மறந்தேன் மன்னித்தேன் சினிமா விமர்சனம்



தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரானா மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கும் படம் தான் 'மறந்தேன் மன்னித்தேன்.' 1986ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதைதான் இப்படம். தமிழ் தெலுங்கு என இரு
மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படம், தெலுங்கில் 'கோதாவரி குண்டலோ' என்ற தலைப்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆந்திரா, ராஜமுந்தரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மீனவரான ஆதிக்கும், தமிழ்நாட்டு கிராமத்தில் வசிக்கும் லட்சுமி மஞ்சுவுக்கும் திருமணம் ஏற்பாடாகிறது. ஆதியின் கிராமத்தில் நடக்கும் இவர்களது திருமணத்தின் போது, ஆதியின் முதலாளியின் மகள் டாப்ஸி, ஆதிக்கு தங்க மோதிரத்தை பரிசாக கொடுக்கிறார். அதேபோல தமிழகத்தில் இருந்து வரும் லட்சுமி மஞ்சுவின் முன்னாள் முதலாளி ரவி பாபு, லட்சுமி மஞ்சுவுக்கு தங்க சங்கிலியை பரிசாக கொடுக்கிறார்.

இந்த பரிசுப் பொருட்களாலும், ஆதி - லட்சுமி மஞ்சு இருவருக்கும் இடையே சந்தேக அலை ஏற்பட, அந்த நேரத்தில் பலத்த மழை காரணமாக கோதாவரி ஆற்றின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிடுகிறது. இந்த வெள்ளத்தில் கிராமமே மிதக்க, இதில் இருந்து தப்பிக்கும் ஆதி, லட்சுமி மஞ்சு, வைக்கோல் போர் ஒன்றில் ஏறுகிறார்கள். வைகோல் தண்ணீரில் மிதக்க, அது போகும் திசையில் இருவரும் பயணிக்கிறார்கள். தாங்கள் சாகப் போவது உறுதி என்று நினைக்கும் இவர்கள் தங்கள் வாழ்வில் நடைபெற்ற கடந்தகால சம்பவங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இதில் முதலில் ஆதி-டாப்ஸின் காதல் விவரிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் மூலம் தான் எப்படி பாதிக்கப்பட்டேன் என்பதையும், அதற்கு பழி வாங்குவதற்காக தான் செய்த தவறு என்ன என்பதையும் ஆதி கூறுகிறார். அதேபோலா, தன்னுடைய வாழ்வும் சில ஆண்களால் எப்படி ஏமாற்றப்பட்டது என்பதை லட்சுமி மஞ்சு விவரிக்கிறார்.. இதில் தான் லட்சுமி மஞ்சு - சந்தீப் கிஷனின் எதார்த்தமான காதல் கதை விவரிக்கப்படுகிறது. இருதியில் இவர்கள் இருவருடைய வாழ்வில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களை ஒருவருக்கொருவர் மறந்து மன்னித்து வாழலாம் என்று நினைக்கும் போது இவர்களை காப்பாற்றிய வைக்கோல் போரும், இவர்களை ஏமாற்ற இறுதியில் அந்த வெள்ளத்தில் இருந்து இந்த ஜொடி உயிர் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகியிருந்தாலும், படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் ஆந்திரா பக்கம் உள்ளவர்கள் தான். படம் முழுவதும் தெலுங்கு வாடை வீசினாலும், படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை படமாக்கிய விதம் அதை மறக்கடிக்கச் செய்கிறது.

அதிலும் படத்தின் ஆரம்பத்தில் கோதாவரி ஆற்று வெள்ளப் பெருக்கு காட்சி, அடங்கப்பா...என்று அசரவைக்கும் அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகள். இதுபோன்ற படங்களை தியேட்டரில் பார்த்தால் தான், அந்த தொழில்நுட்பத்தின் வலிமையையும், நுணுக்கத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.

ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு, சந்தீப் என்று அனைத்து நடிகர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில் கிராமத்துப் பாடல்களாக ஒலிக்கும் ஒவ்வொரு பாடலும் தெளிவான ராகமாக அமைந்திருக்கிறது. எம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகும் காட்சிகளை ரொம்பவே எதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்.

ஆதி - டாப்ஸி காதல் எப்பிசோட் இளமை கொஞ்சும் கவர்ச்சி என்றால், லட்சுமி மஞ்சு - சந்தீப் காதல் எப்பிசோட் அழகான அதே சமயம் அழுத்தமான பாசப் போராட்டம் என்று சொல்லலாம்.

காதல் கதையாக இருந்தாலும், அதில் ரசிகர்களுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் குமார் ராகேந்திரராவ் ரசிகர்களின் அனேக அப்ளாசைப் பெறுகிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget