குடும்பம் என்று இருந்தால் அடிதடி சண்டை இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் சாதாரணம். பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, என்றார் நேற்று இயக்கநர் ஃபராகான் கணவர் சிரிஷ் குந்தரை புரட்டியெடுத்த ஷாரூக்கான். நேற்று முன்தினம் சஞ்சய் தத்தின் அக்னிபாத் பட விருந்தில் சிரிஷ் குந்தரை அடித்துவிட்டார் ஷாரூக்கான். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களை அதிகம் பயன்படுத்த தூண்டுகின்ற ஃபேஸ்புக், முதன் முறையாக ஷேர்களை வெளியிடுகின்றது. இது ஃபேஸ்புக் பிரியர்களுக்கு மட்டும் அல்ல ஷேர் பிரியர்களுக்கும் ஒரு குஷியான தகவலாக இருக்கும். மொத்தம் 25,000 கோடி ரூபாய் மதிப்பில் ஃபேஸ்புக் ஷேர்களை வெளியிடும்.
பேஸ்புக் டைம்லைன் பற்றி சில மாறுபட்ட கருத்துகள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் டைம்லைன் வசதியை ஃபேஸ்புக்கில் பயன்படுத்த, ஃபேஸ்புக் அறிவுறுத்தி வருகிறது. டைம்லைன் ஆப்ஷனை பயன்படுத்தினால், ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பரிமாறிய செய்திகளை ஆண்டு வாரியாக வரிசைபடுத்தி பார்க்கலாம்.
இந்த வருட காலண்டருக்காக நடிகைகளை போட்டோ எடுத்தார் புகழ்பெற்ற போட்டோகிராஃபர் வெங்கட்ராம். இவர் எடுத்த படங்கள் படுபயங்கரமாக இருந்தன.ஸ்ரேயா முதல் தமிழில் இரண்டு படங்களே நடித்த ரிச்சா வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.
தானே புயல் நிவாரணப் பணிகளில் எனது அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, உலக சாதனை படைத்துள்ளது. புயல் நிவாரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் துணை தலைவரே அசந்து போகும் அளவிலான அறிவிப்புகளை பிப்ரவரி 4ம் தேதி எதிர்பார்க்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.