ஜப்பானில் சக்கை போடு போடும் எந்திரன்!
முத்து ஜப்பானில் ஓடிய போது அது ஏதோ லக் கில் ஓடியது என்றுதான் பலரும் நினைத்தனர். ரஜினியின் எதிரிகளுக்கு இது ரொம்பவே வசதியாக இருந்தது. ப்ளூக்ல அடிச்ச ஜாக்பாட் என்று திருப்திப்பட்டுக் கொண்டனர். ஆனால் இந்தமுறை அப்படியெல்லாம் இருந்துவிட முடியாது. சென்ற மாதம் எந்திரன் ஜப்பானில் வெளியானது. பஞ்சத்துக்கு இரண்டு மூன்று தியேட்டர்களில் வெளியீடுவார்களே... அப்படியெல்லாம் இல்லை. மொத்தம் 1300 தியேட்டர்கள். எல்லா தியேட்டர்களிலும் திருவிழாக் கூட்டம். சும்மா வந்து கைத்தட்டிவிட்டுப் போனால் பரவாயில்லை.