வேர்ட் 2010 தொகுப்பைப் பொறுத்தவரை, அதன் மிகச் சிறந்த அம்சமாக, அதன் வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கூறலாம். நம் விருப்பப்படி, பல வசதிகளை அமைத்துக் கொண்டு எளிதாகச் செயல் படலாம். இந்த வசதி, வேர்ட் 2007 தொகுப்பில் தரப்பட்ட ரிப்பன் இடைமுகத்தில் தரப்படவில்லை. இத்தொகுப்பு தரும் அந்த வசதிகளை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று இங்கு பார்க்கலாம்.
நாம் பல வேளைகளிலும் ஒரு குறிப்பிட்ட ஃபோல்டரினுள் உள்ள மற்ற ஃபோல்டர்களின் பெயர்களை மட்டும் பிரதி எடுக்க விழைவோம். உதாரணமாக நம்மிடம் Music என்று ஒரு போல்டர் இருக்கிறது, அதனுள் இருக்கும் ஃபைல்களை