ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரையே மாதுளம் பழத்தை அல்லது சாறை அதிகம் உட்கொள்ளுங்கள் என்பதுதான். அந்த மாதுளம் பழம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவக் குணத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்று இப்போதுதான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மருதாணி என்ற மூலிகையை தெரியாத பெண்களே இருக்கமாட்டார்கள். பெரும்பாலான பெண்கள் அழகுக்காக மட்டும் பயன்படுத்தினாலும் உண்மையில் இதற்குள் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன. கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடிய முகப் பூச்சு பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. சூரிய வெப்பம் நேரடியாக தாக்கும் போது தோல் புற்றுநோய் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்ப்பதற்காக முகப் பூச்சு தடவிக் கொள்வது நல்லது என கூறப்படுகிறது. அலர்ஜி ஏற்படுத்தாத முகப் பூச்சு தயாரிப்பது தொடர்பாக ஸ்வீடனின் கோதன்பெர்க் மற்றும் சால்மர்ஸ்