கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. கமல்ஹாஸன் கதை எழுதி, இணை தயாரிப்பு, இயக்குனர் மற்றும் கதாநாயகனாகவும் நடிக்கும் ‘விஸ்வரூபம்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளில் நடக்கும் என்றும், மதுரை, கோவை, சென்னை என மூன்று நகரங்களில் ஒரே நாளில் இந்த விழா நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சர்வதேச பிராணிகள் நல அமைப்பின் (பீட்டா) விழிப்புணர்வு பிரசாரத்தில் புதிதாக இணைந்துள்ளார், "இங்கிலீஷ் விங்கிலீஷ் புகழ், ப்ரியா ஆனந்த். இதற்காக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு பிரசார படத்தில், வெள்ளை நிற உடை அணிந்து, ஒரு கையில், பறவைகள் இல்லாத வெறும் கூண்டை தூக்கி பிடித்தபடி, அட்டகாசமாக போஸ் கொடுத்தார், ப்ரியா ஆனந்த். அவரின் மற்றொரு கையில் இருக்கும் போர்டில், "பறவைகளை கூண்டில் அடைக்காதீர்கள்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு முன்பு வரை எந்த ஹீரோக்களைப்பார்த்தாலும் சிரிக்க சிரிக்க பேசுவார் ஹன்சிகா. ஆனால் அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். அதாவது, படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தாலும் எதிரில் நிற்கும் ஹீரோக்களை சட்டை செய்வதே இல்லை. நேராக டைரக்டரிடம் சென்று டயலாக் பேப்பரை வாங்கியபடி அதை மனப்பாடம செய்யத் தொடங்கி விடுபவர், மதிய இடைவேளைகளில், கேரவனுக்குள் சென்று பதுங்கிக்கொள்கிறாராம்.