கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!
கம்ப்யூட்டர் வாங்கியபோது திரை எப்படி தோன்றியதோ, அப்படியே சிலர் வைத்திருப்பார்கள். பலருக்கு வண்ணக் கலவை பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு அதில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து படிப்பதில் சிரமம் இருக்கலாம். இருந்தாலும் கம்ப்யூட்டர் இப்படித்தான் காட்சி அளிக்கும் என்று எண்ணி அப்படியே பயன்படுத்துவார்கள். அதெல்லாம் வேண்டாம். நம் விருப்பப்படி திரைத் தோற்றத்தினை அமைத்துக் கொள்ளலாம். இதனைத்தான் விண்டோஸ் டிஸ்பிளே என்று கூறுகிறார்கள். இவற்றில் பல அம்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அவை என்ன மற்றும் எதனைக் குறிக்கின்றன என்று அறிந்து கொண்டால், நம் கம்ப்யூட்டர் நம் மனதிற்கேற்றபடியான தோற்றத்தில் இருக்கும். அவை குறித்து இங்கு காணலாம்.
டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதற்கான விண்டோவினை டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து பெறலாம். இதனையே கண்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று அங்கு Appearance and Themes பிரிவில் display கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு செல்கையில் Display Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் செட்டிங்ஸ் அமைக்க Themes, Desktop, Screen Saver, Appearance மற்றும் Settings என்னும் ஐந்து பிரிவுகள் தரப்பட்டிருக்கும். இதில் எந்த பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் Apply அல்லது OK என ஏதாவது ஒன்றில் அல்லது இரண்டிலும் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.
தீம்ஸ் (Themes) : தீம் என்பது ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேன்ஞ்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
டெஸ்க்டாப் (Desktop): இந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெஸ்க்டாப்பிற்கான பேக்ரவுண்ட் எனப்படும் பின்னணியில் தெரியும் படத்தை அமைக்கலாம். அந்த விண்டோவில் கொடுத்துள்ள படங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆன்லைனில் சென்று ஏதேனும் படம் ஒன்றை எடுத்து அமைக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள படங்களையும் பேக்ரவுண்ட் படமாக அமைக்கலாம். அது உங்கள் போட்டோவாகவோ அல்லது கார்ட்டூன் கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். இந்த விண்டோ மட்டுமின்றி இத்தகைய பட பைல்கள் அல்லது இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் உங்கள் மனதைக் கவரும் படங்கள் ஆகியவற்றில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும்மெனுவில் Set as Desktop Background என்பதில் கிளிக் செய்தும் பேக்ரவுண்டை அமைக்கலாம். Desktop Items என்ற விண்டோவினைப் பெற இங்கு Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும். இதில் General மற்றும் Web என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இதில் General