததியினர் அளித்த நோய்களுக்கும்தான். புற்றுநோய், சர்க்கரை வியாதி, இதய மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் கூடவே தொடரும். அதனால், நம் பெற்றோர்களை பார்த்து எனக்கு என்ன மிச்சம் வைத்தீர்கள் என கேள்வி கேட்க முடியாது.

ஜினோம் வரிசைப்படுத்தலும் மனித ஜீனோம் திட்டமும்

மனித ஜீனோம் சுமார் 3 மில்லியன் மரபணுச் செய்திகள் (அ) தகவல்கள் பொதிந்து வைக் கப்பட்ட நீண்ட தொடர். டி.என்.ஏ மாலிக்யூ லில் உள்ள ஜீனோம் வரிசைப்படுத்துவது என்பது மரபணு செய்தியான கார இணை களின் சரியான வரிசையை கண்டறிவதுதான். மனித ஜீனோம்களை வரிசைப்படுத்த மனித ஜீனோம் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட மனித ஜீனோம் திட்டத்தில் 1 சதவீதம் ஜீனோம் வரிசைப்படுத்திய பிறகு சீனாவும் இந்த குழுவில் இணைந்த கொண்டது. முதன் முதலில் ஜீனோம் மாதிரி விரைவு உருவாக்கி 2000- ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி உலகுக்கு அறிவித்தது. முதலில் 90 சதவீதம் ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. அதில் 1000 கார வரிசை களுக்கு ஒரு தவறு இடம் பெற்றிருந்தது. மேலும் 1,50,000 இடை வெளிகளுடன் தரமான 28 சதவீத ஜீனோம்களைத் தான் இத்திட்டத்தால் வரிசைப்படுத்த முடிந்தது. முதன் முதலாக 2001- ஆம் ஆண்டு கிரைக் வென்டர் மற்றும் சக விஞ்ஞானிகள் அவர்களுடைய ஜீனோம் வரிசைப் படுத்தல் ஆய்வுகள் வெளியிடப்பட்டது, அதே சமயம் மனித ஜீனோம் திட்டத்தின் மனித ஜீனோம் வரிசைப்படுத்தல் ஆய்வுகள் வெளியிடப்பட்டது. மேலும் 2003 ஏப்ரல் மாதம் மிக நுணுக்கமாக, 400 இடைவெளிகள் மட்டுமே கொண்ட, 99 சதவீத ஜீனோம்களை இத்திட்டத்தினரால் வரிசைப் படுத்தப்பட்டது. இது 10,000 கார வரிசைக்கு ஒரு தவற்றைக் கொண்டிருந்தது. 3 மில்லியன் கார இணைகளை வரிசைப்படுத்தவும், அனைத்து ஜீன்களை அடையாளம் காணவும் 13 வருடங்கள் எடுத்தது.

தற்போது ஒரு நாளைக்கு 25 முதல் 100 பில்லியன் கார இணைகள் வரிசைப்படுத்தக்கூடிய இயந்திரங்கள் வந்து விட்டன. அதிகமான மரபணு தகவல்களை (ஜீனோ டைப்) நாம் புரிந்துகொள்ளக்கூடிய பீனோடைப் தகவல் களாக மாற்றவும், இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் அதிக திறன் கொண்ட கணினி தேவைப்படுகிறது எவ்வளவு என்கிறீர்களா? நம்முடைய சாதாரண கணினியைப்போல 10,000 மடங்கு.

இந்தியாவின் முயற்சி

இந்தியா 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி மனித ஜீனோம் வரிசைப்படுத்துதலில் தீவிரமாக இறங்கியது. ஜீனோம் வரிசைப்படுத்துத லில் இந்தியா இறுதியாக நுழைந்தாலும் மிக வேகமாக மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. அதுவும் நாற்பத் தைந்தே நாட்களில் செய்து முடித்தது. வயது 52, உயரம் 167 செ.மீ, எடை 52 கிலோகிராம் கொண்ட, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனிதனின் ஜீனோம்தான் இந்தியா வரிசைப்படுத்திய ஜீனோம். அந்த அதிர்ஷ்டசாலியின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தும் எண்ணம் தற்போதைய ஈநஒத தலைவர் பேராசியர் சமீர் பிரம்மசாரியால் உரு வானது. தற்போதைய ஒஏஇஒலியின் தலைவர் ராஜேஸ். எஸ்.கோகலே தலை மையில் ஸ்ரீதர் சிவசுப்பு வினோத் ஸ்கரியா ஆகிய விஞ்ஞானிகளுடன் 6 மாணவர்கள் சேர்ந்த குழு மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியது. இதனை செய்து முடிக்க நொடிக்கு ஒரு டிரில்லியன் செயல் வேகம் கொண்ட சூப்பர் கணினிகள் ஈநஒதலின் உதவியால் பயன்படுத்தப்பட்டது. சுமார் 51 ஜிகா கார வரிசைகள் கட்டிங்- எட்ஜ் தொழில்நுட்ப முறையில், 76 ஜீன் துண்டுகளின் 10 லட்சம் கார வரிசைகள் வரிசைப்படுத்தப்பட்டது.

மரபணு மருத்துவம் (அ) ஜீன் மருத்துவம்

மனிதனின் ஜீனோம் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்விக்கு இனிவரும் காலங்கள் தீர்க்கமான பதில்களை சொல்லக் காத்திருக்கிறது. நோய் வரும் முன் காப்போம் என்ற வாக்கியம் உண்மையில் இந்த மருத்துவமுறைக்கு மிக பொருந்தும். பாரம்பரியமாக தொடரும் புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களை ஜீன்களில் கண்டறிந்து, திருத்தப்பட்ட ஜீன்களை அவ்விடத்தில் இணைத்தால் போதுமானது. தேவையன்றி நோய் வந்தபின் மருந்தோ, மாத்திரையோ சாப்பிடத் தேவையில்லை. அதாவது இருதய நோய் ஏற்படும் என்ற தகவலை வெட்டி எறிந்து விட்டு, ஆரோக்கியமான மனிதரில் எடுக்கப்பட்ட இருதய தகவலை இணைத்துவிட்டால் போதுமானது. இவ்வகை மாற்றங்கள் இருவகைகளில் செய்யப்படுகிறது. உடல் செல்களிலும், கருசெல் அல்லது இனப்பெருக்க செல்களிலும் இவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட ஜீன் சிகிச்சைமுறை கையாளப்படுகிறது. உடல் செல்கள் பெருக்கம் அடைவது குறைவு. எனவே இம்முறை ஒருசில நோய்களுக்கு மட்டுமே பயன்படும். கருசெல் அல்லது இனப்பெருக்க செல்களில் திருத்தியமைக்கப்பட்ட வேற்று மனிதர்களின் ஜீன்களை இணைத்து நோய்களை இல்லாமல் செய்யலாம். நமக்கு தேவைப்படும் உடல் உறுப்புகள், அமைப்பு, கண்கள் போன்ற வற்றை பெறலாம். எதிர்காலத்தில் உன்னிடம் இருக்கும் இந்த நீளமான மூக்கு என்னுடையது என்று யாரேனும் சொந்தம் கொண்டாடினால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

ஜீனோம் வகைப்பாட்டுத் திட்டங்கள்

ஒரு மனிதனின் ஜீனோம்களை வரிசைப்படுத்தி, அதனை ஒரு அடிப்படை முன்மாதிரியாக வைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் ஜீனோம்களும் வெவ்வேறு வகையானது. ஒரே மாதிரியான இரட்டைகள் இதற்கு விதிவிலக்கு இரு வெவ்வேறு மனிதர்களின் ஜீனோம்களைக் கொடுத்து வித்தியாசங்களை கண்டுபிடி என்றால் சுமார் 60 லட்சம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்க லாம். எனவே பல தரப்பட்ட மனிதர்களின் ஜீனோமை வரிசைப்படுத்தி ஒரு ஜீனோம் தரவு புலம் அல்லது தரவுதளம் உஹற்ஹ க்ஷஹள்ங் உருவாக்குவது அவசியம். தரவு தளம் பெருமளவி லான மரபணுத் தகவல்கள் அல்லது பதிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் தனி மனித குணாதிசயங்கள், நோய்களின் வரலாறு ஆகியவற்றை உட்கொண்டதாக இருக்க வேண்டும்

இண்டர்நேஷனல் ரிசர்ச் கன்சார்டியம் எனும் அமைப்பு பல்வேறு மனிதர்களின் ஜீனோம் வரிசைப் படுத்த 1000 ஜீனோமை திட்டத்தை 2008-இல் தொடங்கியது, மருத்துவத்திற்கு உதவும் வகையில், மிக விரிவாக பல்வேறு மனிதர்களின் ஜீனோம் வரிசைகளை உருவாக்குவது இதன் நோக்கம். உலக அளவில் விஞ்ஞான சமூகத்திற்கு பயன்படும் தரவு தளம் உருவாக்க முனைந்துள்ளனர்.

உலகிலேயே முதன் முதலாக, இந்தியாவில் பேராசிரியர் சமீர் பிரம்மச்சாரி தலைமையில், இந்தியாவில் உள்ள பல்வேறு இன மனித ஜீனோம் வரைவு உண்டாக்கி, வெற்றி கண்டுள்ளனர். இந்தப் பணியில் 12-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களும் சுமார் 150 விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். உயிரி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பலதரப்பட்ட 1000 பேர்களின் ஜீனோமை வரிசைப்படுத்துவது இதன் பணி. நம்நாடு உலக மக்கள்தொகையில் 1/6 பங்கு பலதரப்பட்ட மக்களை பெற்றிருப்பதினால் இந்த வெற்றியானது முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல சீனா 100 மனிதர்களின் ஜீனோமை வரிசைப்படுத்த யான் ஹீவாங் திட்டத்தை 2007-இல் தொடங்கியது.

எதிர்நோக்கியுள்ள சவால்கள்

இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் வளரும் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாரம்பரிய நோய்களை குணப்படுத்த முடியும், கழிவுநீரை சுத்தப்படுத்தும் பாக்டீரியாவை உருவாக்கி கழிவுநீரிலிருந்து நன்னீர் உண்டாக்கலாம். வாயு மண்டலத்தில் உள்ள கார்பன்- டை- ஆக்ஸைடை எடுத்து அதனை எரிபொருளாக மாற்றும் பாக்டீரியாவை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவை அனைத்திலும் வெற்றி கிட்டலாம். இருந்தபோதிலும், முதலில் நோய்களை குணப் படுத்துவதில் புரட்சி உண்டாக்கட்டும். அதன் பின் மற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்த லாம் என்கின்றனர் மற்றொரு பிரிவினர். பயோ டெக்னாலஜி கம்பெனிகள் மனித மரபணு தகவல்களை விற்பது லாபகரமாக இருக்குமென எண்ணி மும்முர மாக செயல்படுகின்றன. கிரைக்வென்டர் தனியார் கம்பெனிகள் இதைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் என எச்சரிக்கிறார். ஜீனோம் வரிசைப் படுத்தல் வழி குறைபாடுள்ள ஜீன்களை அறிந்து, அதனை களைவது மட்டுமல்ல அதன் நோக்கம் திறமை வாய்ந்த ஜீனோம்களை அறிவதும் கூட, அவ்வாறு செய்யும்போது மனிதனின் திறமையற்ற ஜீன்களை களைய முனையும் விஞ்ஞான உலகம். இதனால் மனிதனின் உண்மையான பிறப்பு என்பது குழிதோண்டி புதைக்கப்படும். எதிர்காலத்தில் அசல் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் நகல் மனிதர்களே நடமாடுவார்கள். எப்படி இருப்பினும் இந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதகுலத்தின் நன்மைக்கு செய்யப்படும் புரட்சி என்பதில் மகிழ்ச்சியடைவோம்.

மறுமொழியவும்
இந்தியாவில் திட்டமிடல் முறையில் பல முற்போக் கான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொருளாதாரத் திட்டமிடல் என்பது அரசியலும், பொருளாதாரமும் இணைந்த ஓர் இயங்கியல் அணுகு முறையாகும். கடந்த 57 ஆண்டுகளில் திட்டமிடல் முறையில் மாநிலங்களின் பங்கு முதன்மை பெற்று வருகிறது. மாநிலத் திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக 1971-ஆம் ஆண்டில், தமிழ் நாட்டின் சமுதாய, பொருளாதாரத் தளத்தில் திட்டமிடல் கொள்கை புதிய உந்துதலைப் பெற்றது. தமிழ் நாடு பல்வேறு துறைகளில் சீரான வளர்ச்சியை எட்டு வதற்கு இது வழிகோலியது.

1920-ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே தமிழ்நாடு, சமூகநீதிக் கொள்கையைக் கடைப் பிடித்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சி யாக, நாடு விடுதலை அடைந்த பின்னரும், வேளாண்மை, தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்திற்கும், சமுதாய நலத்திட்டங் கள் சிறப்புற நிறைவேறுவதற்கும் தமிழ்நாடு அரசு திட்டங் களைத் தீட்டி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் எளிய மக்கள் பங்கு பெற்றுப் பயனடைவதில்தான் உண்மையான சமூக, பொருளாதார மாற்றத் தையும், சமத்துவத்தையும் காணமுடியும். இந்த அணுகுமுறையின் அடிப்படையில் பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கி, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை அறிக்கையை 2006-ஆம் ஆண்டில் மாநிலத் திட்டக் குழு வெளியிட்டது.

மாநிலத் திட்டக்குழு ஒவ்வொரு வல்லுநர் குழுக்களை அமைத்தது அரசுத் துறைத் தலைவர்கள், வல்லுநர்கள் ஆகியோர்  இக்குழுக்க ளில் இடம்பெற்று, திட்டத்திற் கான கருத்துக்களை வழங்கினர். அனைத்து தரப்பினரின் கருத்துக்களைப் பெற்ற திட்டக் குழுவானது அவற்றை ஆய்ந்து பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஒரு “மக்கள் திட்டமாக’ வடிவமைத்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக் காரணிகளை உரிய முறையில் சீரமைத்து, அனைத்துத் துறை களிலும் உள்ள வேறுபாடு களை நீக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதே திட்டமிடுதலின்கொள்கைகளும், செயல்பாடுகளும் ஆகும். இந்த உயரிய நெறிகளைப் பின்பற்றி தமிழ்நாடு சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை அடைவதில் வெற்றி பெற்று வருகிறது. சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியைக் குறிக் கோளாகக் கொண்ட தமிழகம், நிலையான வளர்ச்சியடைந்து, இந்திய மாநிலங்களுக் கிடையே சமூக- பொருளாதாரத் தளங்களில் முற்போக்கான மாநிலமாகத் திகழ்கிறது. சமூகநீதியின் உயர் நெறியான இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றி, சமூகநலத்துறை களில் பொதுச் செலவைப் பெருக்கி, கடந்த 100 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும், திட்டங்களும் தமிழ் நாட்டில் இயைந்த வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன. துறைவாரியான வளர்ச்சி நிலை களில் மேம்பாடு காணப்பட்டாலும், சில துறைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. நாடு விடுதலை அடைந்த போது, ஒருவேளாண் பொருளாதாரமாக இருந்த தமிழகம், இன்று தொழில், பணித் துறைகளின் முன்னேற்றத்தினால், நவீனப் பொருளாதாரமாகத் திகழ்கிறது வேளாண் துறை சந்திக்கும் எல்லாவித இடர்ப்பாடு களையும் களைந்து, அவ்வப்போது, பருவ மழையின்மை, வெள்ளப் பெருக்கு ஆகிய காரணிகளால், எழுகின்ற சிக்கல்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் துறையில் அதிக வளர்ச்சி அடைவதே, ஊரகப் பகுதிகளில் வருமானத்தை அதிகரிப் பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் உரிய திறவுகோலாகும். மேலும், வேளாண் துறையில் முன்னேற்றமானது, தொழில்நுட்பத்தின் வழியாகவும், விவசாயி களின் மேம்பாட்டு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டும் அமைந்திடல் வேண்டும். பதினோராவது திட்டக்காலத்தில் தமிழ்நாடு 9 விழுக்காடு வளர்ச்சி அடை வதற்கு இலக்குகள் வகுக்கப் பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிற மனிதவளர்ச்சிக் குறியீடுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மாவட்டங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைய செயல் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். முக்கியமான பொருளாதாரக் குறியீடுகளைக் கவனிக்கும் பொழுது, பொருளாதார முன்னேற்றம் கடந்த பத்தாண்டுகளில், ஆண்டுதோறும் 5.8 விழுக்காடாகவும், மக்கள்தொகை வளர்ச்சி 0.9 விழுக்காடாகவும், வேலைவாய்ப்பின்மை 1999-2000, 2004-05 ஆகிய ஆண்டுகளுக் கிடையே 0.25 விழுக்காடாகவும் இருந்தது. எனவே, இத்திட்டக்காலத்தில், வேலை வாய்ப்பை ஏற்படுத்து வதிலும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும், ஊரக, நகர்ப்புற மக்களின் வாழ்க்கைநிலையை உயர்த்துவதிலும் புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

திட்டமானது, நீடித்த, சுற்றுச் சூழல் மேம்பாட்டுடன் கூடிய வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. நீடித்த, சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக் காரணிகளையும் இணைத்து தமிழ்நாடு மேம்பாடடைவதற்கு ஏற்ப இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாவது திட்டக்காலத்தில் மாநிலத்தின் பொருளாதார நிலை பொருளாதார வளர்ச்சி பத்தாவது திட்டக் காலத்தில் தமிழ்நாடு, ஆண்டுதோறும் 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, உண்மை விலையில் (ஏநஉட ண்ய் ழ்ங்ஹப் ற்ங்ழ்ம்ள்) அடையும் என எதிர் பார்க்கப்பட்டது. எனினும் 6.8 விழுக்காடு வளர்ச்சியையே அடைய முடிந்தது. மோசமான பருவநிலை, இயற்கைச் சீரழிவு ஆகியவற்றால் முதன்மைத் துறையின் வளர்ச்சி குறைந்ததே இதற்கு காரணமாகும். பொருளாதாரமானது ஒன்பதாவது திட்டக்காலத்தில் ஆண்டு தோறும் சராசரியாக 4.8 விழுக்காடு வளர்ச்சியையும், பத்தாவது திட்டக் காலத்தில் 6.8 விழுக்காடு வளர்ச்சி யையும் எட்டியது. பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறை 7.7 விழுக்காடு வளர்ச்சி பெற்றது. முதன்மைத் துறை ஆண்டுதோறும் 2.57 விழுக்காடு குறைந்த வளர்ச்சியைப் பெற்றதால் பொருளா தாரத்தில் பின்னடைவு ஏற்பட காரணமாக அமைந்தது. இரண்டாம் துறை 7.5 விழுக்காடு என்ற வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.

தலா வருமானம்

தமிழ்நாடு 2004-05ஆம் ஆண்டு தலா வருமானத்தில், தேசிய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்தது. ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்திய 3.5 விழுக்காடு வளர்ச்சி யுடன் ஒப்பிடும்பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் ஆண்டுதோறும் 5.7 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டுள்ளது.

வேளாண் துறை

வேளாண் துறையானது மாநில, தேசிய அளவில் ஊரக மக்களுக்கான முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகிறது. வளர்ச்சியில், வேளாண்துறையின் பங்கு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந் தாலும், பொருளா தாரத்தில் அத்துறை உருவாக்கும் தாக்கத் தைக் குறைத்து மதிப்பிடமுடியாது.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் வேளாண்மைக்கும் அதன் துணைத் துறைகளுக்கும் 4 விழுக்காடு வளர்ச்சியும், ஆண்டுதோறும் 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானிய உற்பத்தியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கக் காலங்களில் காணப்பட்ட வறட்சி காரணமாக இந்த இலக்கைவிட குறைவான வளர்ச்சியையே அடைய முடிந்தது.

கடுமையான வறட்சி, வெள்ளம், சுனாமி ஆகியவற்றின் காரணமாக பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் கால இலக்கான 106.38 இலட்சம் மெட்ரிக் டன்கள் உணவு உற்பத்தியை அடைய முடியவில்லை. பத்தாவது திட்டக் காலத்தில் சராசரி உணவு தானிய உற்பத்தியானது 63.78 இலட்சம் மெட்ரிக் டன்னாகும். இது ஒன்பதாவது திட்டக் கால உற்பத்தியான 85.33 இலட்சம் மெட்ரிக் டன்னைவிடக் குறைவானதாகும்.

இந்தியாவில், மக்களின் நிலவுடைமை அளவு குறைவாகவுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். சராசரி நிலவுடைமை 1976-77இல் 1.25 எக்டேராக இருந்தது. தற்போது 1 எக்டேராகக் குறைந்துள்ளது. மேலும் 59 ஆவது தேசிய மாதிரி ஆய்வான “”விவசாய குடும்பங் கள் கடன்படுதல் மூலம் விவசாய குடும்பங்கள் அதிகளவு கடன்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு சிறு-குறு விவசாயிகளின் தனித்தன்மை வாய்ந்த, நலிவுற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

தொழில் துறை

பத்தாவது திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் இலக்கு 7.12 விழுக்காடாக இருந்த போதிலும், இத்துறை ஆண்டுதோறும் 7.5 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது. இது ஒன்பதா வது திட்ட காலத்தில் அடைந்த வளர்ச்சி வீத மான 2.15 விழுக்காட் டைக் காட்டிலும் குறிப் பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இரண்டாம் துறையின் உற்பத்தித் துறை வளர்ச்சி வீதமானது 8.19 விழுக்காடாகவும், கட்டுமானத் துறையின் வளர்ச்சி வீதம் 6.4 விழுக்காடாகவும் உள்ளது.

இத்தொழில்களின் வளர்ச்சி ஆற்றலைப் போற்றி வளர்த்தெடுப்பது பதினோராவது திட்டக் காலத்திலும் தொடரவேண்டும். பதிவு செய்யப்படாத தொழில் உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி பெற்று வரினும், உள்கட்டமைப்பு வசதிகள், கடன், தொழில்நுட்பம் ஆகியவை போதிய அளவு கிடைக்காத காரணத்தால், இத்துறை பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலைமை உள்ளது. இத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் அதைக் களைய உரிய நடவடிக்கைகளைப் பதினோராவது திட்டக் காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

பணித்துறை பத்தாவது திட்டக் காலத்தில் மூன்றாம் துறையின் வளர்ச்சி இலக்கு 9.77 விழுக் காடாக நிர்ணயிக்கப்பட்டது. திட்டக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்த முடியாவிட்டாலும், பொருளாதாரத்தில் இத்துறை பெரும் தாக்கத்தை சந்தேகத்திற் கிடமின்றி ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் துறையானது வேகமாக வளரும் துறையாகும். ஒன்பதாவது திட்டக் காலத்தில் எய்தப்பட்ட 6.98 விழுக் காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது பத்தாவது திட்டக் காலத்தில் 7.72 விழுக்காடு வளர்ச்சி எய்தப்பட்டது. 2004-05-இல் உயர்ந்த அளவான 11.62 விழுக்காட்டை எட்டியது. பணித்துறையின் வளர்ச்சிக்கு காரணமான அதன் உட் பிரிவான தகவல் தொடர்பில் 14.8 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. பணித்துறையின் வளர்ச்சியானது மாநிலப் பொருளாதாரத்தின் அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினி மென்பொருள், வன்பொருள் உற்பத்தியில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2005-06 இல் ரூ.14,115 கோடி அளவுக் குத் தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் அளவு 2006-07இல் ரூ.20,700 கோடியாக உயர்ந்துள் ளது. இத்துறையினால் வேலை வாய்ப்பு பெருகுவதால் இதன் வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், வேளாண்மை சாராத துறை வளர்ச்சியின் விளைவாக ஊர்ப் புறங்களில் இருந்து பெரிய நகரங் களுக்குத் தொழி லாளர்கள் பெருமள வில் வருவதை வேளாண்மை சாராத துறையை அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கச் செய்வ தன் வாயிலாகவும், நகர்ப்புறத்திற்கு நல்ல குடிமை வசதிகளை அளிப்பதன் வாயிலாகவும் எதிர்கொள்ள இயலும்.

மக்கள்தொகை வளர்ச்சி

மாநிலத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு 6.24 கோடியாக உள்ளது. கடந்த பத்தாண்டுக் காலத்தில் இதன் வளர்ச்சி வீதம் 11.72 விழுக்காடாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்த வளர்ச்சி வீதத்தை 11.72 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக 2011-ஆம் ஆண்டில் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் கணிக்கப் பட்ட மக்கள் தொகை விவரப்படி பதினோராவது திட்ட இறுதியில் மக்கள் தொகையானது 6.79 கோடியாக இருக்கும் எனத்தெரிகிறது. இதன்படி 2001இலிருந்து 2012 வரை வளர்ச்சி வீதம் 8.7 விழுக்காடு ஆக இருக்கும். இந்த கணிப்பின்படி ஊர்ப்புறங் களில் மக்கள் தொகை 13.4 விழுக்காடு குறைந்தும், நகரப் பகுதிகளில் 37 விழுக்காடு அதிகரித்தும் காணப்படும்.

உள்கட்டமைப்பு

தமிழகத்தில் சாலைவசதியானது 1,88,700 கி.மீ உள்ளது. மேலும் சாலை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தற்போது முன்னணி வகிக்கிறது. மாநிலத்தில் சாலை அடர்த்தியானது ஒரு இலட்சம் மக்கட்தொகைக்கு 286 கி.மீ. எனவும், 100 ச.கி.மீட்டருக்கு 137 கி.மீ. எனவும் உள்ளது. இது தேசிய அளவில் முறையே 258 கி.மீ., 75 கி.மீ.ஆக உள்ளது. பத்தாவது திட்டக் காலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள குடியிருப்புகள் அனைத் திற்கும் அனைத்து பருவங்களுக் கும் ஏற்ற சாலைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.

பத்தாவது திட்டக் காலத்தில், மின்சாரம், சாலை, தொலைபேசி, இணையதளம், பள்ளி, தூய்மையான நீர், துப்புரவு வசதிகளை 2010ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டது. பழைய வரையறைப்படி அனைத்து ஊர்ப்புறங்களும் மின்சார வசதி பெற்றுள்ளன. மேலும், தமிழகத்தின் அனைத்து ஊர்ப்புறங்களும் கிராம பொது தொலைபேசி வசதி பெற்றுள்ளன.

குடிநீர்

பத்தாவது திட்டத்தில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் ஊர்ப்புறங் களில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 40 லிட்டர் வழங்க முன்னுரிமை தரப்பட்டது. எனினும், 2006 செப்டம்பரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 86981 ஊர்ப்புறக் குடியிருப்புகளில் 50529 குடியிருப்புகளுக்கு மட்டுமே முழுமையான குடிநீர் வழங்கப் பட்டது. (40 டஸ்ரீக், அதற்கு மேல்), 35241 குடியிருப்புகளுக்கு பகுதியளவே வழங்கப் பட்டது. 1211 குடியிருப்புகளுக்கு குறைந்த அளவு குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டது. குடிநீர் வழங்கல் வசதியினை அடிப்படை யாகக் கொண்டு நகரங்கள் நன்று, சராசரி, தாழ்வு என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சென்னை மாநகராட்சி நீங்கலாக 718 நகர உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவற்றில் 382 நன்று எனவும், 307 சராசரி எனவும் 29 தாழ்வு எனவும் தரம் பிரிக்கப் பட்டுள்ளன.

காடுகள்

2012-ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 25 விழுக்காடு காடுகள் நிறைந்த நிலப்பரப்பாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2006இல் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பு மாநிலத்தின் காடுகளாக இருக்கின்றன. இது மொத்த நிலப்பரப்பில் 17.59 விழுக்காடாகும். இருப்பினும் 2003-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காடுகள் பற்றிய கணக்கெடுப்பின்படி காடுகள், மரங்கள் சூழ்ந்தபகுதி, மொத்த நிலப்பரப்பில் 21.25 விழுக்காடாக உள்ளது.

முதலீடு

பத்தாவது திட்ட காலத்திற்கான முதலீடு ரூ.2,62,502 கோடி என மதிப்பிடப்பட்டது. அதில் மாநிலம் ரூ.40,000 கோடியை மாநில நிதியிலிருந்தும், ரூ.48,000 கோடியை மத்திய நிதியிலிருந்தும் பெற வேண்டியிருந்தது. எனவே, மாநிலம் மீதமுள்ள ரூ.1,74,502 கோடிக்கு தனியார் முதலீட்டையும், வெளி நாட்டு நேரடி முதலீட்டையும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதில் மாநிலத் திட்ட ஒதுக்கீடான ரூ.40,000 கோடியில் ரூ.37,689.79 கோடி வரவு, செலவுத் திட்டத்தில் (உண்மை நிலையில்) ஒதுக்கப்பட்டது. இது 94.22 விழுக்காடாகும்.

நிதிச் செயற்பாடு

பத்தாவது திட்டக் காலத்தில் தமிழகத்தின் திட்ட ஒதுக்கீடு ரூ.40000 கோடியாக, 2001-02ஆம் ஆண்டு விலையில் நிர்ண யிக்கப்பட்டது. மாநிலம் நடப்பு விலையில் திட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக செலவு செய்துள்ளது. ஆனால் 2001-02 விலையில் 94.2 விழுக்காடு மட்டுமே செலவு செய்ய முடிந்தது.

பத்தாவது திட்டக்காலத்தில் குடிநீர் வழங்கல், வீட்டு வசதி, நகர மேம்பாடு கல்வி, உடல்நலம் ஆகிய சமூகப் பணிகளுக்கு முன்னுரிமை தந்து 33 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை, போக்குவரத்து முதலான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 38 விழுக்காடும், வேளாண்மை, ஊரக மேம்பாட்டிற்கு 26 விழுக்காடும் ஒதுக்கப்பட்டது. பத்தாவது திட்டக் கால வருவாய் வரவில் செயலாக்கத்தின்போது உள்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட முன்னுரி மையில் சிறிய அளவில் மாற்றம் அடைந்து சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.

நிதி ஆதாரங்கள்

தமிழ்நாட்டின் நீடித்தப் பொருளாதார வளர்ச்சிக்காக பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு, ரூபாய் 85344 கோடி நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் தொகை பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதி ஒதுக்கீடான ரூபாய் 40000 கோடியை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

இந்த திட்டநிதி ஒதுக்கீடு கீழ்க்காணும் இனங்களின் அடிப்படையில் அமையும். 1) மாநிலத்தின் சொந்த நிதியாதாரத்திலிருந்து திரட்டப்படும் நிதியளவு ரூ.17498.78 கோடியாகும். 2) நடுவண் அரசின் நிதியுதவி ரூ.15873.19 கோடியாகும். 3) மாநிலம் எழுப்பும் கடன் வழியாக பெறப்படும் நிதி ரூ.55708.50 கோடியாகும். 4) மாநில பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்மறை பங்களிப்பு ரூ. 5336.47 கோடி. 5) உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு ரூ.1600 கோடி. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 2006-07-ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் மொத்த முதலீடு ரூ.649330 கோடியாகும். இத் தொகையில் மாநிலத்தின் முதலீடு ரூ.85344 கோடியாகும். பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் நடுவண் அரசுத் துறைகளின் முதலீடு ரூ.128935 கோடியாக இருக்கும். இத்தொகை பத்தாவது ஐந் தாண் டுத் திட்டத்தின் மதிப்பீடான 18 விழுக்காட்டை விட அதிகரித்து 20 விழுக்காடாக அமையும். இந்த மொத்த முதலீட்டுத் தொகையில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.435051 கோடியாக இருக்கும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தனியார் முதலீட் டின் பங்களிப்பான 66 விழுக் காட்டைவிட, ஒரு விழுக்காடு உயர்ந்து, பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மொத்த முதலீட்டில் தனியார் துறையின் பங்களிப்பு 67 விழுக்காடாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றி-நக்கீரன்

சாலிடேர்(Solitaire) என்றால் என்ன ?

சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத்தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள்.

விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?

விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும். இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள்.

அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?

இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும்.

Industrial Diamonds – என்றால் என்ன ?

நகை செய்யப் பயன்படாத வைரங்கள் பலவித தொழிற்சாலை உபகரணங்களுக்கு பயன்படும். ஏனென்றால் அந்த வைரத்தின் தன்மை என்றுமே மாறாது. அவை சாணைக்கல்லில் அடைப்புகளை நீக்கும் கருவிகள் (Dressing Tools), கண்ணாடிகள் வெட்டும் கைக்கருவிகள் (Glass Cutter), லேத்மெஷினில் ஸ்டீல் பாகங்களை வெட்டும் கருவிகள் (Cutting Tools), அறுவை சிகிச்சை செய்யும் கைக்கருவிகள் (Operation Instruments), இன்னும் பலவற்றில் உபயோகிக்கப்படுகிறது. இதன் துகள்களை சாணைக்கல்லில் பதித்து வைரத்தை பட்டை தீட்ட பயன்படுத்தலாம். இப்படி பலவற்றில் பயன் படுத்தலாம்.

4Cs என்றால் என்ன?

பல நாடுகளில் வைரங்களின் தரத்தைக் குறிப்பிட வெவ்வேறுவிதமான வார்த்தைகளை குறிப்பிட்டு வந்தார்கள். உலகளவில் ஒரே தர நிர்ணயம் செய்வதற்காக (நிமிகி) ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடிட் ஆப் அமெரிக்கா 4சி என்கிற முறையை அறிமுகப்படுத்தியது. அது பின்வருமாறு.

1.CLARITY, 2. COLOUR, 3. CAROT, CUT

1.CLARITY (தெளிவு)

வைரத்தை மேலிருந்து உள்ளே பரிசோதித்து பார்க்கும் போது ஏதேனும் வேதிப் பொருள்களோ கனிமப் பொருள்களோ உள்ளடங்கி இருக்கிறதா என்பதை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். அது எந்தவிதத்திலாவது அதன் ஜொலிப்பை பாதித்தால் வைரத்தின் விலை குறையும்.

2. COLOUR (நிறம்)

வைரம் சுத்த வெள்ளையாக அதாவது நிறமற்றதாக (தெளிந்த நீரோடை போல்) இருந்தால் நல்ல தரமானது. நிறம் சற்றே மாறுபட்டு கொஞ்சம் பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்தால் தரம் குறைவாகும். தெளிவான கற்களே சிறந்தவை.

3. CAROT (எடை)

100 சென்ட் = 1 கேரட் இது வைரத்தின் எடையை குறிக்கிறது. வைரக் கல்லின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ண யிக்கப்படும்.

4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)

வைரக்கல் எந்த முறையில் பட்டை தீட்டப்பட்டுள்ளதோ அதை பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். பட்டை சரியாக தீட்டப் படாமல் இருந்தால் வைரத்தின் விலை குறைந்து விடும்.

இந்த நான்கு C க்கள் (4 Cs ) வைரம் தேர்வு செய்வதற்கான அடிப்படையாகும்.

தங்கக் கேரட் வைரக் கேரட் இரண்டும் ஒன்றுதானா ?

வைரத்தில் கேரட் (CAROT) என்கிற வார்த்தை அதன் எடையைக் குறிக்கும். தங்கத்தில் கேரட்(Karatage) என்கிற வார்த்தை தங்கத்தின் தரத்தைக் குறிக்கும்.

உ.ம் 24 கேரட் என்றால் 100$ சுத்தத் தங்கம் அதே 24 கேரட் வைரம் என்பது அதன் எடையைக் குறிக்கும் இரண்டும் வேறு வேறு பொருள் (Meaning) கொண்டவை.

வைரத்தில் `ரத்தப்பந்து` என்றால் என்ன?

வைரம் வளரும் போது ஆயிரத்தில் ஏதாவது ஒரு கல்லில் அதனோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் (மாதுளம் பழத்தின் முத்து நிறத்தில்) கார்னெட் (Garnet) என்கிற ஒருவகை ரத்தின கல்லும் சேர்ந்தே வளரும். வைரத்தை பட்டை தீட்டிய பிறகு இந்த சிவப்பு நிறம் நன்றாக தெரியும். இதை நம் ஊர் வியாபாரிகள் `ரத்தப்பந்து` என்பார்கள்.

டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?

1876ம் ஆண்டு ஜோஹன்னாஸ் டீபியர்ஸ் மற்றும் ஆர்ணால்டஸ் டீபியர்ஸ் சகோதரர்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் ஏராளமான வைரங்கள் கிடைத்தன. ஆப்பிரிக்காவில் இந்த இடத்தை ஸெஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) என்பவர் வாங்கி வைரங்களை தோண்டி எடுத்து பெரும் செல்வந்தர் ஆனார்.அந்த நிறுவனத்துக்கு டீபியர்ஸ் மைனிங் கம்பெனி என்று பெயரிட்டார். இது 1880 ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கப்பட்டது.

இன்று உலக வைர வியாபாரத்தில் 75சதவீதத்திற்கும் மேலாக இந்த நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் De Beers சகோதரர்கள் இங்கிருந்து வைரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த நிலத்தை சுமார் 500 டாலருக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?

சிறந்த பொறியியல் நுணுக்கத்துடன் ஒவ்வொரு பட்டையையும் குறிப்பிட்ட விகிதத்தில் சிறப்பாக தீட்டப்பட்ட வைரத்தை டைமண்ட் ஸ்கோப் என்ற கருவியின் மூலமாக பார்த்தால், அதனுள்ளே இருதயம் போலவும், அம்பு போலவும் துல்லியமாகத் தெரியும். இந்த வைரங்கள் அதிக ஜொலிப்புடன் விளங்கும் அதைத்தான் மேற் கண்டவாறு குறிப்பிடுக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

தென் ஆப்பிரிக்காவில் 1866ல் எராஸ்மஸ் ஜேக்கப் என்ற சிறுவனும் அவன் தங்கையும் ஆரஞ்சு நதியின் கரையில் விளையாடும் போது ஒரு பளபளப்பான கல்லைப் பார்த்து, அதை வீட்டுக்கு விளையாட எடுத்துச் சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த போயர் என்ற ஆங்கிலேயர் அவர்களது தாயாரிடம் அந்த கல்லை விலைக்குத் தருவீர்களா? என்று கேட்க, அவளோ பணமெல்லாம் வேண்டாம் என்று இலவசமாகவே கொடுத்துவிட்டாள். பிற்பாடு அதை (Boer)பரிசோதித்ததில் அது மிக அருமையான வைரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டைத் தீட்டாத கல்லின் எடை 21.23 காரட் இருந்தது. பட்டை தீட்டியபின் 10.73 காரட்டில் அருமையான வைரமாய் ஜொலித்தது. இதற்கு “யுரேகா” என்று பெயரிட்டனர். (அதாவது புதிய கண்டுபிடிப்பு என்று பொருள்). இது தான் ஆப்பிரிக்காவின் வைரக் கண்டுபிடிப்புக்கு ஆரம்பம் இந்த வைரம் தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லி மிசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலைஉயர்ந்த வைரங்கள் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?

இதற்கென்றே சில சட்ட திட்டங்கள், தரக்கட்டுப்பாடு முதலியவற்றை வகுத்து. அதை தர உறுதி செய்து சர்டிபிக்கேட் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கல்லும் முழுவதும் சீல் செய்யப்பட்டிருக்கும். அதில் கல்லுடைய எடை, நிறம், பட்டையின் விகிதம் முதலிய எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்காக பல அமைப்புகள் உலக முழுவதுமுள்ளன. சான்றிதழ் பெற்ற கல்லை நகையில் வைத்து பதித்த பிறகு, அது அதே கல்தானா, என்று எப்படி அறிவது?

இதற்கும் ஒரு முறை உள்ளது. அந்தக் கல்லின் பட்டையின் மேல் பகுதியும், கீழ்பகுதியும் சந்திக்கும் இடத்தை கர்டில் (GIRDLE)என்று குறிப்பிடுவோம். அந்த இடத்தில் லேசர் கதிரின் (LASER) மூலமாக ஒரு அடையாள நம்பரை எழுதி விடுவார்கள். அதை அழிக்கவே முடியாது. லென்ஸ் வைத்து பார்த்தால் தெரியும்.

விளம்பரங்களில் வைரத்தைப் பற்றி “EF” கலர், “FG” கலர் என்று குறிப்பிடுகிறார்களே, அது என்ன? வைரக்கல் நிறத்தை, ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள். “D” நிறம் மிக உயர்ந்த வெள்ளையை குறிக்கிறது. இந்த நிற வைரம் கிடைப்பது மிக அரிது. “E” “F” “G” ஆகிய நிறங்கள்தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படுகிறது. இவைகளில் வித்தியாசம் அதிகமாக இருக்காது. H,I என்று போகும்போது இன்னும் வெண்மை நன்றாக குறையும். J,K,L என்ற நிறங்கள் சிறிது சிறிதாக மஞ்சளாக ஆரம்பிக்கும். இப்படி `பளிச்` சென்ற தன்மைக்கு தகுந்தபடி “Z” வரை நிறம் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த பெரிய வைரம் கோகினூர் மட்டும்தானா? வேறு வைரங்கள் ஏதேனும் உண்டா ?
நிறைய உண்டு. அவை:

1. ரீஜென்ட் (Regent): இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில் இது குறிப்பிடத்தக்கது. இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் பிட் வைரம் (Pit Diamond) .

பட்டை தீட்டப்படாத பொழுது இதன் எடை 410 காரட்டுக்கும் மேல். 1700-ல் ஆந்திராவில் கோல்கொண்டாவில் இருந்து 72 கி.மீ. தெற்கில் உள்ள பர்க்கால் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இது இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரங்களில் ஒன்று.

அப்போது சென்னை கவர்னராக இருந்த தாமஸ் பிட் (இவர் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வில்லியம் பிட்டின் தாத்தா) என்பவரால் இந்த வைரம் சுமார் ஒரு லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு 140.50 காரட் எடையுள்ள வட்ட சதுரக் கல்லாக பட்டை தீட்டப்பட்டு, Pit வைரம் என்று பெயர் இடப்பட்டது. பிறகு 1717-ல் பிரெஞ்ச் அரசரால் 5 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு ரீஜென்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

இது பல கைகள் மாறி, கடைசியாக நெப்போலியனிடம் போய் சேர்ந்தது. நெப்போலியனுக்கு பணக் கஷ்டம் வந்தபோது, 40 லட்சம் டாலருக்கு இதை ஒரு தனவந்தரிடம் அடகு வைத்து பிறகு மீட்டார். இந்த வைரத்தை நெப்போலியன் தன் போர்வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார்.

இன்று இது பாரிஸ் நகரில் லூவர் மிசியத்தில் உள்ளது.

2. பைகாட் வைரம் (The Pigot Diamond):

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தின் எடை சுமார் 48 காரட்கள். 1775-ல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த பேரன் பைகாட் (Baron Pigot )என்ற ஆங்கிலேயருக்கு சில அரசு காரியங்கள் முடித்து கொடுத்ததற்காக ஒரு இந்திய இளவரசரால் பரிசளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு முதலில் தி கவர்னர்(The Governer)என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு பைகாட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1799-ல் இவர் இறந்த பிறகு 1801-ல் அவருடைய சந்ததியினர் இதை நெப்போலியனின் தாயார் லெட்டிசியா போனபார்டே(Letizia Bonaparte)என்பவருக்கு விற்றுவிட்டார்கள். இப்போது இருக்குமிடம் தெரியவில்லை.

3. ஷா வைரம் (Shah Diamond)

இது இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வித்தியாசமான வைரம். நான்கு புறங்களிலும் நீளமான பட்டையுடன், நிறம் சற்று குறைந்த, உட்புறம் முற்றிலும் சுத்தமான கண்ணாடிபோல் வடிவம் கொண்டது. இந்தியாவில் அகமது நகர் கவர்னராக இருந்த புர்கான் நிஜாம் ஷா என்பவருடைய பெயர் ஒரு பகுதியில் எழுதப்பட்டு உள்ளது. மற்றொரு பக்கத்தில் முகலாய அரசர் ஜஹாங்கீர் மகனுடைய பெயரும், இன்னொரு பக்கத்தில் பாரசீக அரசர் பாத் அலி ஷா (Fath Ali Shah) பெயரும் அவரவர் ஆட்சி புரிந்த வருடங்களை குறிப்பிட்டு அராபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இன்று இது ரஷியாவில் கிரம்ளின் மாளிகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆப்பிரிக்கா தவிர வேறு எங்கும் வைரம் கிடைக்கிறதா?

கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ரியோடின்டோ (Riotinto) சுரங்கம் மற்றும் ரஷ்யா, இஸ்ரேல், பிரேசில் இப்படி பல நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. இதைத்தவிர, ஒரு ருசிகர தகவல் என்னவென்றால், மனித உடலிலிருந்தும் வைரம் தயாரித்திருக்கிறார்கள்.அமெரிக்காவில் உள்ள நிணி நிறுவனம் இறந்துவிட்ட ஒருவரின் உடலை முழுவதும் சாம்பல் ஆக்கி அதில் இருந்து கார்பன் வேபர் டெபாஸிஷன் (Carbon vapour deposition method) என்ற ஒரு முறையில் ஒரு காரட் வைரத்தை பரிசோதனை முறையில் உருவாக்கி உள்ளது. ஆனால் இதற்கு ஆகும் செலவு, வாங்கும் வைரத்தை விட பல மடங்கு அதிகம்.

ஆனால் இந்த முறையில் வைரத்தை உருவாக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நம் முன்னோர்கள் “வைரம் பாய்ஞ்ச உடம்பு” என்றார்களோ என்னவோ!

இப்படி பல புதுமைகள் வைரத்திற்கு இருப்பதால்தான் என்றும் நம்மை அது ஈர்ப்பதாக உள்ளது

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் எது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது? தொடர்ந்து இயங்கும் பல்கலைக்கழகம் என்று பார்த்தால், எங்குமில்லை என்பதுதான் நமது உடனடி பதிலாக இருக்கும்.

கி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் துவங்கப் பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தருணத்திலே நாளந்தா பல் கலைக் கழகமானது ஓர் ஆப்கான் தாக்குதலில் பக்தியார் கில்ஜி என்ற கொடூர வெற்றி வீரனால் அழிக்கப்பட்டது.

இந்தியாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையமாக ஐந்தாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தனது 700 ஆண்டு இருப்பினை முடித்துக் கொண்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பழமை வாய்ந்த பலோக்னா பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும் போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக் கழகமாகவும் நாளந்தா விளங்குகிறது. அன்று அழிக்கப் படாமல், இன்று வரை நிலைத்திருந்தால் உலகிலேயே தொன்மையான பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கி யிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நாளந்தாவோடு ஒப்பிடப்படும் மற்றொரு பல்கலைக்கழகம் கெய்ரோவில் உள்ள அல்- அசார் பல்கலைக்கழகம். இதுவும் தொடர்ந்து நிலைக்க வில்லை. இது கி.பி. 970- இல் தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்திலே நாளந்தா 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அமைந்திருந்தது.

இது உண்மையிலேயே நாம் பெருமை பாராட்ட வேண்டிய பழமைத்துவமே! தற்போது இந்தப் பல்கலைக் கழகம் மறுபடியும் துவங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இப்பணியின் இடைக்கால நிர்வாகக்குழுவின் தலைவராக நான் இருப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும், 800 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சீரமைப்பதும் மிகவும் கஷ்டமாக கருது கிறேன். நாளந்தா ஒரு பழமை வாய்ந்த கல்வி நிலையம். உலகின் பல நாடுகளிலிருந்து, குறிப்பாக சீனா, திபெத், கொரியா, ஜப்பான் மேலும் ஒருசில ஆசிய நாடுகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் மாணாக்கரும் கவர்ந்திழுக்கப்பட்டனர். தங்கிப் படிக்கும் வசதி கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில் 10,000 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களைப் படித்தனர். சீன மாணவர்கள் குறிப்பாக யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்ற ஏழாம் நூற்றாண்டு மாணவர்கள் நாளந்தாவில் அவர்கள் கற்றதையும், பார்த்ததையும், கல்விமுறைகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

தற்செயலாக, பழைய சீன வரலாற்றைப் படிக்கும்போது நாளந்தாவில் மட்டும்தான் சீன அறிஞர்கள் பயின்றார்கள் என தெரிய வந்தது.

நாளந்தாவோடு, விக்ரமஷீலா மற்றும் ஓடந்தபூரி போன்ற ஏனைய பல்கலைக்கழகங்களும் அருகாமையில் இருந்தன. யுவான் சுவாங் நாளந்தாவில் படித்தாலும், இந்த கல்வி நிறுவனங் களைப் பற்றியும் எழுதியுள்ளார். நாளந்தாவின் பாரம்பரியத்தைப் பற்றி நினைக்கும் தருவாயில், நாளந்தாவின் சமூக கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

விக்ரம்ஷீலா மற்றும் ஓடந்தபூரி போல நாளந்தாவும் ஒரு புத்த மத கல்வி மையம், மேலும் இந்த கல்வி மையங்களின் முக்கிய நோக்கம் புத்தமத தத்துவத்தைப் பற்றியும், பயிற்சியைப் பற்றியும்தான். மருத்துவம், சுகாதார நலம் போன்ற ஒரு சில துறைகள் புத்த கருத்துகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தன. மற்ற துறைகளான கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவை புத்த கலாச்சாரத்தின் தன்மையுடன் இருந்தன. ஏனைய பிற புத்தமத அறிவுசார் கேள்விகளை, பகுத்தாராய்வதில் ஆர்வத்தோடு ஒப்பிட்டு தொடர்புபடுத்தின.

நாளந்தா பல்கலைக்கழக மாணவரான இட்சிங் சமஸ்கிருதத்தி லிருந்து சீன மொழிக்கு தாந்திரீக புத்தகங்களை மொழி பெயர்த்தவர்களுள் ஒருவர். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு களில் தாந்திரீகத்தை பலரும் பின்பற்றினர். தாந்திரீக பண்டிதர்கள் கணிதத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், தாந்திரீக கணித மேதைகள் சீன கணிதத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
ஜோசப் நீதம் கூறுவதுபோல, “”மிகவும் சிறப்பு வாய்ந்த தாந்திரீகர் இஜிங் ஆவார். இவர் சிறந்த சீன வானியல் வல்லுநரும், கணித மேதையும் ஆவார். இட்சிங் நாளந்தாவின் மாணவர் அல்ல. ஆனால் சமஸ்கிருதத்தில் சரளமாக பேசும் திறமையோடு இருந்தார். ஒரு புத்த மத சன்னியாசியாக இட்சிங் இந்திய மத சார் இலக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் வானியலைப் பற்றிய இந்திய எழுத்துகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய சொந்த மத தொடர்பைக் கடந்து, இட்சிங் அவர்களின் கணித மற்றும் அறிவியல் சம்பந்தமான வேலைகள் மத அடிப்படையில் இருக்கின்றன என்பது தவறாகி விடும். இட்சிங் குறிப்பாக பஞ்சாங்கம் கணக்கிடுவதிலும் கவனம் செலுத்தினார். மேலும் அரசின் ஆணைப்படி, சீன நாட்டுக்கு ஒரு புதிய காலண்டரையும் உருவாக்கினார்.

எட்டாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த இந்திய வானியலாளர்கள் பஞ்சாங்கத்தைப் படிப்பதில் முக்கோணவியலை சிறப்பாக பயன் படுத்திக் கொண்டனர். இந்த இயல்பானது உலகளாவிய கருத்துப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அந்த நேரத்தில் மேற்கு நாடுகளிலும் இது சிறப்பாய் பரவியது. இந்த காலத்தில் தான் இந்திய முக்கோணவியல் அரேபிய நாடுகளில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதுவே எதிர்காலத்தில் ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பொதுவான அறிவு உத்வேகம், குறிப்பாய் ஆராயும் மற்றும் அறிவியல் கேள்விகளின் மேல் உள்ள ஆர்வம்தான் பழைய நாளந்தாவில் இருந்த பாராட்டப்படக்கூடிய விஷயம். ஒரு மதசார் அமைப்பாக இருந்தது நாளந்தாவுக்கு தனிச் சிறப்பு அல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மாறாக நாளந்தா மதத்தையும் தாண்டி பொதுவான அறிவுசார், அறிவியல் படிப்புகளை வளர்த்தெடுத் தது. இது பலருக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியது.

சர் ஐசக் நியூட்டன் மதம் சார்ந்தவர். ஆனால் கடவுளை அறிய முற்படாதவர். இவர் இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வர். ஆனால் அவருடைய கல்லூரியோடு எந்த பிரச்சினையும் கொள்ளவில்லை. இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டுமெனில், பதுவாவில் இருந்த கிறிஸ்தவ கல்லூரியில்தான் கலிலியோ கலிலி படித்தார்.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தகைய பிரச்சினை எழுந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பல ஆவணங்கள் வெளிவந்த பிறகு, நாளந்தாவில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவில் குழப்பங்கள் இருந்ததா என்பதை நாம் அறிந்து கொள்வோம். மிகத் தெளிவாக தெரிவது என்னவென்றால், இந்த புத்தமத அமைப்பானது, நாளந்தா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே பகுத்தாய்வு மற்றும் அறிவியல் பாடங்களை கற்பதற்கு பல வாய்ப்பு களைத் தந்தது.

நாளந்தாவில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் பக்தியார் கீல்ஜி மற்றும் அவரது படை வீரர்களால் தீக்கிரையாகின. ஆகவே, அங்கு படித்த மாணவர்கள் பார்த்தவற்றைப் பதிவு செய்தவற்றைத்தான் நம்பியாக வேண்டும்.

மேலும் யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்றவர்கள் எழுதியதைத்தான் நாம் அதிகம் நம்பிட வேண்டும். அதன் அடிப்படையில் பார்க் கும்போது அங்கு நடத்தப்பட்ட பாடங்களும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட துறைகளானவை, மருத்து வம், பொதுச் சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக் கலை, மதம், வரலாறு, சட்டம், மொழியியல் என்பதும் தெளிவாகிறது.

இட்சிங் மற்றும் யுவான் சுவாங் போன்றோர் கணிதப் படிப்பிலே பங்கேற்கவில்லை. இந்தியக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இட்சிங் போன்றோர் நாளந்தாவில் படிக்கவில்லை. இந்தியா, சீனா அல்லது உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மற்றவர்கள் இருந்திருக் கலாம். ஆனால் அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. இதைப் பற்றிய ஒரு சாட்சி கண்டிப்பாக வரும் என்பதுதான் எனது நம்பிக்கை.

எழுத்துக்களையும், எண்களையும் தட்டச்சு செய்ய `டைப்ரைட்டர்’ என்கிற தட்டச்சு எந்திரம் உதவி செய்யுது. இதன்மூலம் தகவல்களை ஆவணப்படுத்துவதில் ஒரு ஒழுங்குமுறை தோன்றியது. ஆனால், இந்த தட்டச்சு எந்திரத்தை எதற்காக கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சா, நீங்க ஆச்சரியப்படுவீங்க!

பார்வையற்றவர்களுக்கு உதவுற மாதிரி தான் முதன்முதல்ல தட்டச்சு எந்திரத்தை வடிவமைச்சாங்க. முதன்முதலாக அமெரிக்காவுல 1827-ம் ஆண்டு வில்லியம் பர்ட் என்பவர் ஒரு தட்டச்சு எந்திரத்தை உருவாக்கினார். அது `டைப்போகிராபர்’னு அழைக்கப்பட்டுச்சு. ஆனால், அதனுடைய மாதிரி எதுவும் இப்ப கிடையாது. அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தட்டச்சு எந்திரத்தை வடிவமைக்க முயற்சி செஞ்சாங்க. 1873-ம் ஆண்டு அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான தட்டச்சு எந்திரம் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் ஷோவ்ஸ், சாமுவேல் சோல், கார்லோஸ் கிளிட்டன் ஆகிய மூன்று அமெரிக்கர்களும் சேர்ந்து அதை தயாரிச்சாங்க. அதன்பின்னர் பல்வேறு வசதிகளுடன் தட்டச்சு எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. கணினிகளுக்கு முன்னோடியா இதைச் சொல்றாங்க. தற்போது இதன் பயன்பாடுகள் குறைவா இருந்தாலும், கணினியை எளிதா பயன்படுத்த தட்டச்சு எந்திரம் உதவுது

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.

அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு

கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.

ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.

உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.

அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்

வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவு களாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன. கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்துமதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்தில் கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிலிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினார். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக்கோயில் மட்டும் அல்ல. உலகின் மிகப் பெரிய கோயிலும் கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்கத் திசை நோக்கிய இக்கோயில் விஷ்ணுவுக்காக கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.

“அங்கோர்’ என்கிற சொல் “நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. “வாட்’ என்றால் கோயில். “அங்கோர் வாட்’ என்பது நகரக்நாட்டு அரண்மனைக்கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப்பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக்குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாசமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. நான் சென்ற சமயம் அங்கே பாராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், அந்தப்படிகள் மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில் ராமாயண, மகாபாரதக்காட்சிகள் காணப்படுகின்றன. அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்த பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.

அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. பொருள் வசதி, மன்னர்களின் விருப்பம் போன்றவற்றைப் பொருத்துக் கட்டடப்பணிகளில் விரைவு, தாமதங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவ்வாறு முடிக்கப்படாத கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது பயோன். கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்) இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன்தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இருபக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப்பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களில் காண முடிகிறது. அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் பத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்கிற யூகமும் வலுவானது. அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உற்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மொத்தம் முப்பத்தியேழு கோபுரங்கள். பெரும்பாலான கோபுரங்களின் நான்கு பக்கங்களிலும் லோகேஸ்வரரின் (ஏழாம் ஜெயவர்மனின்?) முகங்கள், அவற்றைத் தவிரவும் பல்வேறு மூலைகளிலும் மனவெழுச்சியை உண்டாக்கும் முகங்கள் ஏராளமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் நடந்து செல்லும்போது நாம் முகங்களால் சூழப்பட்டுக் கண்காணிக்கப்படும் உணர்வு வலுக்கிறது. அதன் உட்புறவாயில்கள் வழியே நுழைந்துவருவது மாயத்தை அனுபவிப்பதற்கு நிகரானது. படை வீரர்கள் ஆயுதங்களை தாங்கிக்கொண்டும் யானைகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படுகின்றன.
அங்கோரிலுள்ள எந்தக்கோயிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கள் கட்டி முடிக்கப்படவில்லை. முடிக்கப்பட்ட பகுதிகளிலம் பல சிற்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புத்த கோயிலாக இருப்பினும் பயோனில், லிங்கங்களும் காணப்படுகின்றன. இவை பின்னர் அங்கே வைக்கப்பட்டிருக்கலாம். சிற்பங்கள் மக்களுடைய அன்றாட வாழக்கையைப் பதிவுசெய்து உருவாக்கப்பட்டுள்ளன. கடைத்தெருவில் உள்ள பெண்கள், கோழிச்சண்டையைப் பார்க்கும் மனிதர்கள் எனப் பல்வேறு காட்சிகள் அங்கே தரப்பட்டுள்ளன. மூடிய கண்களும் திறந்த கண்களுமாகப் பெரிய தேவமுகங்களுக்கிடையே சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ள இக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல என்பதை உறுதி செய்கின்றன. “சுலபமாக நம்மால் பார்க்கவியலாத, சூர்யஒளி எளிதில் புகாத மூலைகளிலும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. வழிபாடு செய்ய இயலாவிடினும் இவ்வகையில் சிற்பங்களை வடித்ததன் மூலம் கெமர்கள் கடவுளர்களின் உலகத்தைக் கோயில்களில் உருவாக்கியதாக நம்பிக்கைகொண்டிருந்தனர்.’ என்று அங்÷õர் கோவில்கள் பற்றி பிரதான ஆய்வாளர் எனப் பெயர் பெற்றுள்ள ஜார்ஜ் கோடிஸ் கருதுகிறார். இந்தக் காரணங்களுக்காகத்தான் இக்கோயில்கள் எழுப்பப்பட்டன என்று அறுதியிட முன்வரும் எவருக்கும் இவை பெரும் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றில் நூலகங்கள் என்றழைக்கப்படும் கட்டடங்களும் இருக்கின்றன. ஒவ்வொர கட்டடமும் இரண்டு கட்டுகள் கொண்டுள்ளது. அரசர் மற்றவர்களுடன் ஆலோசிக்கவும் ஆரூடம் கேட்கவும் இந்த நூலகங்களைப் பயன்படுத்தி இருக்கலாம். இவை ஆடம்பரங்களற்ற கற்கட்டடங்கள். உருண்ட தூண்களால் தாங்கப்பெற்றுள்ளன. புடைப்புச் சிற்பங்கள் எதுவுமில்லை. இங்கே கல்வி கற்பிக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே கல்விக்கூடங்களாகவும் இவை பயன்பட்டிருக்கும்.

“கடவுளர்களுக்கு நிகரானவர்கள் தாங்கள்’ என்று அரசர்கள் கருதியதால் இவை நினைவுச் சின்னங்கள் என்று கருதவும் வாய்ப்புள்ளது. ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தையின் நினைவிற்காகக் கட்டிய கோயில் “தா ப்ரோம்’ அங்குள்ள லோகேஸ்வரரைத் தன் தந்தையின் சாயலில் அவர் வளர்த்துள்ளார். அவருடைய மனைவிகளின் சிலைகளையும் அங்கே காணலாம். அவருடைய இரண்டாம் மனைவி, கல்வியைப் பரப்பப் பெரிதம் முயன்றவர் எனச் சொல்லப்படுகிறது. கெமர் சரித்திரத்திலேயே ஏழாம் ஜெயவர்மனுக்கு இணையாக இன்னொரு அரசன் தோன்றியதில்லை எனலாம். தொழுநோய் அரசன் என்னும் பெயரில் சிலை ஒன்றுண்டு. அதன் அசல் கம்போடியாவின் தலைநகரான “நாம் பெங்க்கி’லுள்ள பொருட்காட்சியகத்திற்குச் சென்று விட்டது. அங்கோர் தோமில் அதன் நகல் திறந்தவெளியில் மண்டபம் ஒன்றின் மீதுள்ளது. ஏழாம் ஜெயவர்மன்தான் அந்தத் தொழுநோயாளி எனச் சொல்பவர்கள் உண்டு. அவர் பல மருத்துவமனைகளைக் கட்டியுள்ளதை வைத்து இவ்விதம் முடிவுக்கு வந்திருக்கலாம். நோயைத் தன் ஆட்சியில் கட்டுப்படுத்தவே மருத்துவமனைகளைக் கட்டினார் எனச் சொல்பவர்கள் உண்டு.

அவர் திறமைசாலியாகவும் வலிமையுடையவராகவும் விளங்கினார் என்பதற்கு அவரது ஆட்சிக்காலம் சாட்சியாக விளங்குகிறது. சிம் ரெப் இறுதியாக தாய்லாந்தின் வசம் இருந்தது. அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கைக்கு மாறியது. பிரெஞ்சுக்காரர்களால்தான் அங்கோர் கோயிலகள் உலகப் புகழ் சுத்தம் செய்து அங்குள்ள கோவில்களை அவர்கள் தாம் புனருத்தாரணம் செய்தனர். பிரெஞ்சுக்காரர்கள் பல சிற்பங்களைத் திருடிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆந்ரே மால்ரா அங்குள்ள சிலைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார். பிரெஞ்சு காலனியின் சுவடுகளைச் சிம் ரெப்பில் பல இடங்களிலம் காண முடியும். சிம் ரெப்பில் உள்ள ஒட்டல்கள் புதுவையிலுள்ள கட்டடங்களை நினைவுப்படுத்துகின்றன. பிரெஞ்சு மொழி பேசுகிற பழைய தலைமுறையினர் அங்கு நிறையக் காணப்படுகிறார்கள். பிரெஞ்சு வழிகாட்டிகள் எளிதில் கிடைக்கிறார்கள்.கிட்டத்தட்ட எழுபது அங்கோர் கோவில்கள் சிம் ரெப் நகரில் காணப்படுகின்றன. அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். இரண்டு நாட்களில் இவற்றையெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதுபவற்றை மீண்டும் பார்த்துச் செலவிடலாம்.

கம்போடிய மக்கள் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகம் பலரும் பள்ளிக்குச் சென்றதில்லை. புத்த துறவிகளாக வாழும் விருப்பம் இளைஞர்கள் பலருக்கு இருக்கிறது. அதற்காகப் படிக்கச் செல்பவர்கள் குடும்பத்தினர் படுகிற துயரத்தைப் பார்த்துவிட்டு அதைப்பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குப்போகிறார்கள். “டுக் டுக்’ என்ழைக்கப்படம் வாகனங்களை (இது மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்ட, பயணிகள் மூவர்வரை அமர்ந்து செல்லும் நான்கு சக்கர வண்டி) ஓட்டுகிற ஆங்கிலம் பேசுகிற இளைஞர்கள் சிலர் இவ்வாறு துறவைத் துறந்தவர்கள்தான். அரசர்கள்மீதான மரியாதை இன்னும் தொடர்கிறது. யாராவது சூர்யவர்மன், ஜெயவர்மன் என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்களா எனக்கேட்டால் அரசர்களுடைய பெயரை நாம் எப்படி வைத்துக்கொள்வது எனப் பதிலுக்குச் நம்மைப் பார்த்துக்கேட்கிறார்கள். தெருவோரக் கடைகளிலும் சுற்றுலா இடங்களிலும் இளைஞர்களே வேலை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் நானாவிதப் பொருட்களையும் கைகளில் வைத்துக்கொண்டு “ஒன் டாலர், ஒன் டாலர்’ எனக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். சாலையோர உணவு விடுதிகளில் ஒரு டாலருக்கு நல்ல உணவு கிடைக்கும். உடனே எங்கும் கிடைப்பது அசைவம்தான். ஒரு லிட்டர் அளவு சுவையான இளநீர் தரும் தேங்காய்களும், ஒரு டாலருக்கு கிடைக்கின்றன.

அமெரிக்க டாலர்தான் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வேண்டப்படும் செலாவணி. உள்நாட்டுக் கரன்சியான ரியெல் அவர்களுக்குள் சங்கேதமாகப் புழங்குகிறது. அதை வெளிநாட்டவர்கள் கொடுத்தால் சட்டை செய்வதில்லை. மக்கள் சுற்றுலாப் பயணிகளை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். கெமர் மொழி பேசப்படுகிறது. ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிற இளைய தலைமுறை அங்கு உண்டு. கம்போடியர்களைத் தவிர, சீனர்கள், வியட்நாமியர்களும் அங்கு வாழ்கின்றனர். நவம்பரிலிருந்து பிப்ரவரிவரை பயணத்திற்குகந்த காலமாகக் கருதப்படுகிறது. அக்டோபர் மாதக் கடைசியில் நான் சென்ற சமயத்தில் மழைக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. மழை தன் சொச்சத்தை அவ்வப்போது கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தவண்ணம் இருந்தது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி தரை எங்கும் பச்சையாய்ப் பூத்திருந்தது. ஆனால் பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் நாள் முழுதும் தணியாத வெப்பம். மழை விட்ட உடனேயே லேசாக வியர்த்தது.

அங்கோர் கோயில்களில் இப்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஒரு சில இடங்களில் பௌத்தர்கள் ஊதுபத்திகளை வைத்துச் சிறிய ஆராதனைகள் புரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. கோயில்கள் முற்றாகவே சுற்றுலா இடங்களாக மாறிவிட்டன. சாலைகள் எழில் மிகுந்த கானகங்களினூடே செல்வதால் பயணிகள் பலரும் விரும்பி சைக்கிள்களில் செல்கிறார்கள். இவற்றினூடே கோயில்களைப் புனருத்தாரணம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டரின் மேற்பார்வையில் அவை செய்யப்படுகின்றன. பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.

நமது ஊர் ஆட்கள் இங்குள்ள கோயில்களுக்கு சகட்டுமேனிக்கு வெள்ளையடித்து மிலிட்டரி ஓட்டல்களில் எரியும் பச்சை ட்யூப் பல்புகளை மாட்டிவிடுவதைப் போன்றதல்ல அது. மிகவும் கவனத்துடன் பழமையைப் புதுப்பிக்கிறார்கள். புதுப்பிப்பது இயலாதென்றால் மேலும் சீர்கேடடையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆர்கேயாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவினர் சில வருடங்களுக்கு முன்னர் அங்கே சென்று அங்குள்ள ஓட்டைகளில் கான்கிரிட்டை ஊற்றி நிரப்பி, தங்களாலான ‘நற்பணி’யைச் செய்திருக்கிறார்கள். பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அதை நிறுத்திக்கொண்டார்கள். அங்கோர் கோயில்கள் செங்கற்கள், சுண்ணாம்புக் கற்கள், செம்பாறாங் கற்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டவை.

அங்கோர் கோயில்களில் சிவன், விஷ்ணு, புத்தர் சிலைகள் ஏராளம். அதேபோல் அப்சரஸ் தேவதைகள் எல்லா இடங்களிலும் தென்படுகின்றனர். பற்கள் தெரியச் சிரிக்கும் அப்சரஸ்கள் அரிதாக உள்ளனர். ராமாயண, மகாபாரதப் புராணக் காட்சிகள் கோயில் சுவர்கள், தூண்கள் என்று எல்லாவற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் முகப்புகளும் புராணக் கதாபாத்திரங்களும் கெமர் கலாச்சாரத்தையும் அம்மக்களின் உருவங்களையும்தாம் கொண்டுள்ளன. இந்திய முகங்களை அவற்றில் காண முடியாது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கெமர்கள் தங்களுடையதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவு அது.

தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பிறநாடுகளிலும் இப்புராணங்கள் இவ்வாறே அங்குள்ள கலாச்சாரப் பின்னணிகளுடன் உள்முகப்படுத்தப்பட்டுள்ளன. தவிரவும் இச்சிற்பங்களை வடித்தவர்கள் கெமர் சிற்பிகள். கெமர் மக்கள் இந்து, புத்த மதங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாக இதன் மூலம் அறியலாம். படையெடுப்பாலோ வன்முறையாலோ மதம் அங்கே திணிக்கப்படவில்லை எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசர்களின் காலனியாகவும் கம்போடியா ஒருபோதும் விளங்கியதில்லை. இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதம் பல நாடுகளிலும் பரவிப் பல்வேறு குணங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் வேரூன்றிய இந்து மதம் எத்தகைய மாறுதல்களுடன் கம்போடியாவில் குடியேறியது என்பதை அங்கோர் சிற்பங்களை வைத்து ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. இங்கிருந்து சென்ற வியாபாரிகள் வாயிலாகத்தான் இந்து மதம் அங்கே பரவியிருக்கிறது. ஆனால் ஆட்சியை நிலைநாட்டத் தொடங்கியவர்கள் அங்குள்ள கலாச்சாரத்திற்கு இணக்கமான ஒரு மதமாக இந்து மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அடிமைகள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பிறப்பை வைத்துக் கொடுமைகள் புரியும் இந்து மதக் கூடா நெறிகள் அங்கே இருந்திருக்கமாட்டா. கோயில் நுழைவு சமூகத்தினரின் எப்பிரிவுக்கும் மறுக்கப்பட்டிருக்காது. கோயில் சுவர்களில் எல்லா மக்களின் வாழ்க்கை முறைகளும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதால் அது எல்லோருக்குமான அரங்கமாகப் பயன்பட்டிருக்கக்கூடும். தவிரக் கம்போடிய மக்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை அசைவ உணவுப் பழக்கம் உடையவர்கள். எனவே உணவுப் பழக்கத்தை வைத்துத் தீண்டத்தக்கவர், தகாதவர் என்னும் பாகுபாடுகள் உண்டாகியிருக்க மாட்டா. இந்தியாவைப் போலன்றிக் கீழைநாடுகளில் இந்து மதம் பின்பற்றப்படாவிடினும் அது குறித்து இன்றுவரை அங்கே ஒரு நல்ல அபிப்பிராயம் நிலவுகிறது. சாதிப் பாகுபாடுகள் அங்கு வேர்விட்டிருந்தால் இந்து மதம் வெறுக்கப்பட்டிருக்கும். சுருக்கமாகக் கூறினால் கம்போடியாவில் இருந்த இந்து மதம் இந்தியாவிலுள்ள இந்து மதமல்ல.

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் அவர்களது கற்பனையை மெய்யாகவே ஆட்கொண்டிருந்தன. அரசர்களைப் போலவே மக்களும் புராணங்கள் மீதும் மதக் கோட்பாடுகளின் மீதும் பெரும் நம்பிக்கைகள் கொண்டிருந்ததாலேயே கெமர் ஆட்சிக் காலத்தில் பல கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன. புத்த மதத்தைப் பொருத்தவரை அவர்கள் பின்பற்றுவது ஹீனயானம். தெரவாடா பௌத்தம் என்று இது அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, பர்மா, ஸ்ரீலங்கா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் இது செல்வாக்கு பெற்றுள்ளது.

இந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் அங்கே பெரிய பூசல்கள் எழுந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லை. ராஜ விஹாரா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தா ப்ரோம் கோயிலில் நுழைந்தவுடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள புத்தர் சிற்பம் ஒன்று அங்குள்ளது. அதில் புத்தர் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார். தரையில் மடிந்த அதே கால்கள் சற்றே மடக்கினாற்போல் தெரியுமாறு அந்தச் சிற்பத்தின் மீது மேலும் இரண்டு கோடுகள் வரைந்தாற்போல் செதுக்கப்பட்டுள்ளன. இதே போன்று வேறு சில சிற்பங்களும் உள்ளன.

தா ப்ரோம் கோயிலைக் கட்டத் தொடங்கிய ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தினன். அவனுக்குப் பின் வந்த இந்துவான இரண்டாம் இந்திர வர்மன் அக்கோயிலைக் கட்டி முடித்தான். முதலில் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் சம்மணக் கால்களை மடக்கி இந்துக் கடவுள் போலும் அது தோற்றமளிக்க வைக்கப்பட்டுள்ளது. உடைப்போ சிதைப்போ இல்லாமல் சிலை இரு மதத்தின் கடவுள்களாகவும் விளங்குவதைப் புத்த, இந்து மதங்கள் ஒன்றின் மீது மற்றொன்று கவிந்தாற் போல் உறவுகொண்டிருந்ததன் உருவகமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கம்போடியாவிலுள்ள அங்கோர் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் புத்த, இந்து மதங்களின் வம்சாவளியினராக ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருந்தனர். இரண்டு மதங்களுக்குமிடையே சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கொண்டாலும் கொண்டும் கொடுத்துமான ஒரு நீண்ட உறவு அங்கு நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் கம்போடியாவில் இவ்விரு மதங்கள் புகுமுன் அங்கிருந்த மதம், அதன் சடங்குகள், புராணங்கள் என்னென்ன என்பன பற்றியெல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள் எவையுமில்லை.

பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதால் மக்கள் சலிப்புற்று கெமர் ஆட்சிக்கு முடிவுகட்டும் விதமாகத் தங்கள் அரசர்களை நோக்கிப் படையெடுத்து வந்த எதிரிகளை இருகரம் நீட்டி வரவேற்றார்கள் என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது தவறான யூகம் என நினைக்கிறேன். மக்கள் வெறுப்புற்றிருந்தால் அவர்கள் ஏழு நூற்றாண்டுகளாக ஒரு செயலை இந்து மதம் புத்த மதம் என்று மாறி மாறிக் கோயில் கட்டுமானப் பணிகளில் தொடர்ந்திருக்கமாட்டார்கள். கோயில்கள் தவிர மருத்துவமனைகளும் கட்டப்பட்டன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். எப்படித்தான் இவ்விதம் கோயில்களை மக்கள் கட்டினார்களோ என்கிற வியப்பிற்கான விடையாக அவர்கள் சலிப்புற்று வெறுக்கும் வகையில் பிழியப்பிழிய வேலை வாங்கப்பட்டார்கள் எனக் கூறுவது கிழக்கின் உணர்வைப் புரிந்துகொள்ளாத மேற்கின் கற்பனையாகும். ஏன் இன்றைய கம்போடியர்களாலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையோவென எண்ணவைக்கிறது.

‘அங்கோரைப் படைத்த மக்களால் எதையும் செய்ய முடியும்’ எனக் கொக்கரித்த சர்வாதிகாரி போல்பாட் கம்போடிய மக்கள் அனைவரையும் கிராமப்புறங்களை நோக்கித் துரத்தி அவர்களை விவசாய மண்ணில் கடின உழைப்பில் ஈடுபடவைத்தான். எதிர்த்தவர்களைக் கொன்றொழித்தான். கம் போடியா கொலையுண்ட பூமியாகியது. எந்தச் சக்தி அங்கோர் கோயில்களைக் கட்டுமாறு அவர்களை இயக்கியது என்பதை அறியாத போல்பாட்டின் படைகள் போரின் போது அங்கோர் கோயில்களில் ஓடி ஒளிந்த மக்களை வேட்டையாடியதுடன் கோயில்களையும் நாசமாக்கின. பல புத்த இந்துக் கடவுள்களின் கற்சிரசுகள் கொய்யப்பட்டன. நிலமெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது நடந்தவர்களை முடமாக்கின. பொய்க்கால்களைப் பூட்டிக்கொண்டு இசைமீட்டிப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களைக் கோயில் வாயில்களில் காண முடிகிறது.

அரிசி, பட்டு தவிர சுற்றுலாத் துறையிலிருந்துதான் அவர்களது வருமானம். அங்கோர் கோயில்களைப் பார்க்க ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியக் கலாச்சாரம் மற்றும் கட்டடக் கலையின் கணிசமான பாதிப்பு கொண்ட அங்கோரைப் பார்க்க வருபவர்களை இந்தியா வருமாறு அழைக்க இந்திய சுற்றுலாத் துறை முயல வேண்டும். பல்லவ காலத்துக் கட்டடக் கலையின் பாதிப்புகளும் அவற்றில் இருப்பதால் தமிழ் நாட்டுச் சுற்றுலாத் துறையும் பார்வையாளர்களைத் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு ஈர்க்க முயன்றால் அது நல்ல விளைவை ஏற்படுத்தும். அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்து நமது கோயில்களைக் காட்டிவிட்டுத் திருப்பி அனுப்பினாலேயே போதும். அவர்களே கம்போடியாவையும் இந்தியாவையும் தொடர்புபடுத்திப் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி விடுவார்கள். சுற்றுலா வாயிலாக வருவாய் மட்டுமின்றி ஒப்புநோக்கில் ஆய்வுகளுக்கும் இது வழிவகுக்கும். அவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் கோயில் கட்டடக் கலையைக் கெமர்கள் இந்தியாவிலிருந்து தான் முற்றாக எடுத்துக்கொண்டனர் என்றோ இந்தியக் கலையைத்தான் அவர்கள் அங்கே செழுமைப்படுத்தினர் என்றோ சொல்லமாட்டார்கள் என்று நம்புவோமாக. கெமர்களின் கலை தனித்தன்மை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அங்குள்ள பிரமிட் வடிவ கோபுரங்களை இந்தியக் கோயில்களில் காண முடியாது.

அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங்க், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். அவற்றை மனதில் கொள்கிறார் போல் பார்க்கச் சில நாட்கள் தேவை. நான் மூன்று நாட்களை அங்கே செலவிட்டேன். இரண்டு நாட்களில் இவற்றை யெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதியவற்றை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.

சிம் ரெப்பிற்கு வந்து போகும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொருளாதாரத்திற்கேற்பத் தங்குமிடங்கள், உணவு விடுதிகளைத் தேடிக்கொள்ள முடியும். பாங்காக்கிலிருந்து சாலை வழியே செல்பவர்கள் பொய்பெட்டில் (கணிடிணீஞுt) விசாவைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கோரைச் சுற்றிப் பார்க்கும்போது நல்ல வழிகாட்டியின் துணையை இரண்டு நாட்களுக்காவது பெறுவது அவசியம்.

இன்று அங்கோர் பூமி தெளிந்த நீரோடையின் அழகைப் பெற்றுள்ளது. சிதிலமடைந்திருப்பினும் துப்புரவுடன் துலங்கும் அக்கோயில்கள் ஒருவேளை இவ்வாறுதான் ஆரம்ப முதலே படைக்கப்பட்டனவோ என்று எண்ணுகிற விதத்தில் கம்பீரம் குலையாது நிற்கின்றன. உலக அதிசயங்கள் என்று அதிகாரபூர்வமான பட்டியலில் அவை இடம்பெறாவிடினும் அவற்றைப் பார்ப்பவர்கள் அவ்விதமே கண்டுகொள்வார்கள் என்பது உறுதி.
மிகப் பரந்த நிலத்தில் கோயில்களை மட்டுமே கொண்டுள்ள நகரம் அங்கோர். விடியலிலும் பொழுது சாய்தலிலும் அதன் கோயில்களைப் பார்க்கும்போது காலத்தைக் கடந்து வாழ்வது என்பது என்ன என்பதை உய்த்து உணர முடிகிறது. இரவு ஆரம்பிக்கிறபொழுது சுற்றுலாப் பயணிகள் முற்றாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஆள் நடமாட்டம் சிறிதும் அற்ற அமைதியான பூமியாக மாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கும்போது கெமர்களின் ஆட்சி அங்கு மீண்டும் திரும்பிவிட்டது போன்றே தோற்ற மளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக அடர்ந்த காடுகளாகவும் புதர்களாகவும் மண்டிக்கிடந்த நிலையில் எவருடைய கண்காணிப்பு அக் கோயில்கள் மீது இருந்ததோ அதே லோகேஸ்வரரின் கண்காணிப்பு அந்த இருளில் முன்போலவே தொடர்கிறது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget