03/01/2011 - 04/01/2011


அண்மையில் ஜிமெயில் பயனா்களில் ஏறத்தாள 150,000 பேரின் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டும் அவா்களின் கணக்கு முடக்கப்பட்டும் இருந்தது. இதற்கு காரணம் ஜிமெயிலில் ஏற்பட்ட சிறு குழறுபடி தான்.
என்ன தான் 7.5GB இற்கு மேற்பட்ட இட அளவை ஜிமெயில் வழங்கினாலும் மேலே சொன்னது போன்ற குழறுபடிகளால் ஜிமெயிலை காப்பு (Backup) எடுக்கவேண்டியது அவசியமாகிறது. முக்கியமான மின்னஞ்சல்களை பாதுகாக்கவேண்டுமெனில் வேறு வழியில்லை.
ஆக இந்தப் பதிவில் ஜிமெயிலை காப்பு எடுப்பதற்கென உதவும் மென்பொருள் பற்றியும் அதனைப் பயன்படுத்துவது தொடா்பாகவும் சிறு விளக்கம் தருகிறேன்.
Gmail Backup
முதலில் Gmail Backup மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவல் செயல்முறை இலகுவானது.
நிறுவியதை திறந்து தேவையான விபரங்களை தட்டச்சு செய்யுங்கள். இங்கு நீங்கள் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், காப்பு எடுக்கவேண்டிய கோப்பு (Backup Folder) மற்றும் எந்தத் திகதியிலிருந்து எந்தத் திகதி வரை காப்பு எடுக்கப்படவேண்டும் போன்ற விடயங்களை குறிப்பிடவேண்டும். நீங்கள் உங்கள் மின்னஞ்சல்களை முழுமையாக காப்பு எடுக்கவிரும்பினால் Since date என்பதில் நீங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்த திகதியை குறிப்பிடலாம். அப்படியில்லாமல் புதிய மின்னஞ்சல்களை மட்டும் காப்பு எடுக்க

உலகளாவிய நிலநடுக்க உலுக்குமையங்கள்,1963 - 1998
தளத்திட்டுகளின் இடப்பெயர்வு
நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:earthquake) என்பது பூமிக்கடியில்அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.


கண்டங்கள், துணைக் கண்டங்கள்

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்துகண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம்.
இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.
ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலுன் இரண்டும் தனித்தனி பிளேட்டுகளில் அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி ஆசிய

Dr.Windows என்ற பேரை கண்டவுடன் நீங்கள் ஏதோ கணிணியை பாதுகாக்கும் ஒரு மென்பொருள் என நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. இது உங்கள் நண்பர்களை பயமுறுத்தி ஏமாற்றி விளையாட உதவும் ஒரு மென்பொருள்.எப்படி என்று பார்ப்போம்.

இந்த மென்பொருளை நிறுவியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியை பாதுகாப்பது போல் தோன்ற வைக்கும். உதாரணமாக கீழே உள்ள படங்களை பார்க்க


"Protection Enabled" ,"Dr.Windows is loaded and protecting this computer" என்று நமது கணிணியை பாதுகாப்பது போல் காட்டும். ஆனால் அது உண்மையில்லை. இந்த மென்பொருளின் வேலையே இது போல பொய்யான,விளையாட்டான அல்லது பயமுறுத்தும் செய்திகளை காட்டுவது தான்.உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்க


கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. 
இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது .

http://mile.ee.iisc....:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.

A - வரிசை
ASYLUM - புகலிடம்

B - வரிசை
BARRISTER - வழக்குரைஞர்
BONA VACATIA - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து

C - வரிசை
CHARGE-SHEET - குற்றப்பத்திரிகை
CIVIL - குடியியல்
COMMISSION - ஆணைக்குழு
CONSENSUM AD IDEM - கருத்தொருமித்த
CONSTITUTION - அரசியலமைப்பு
CONSTITUTION LAW - அரசியலமைப்புச் சட்டம்
CUSTOMS - சுங்கம், ஆயம்
CUSTOMS DECLARATION - சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
CUSTOMS DUTY - சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை

D - வரிசை
DEPRESSION (LOW PRESSURE) - காற்றழுத்தத் தாழ்வு

E - வரிசை
EMIGRATION - குடியேறல்

F - வரிசை
FJORD - நுழைகழி

G - வரிசை
GANGUE - கழிமம்

H - வரிசை
HAILSTORM - கல்மாரி
HEADLANDS - மேட்டுநிலங்கள்
HIGH TIDE - கடலேற்றம்

I - வரிசை
IMMIGRATION (ENTRY) - குடிநுழைவு

J - வரிசை

K - வரிசை

L - வரிசை
LACOLITH - குவிவளை முகடு
LAGOON - கடற்கரைக்காயல்
LAND BRIDGE - இணைநிலம்
LANDSCAPE - நிலத்தோற்றம்
LATITUDE - அகலாங்கு
LAVA - எரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு
LEDGE - தொங்குபாறை
LIGNITE - பழுப்பு நிலக்கரி
LITHOSPHERE - கற்கோளம்
LOCH - நுழைகழி
LOW TIDE - கடல்வற்றம்

A - வரிசை
ACCOUNTING CONCEPT - கணக்கியல் கருத்துக்கள்
ACCOUNTING ENTITY CONCEPT - கணக்கியல் தனித்தன்மை கருத்து
ACCOUNTING PERIOD CONCEPT - கணக்கியல் காலக் கருத்து
ACCOUNTING YEAR - கணக்காண்டு
ACCRUED EXPENSE - அட்டுறுச் செலவு
ACCRUED REVENUE - அட்டுறு வருமானம்
ADVANCE - முன்பணம்
ANNUAL GENERAL MEETING - ஆண்டு பொதுக் கூட்டம்
APPRECIATION (IN VALUE) - மதிப்புயர்வு
ASSETS ACCOUNT - சொத்துக் கணக்கு

B - வரிசை
BALANCE SHEET - ஐந்தொகை, இருப்புநிலைக் குறிப்பு
BANK - வைப்பகம்
BANKING OMBUDSMAN - வங்கிய குறைத்தீர்ப்பாணையம்
BANKNOTE - பணத்தாள்
BEARER BOND - கொணர்பவர் கடனீடு
BILLS RECEIVABLE - வரவுக்குரிய உண்டியல்கள்
BOARD OF DIRECTORS - இயக்குநரவை, இயக்குநர் வாரியம்
BOND - கடனீடு
BOOK-KEEPING - கணக்கு வைப்பு
BOURSE - பங்கு மாற்றகம்
BORROWED CAPITAL - கடன் முதல்
BRANCH ACCOUNT(S) - கிளைக் கணக்கு(கள்)
BRANCH ADJUSTMENT ACCOUNT - கிளை சரிகட்டும் கணக்கு
BRANCH ASSETS ACCOUNT - கிளை சொத்துக் கணக்கு
BRANCH EXPENSES ACCOUNT - கிளை செலவுக் கணக்கு
BRAND (NAME) - முத்திரைப் பெயர்
BUSINESS ENTITY CONCEPT - தொழில் தனித்தன்மை கருத்து

A - வரிசை
AUTOMATIC GAIN CONTROL (AGC) - தன்மிகைப்புக் கட்டுப்பாடு
AVALANCHE DIODE - வெள்ளவுடைவி - "வெள்ளவுடை இருமுனையம்" என்பதன் குறுக்கம்; ஒரு சிறப்பு இருமுனையம்; இதில் ஒரு குறிப்பிட்டப் பின்னோக்குச் சாருகையில் வெள்ளவுடைவு (avalanche breakdown) ஏற்படுகிறது. இத்தகைய இருமுனையங்கள் வானலை இரைச்சல் (RF noise) உற்பத்தியில் பயனாகின்றன. எனவே, இவை வானலை அளவைத் தளவாடங்களில் (RF measurement equipment) இரைச்சல் மூலங்களாக (noise sources) பயனாகிறது. வெள்ளவுடைவு பழுதுறா (non-destructive) நிலை என்பதால், இச்சாதங்கள் பாதுகாப்பும் பண்பும் கொண்டுள்ளன. இதை "இரைச்சல் இருமுனையம்" (noise diode) என்றும் அழைப்பர்

B - வரிசை
BANDWIDTH - பட்டையகலம்

C - வரிசை
CIRCULATOR - சுழலடை - ஒரு உயிர்ப்பற்ற மின்னணு பலதுறைச் சாதனம் (multi-port device), இதில் ஒரு துறைக்குள் செலுத்தப்பட்ட வானலைக் குறிகை அடுத்தத் துறைக்கு மட்டும் மாற்றப்படுகிறது
CODE DIVISION MULTIPLE ACCESS (CDMA) - குறியீடு பிரிப்புப் பன்னனுகல்
CONTINUOS WAVE (CW) - தொடர்ந்த அலை

D - வரிசை
DIRECTIONAL COUPLER - திசைப்பிணைப்பி

E - வரிசை

F - வரிசை

G - வரிசை
GANGING - கூட்டியக்கம்
GAUSSIAN MINIMUM SHIFT KEYING (GMSK) - காசிய மீச்சிறு பெயர்வு இணைத்தல் - மீச்சிறு பெயர்வு இணைத்தல் பண்பேற்றத்தில் நிறமாலை தரவு வீதத்தின் பருமை (magnitude of data rate) அளவு வரை நீடிக்கிறது. மீச்சிறு பெயர்வு பண்பேற்றத்திற்கு முன்பு ஒரு காசிய தாழ்ப்ட்டை வடிப்பி (gaussian low pass filter) அமைக்கப்படுகிறது. இவ்வடிப்பியின் மறுமொழிப்பண்பு என்னவென்றால் துண்டிப்பு அலைவெண் கூர்மையாகவும், அதன் கனத்தாக்க மறுமொழியில் (impulse response) மேற்பாய்வு (overshoot)சிறிதாகவு அமையவேண்டும். இந்த வடிப்பால்

H - வரிசை
HIGH ELECTRON MOBILITY TRANSISTOR (HEMT) - நகர்மையி - 'உயர் மின்நகர்மைத் திரிதடையம்' என்பதன் குறுக்கம்; ஒரு வகை புலவிளைவி (FET), இதில் சந்திப்பகுதி இரண்டு வெவ்வேறு பட்டையிடுக்கு (band-gap) கொண்டுள்ள மூலதனங்களால் மாசிடப்படுகிறது. மென்தங்கம் பிறாக்காண்டம் (galium arsenide - GaAs), அளமியம் மென்தங்கம் பிறாக்காண்டம் (Aluminium Galium Arsenide - AlGaAs), மென்தங்கம் ருசரகம் (Galium Nitride - GaN) போன்ற மூலதங்கள் பயனாகின்றன. சாதரண மண்ணியப் புலவிளைவிகளில் (silicon FETs), எதிர்மின்னிகளின் நகர்வு (mobility) மோதல்களால் மெல்லப்படுத்தப்படுகிறது. நகர்மையியின் கலப்பினச்சந்தியின் (heterojunction) ஒரு பக்கத்தில் அதிக மாசிடப்பட்ட நேரகத்தில் (n-region) அகலப் பட்டையிடுக்கு (wide band-gap) அளமியம் மென்தங்கம் பிறாக்காண்டமும் (AlGaAs) இன்னொரு பக்கத்தில் எதிரகத்தில் (n-region) குறுகியப் பட்டையிடுக்கு மாசற்ற மென்தங்கம் பிறாக்காண்டம் (GaAs) அமைந்துள்ளதால், உயந்த எதிர்மின்னி நகர்மைக் (high electron mobility) கொண்டுள்ள மெல்லிய மண்டலம் உருவாக்கப்படுகிறது. இத்தகையச் சாதனங்களில் சந்தியின் இருப்பக்க மூலதனங்கள் ஒரே நெய்யரி மாறிலியுடன் (lattice constant) அமைவது செயற்திறனுக்கு அவசியமானது. நகர்மையிகளின் மின்னோட்ட மிகைப்பு அலைவெண் (current gain frequency) 600GHzக்கு மேலாகவும் மின்திறன் மிகைப்பு அலைவெண் (power gain frequency) 1THzக்கு மேலாகவும் காண்பிக்கின்றன.
HETERODYNE - கலக்கிப்பிரிப்பான் -

A - வரிசை
ABERRANT BEHAVIOUR - கோளாறான நடத்தை
ABERRATION - மனக்கோளாறு
ABILITY - திறமை
ABKLINGEN - குர்ல் மங்கல்
ABSTRACT INTELLIGENCE - கருத்துநிலை நுண்ணறிவு
AGORAPHOBIA - திடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்
ALGONAGNIA - வலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு
AIMING TEST - இயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை
ALALIA - ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
ALEXIA - சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை
ALOGIA - பேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை
AMNESIA - மறதிநோய்
ANOMIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia
ANOMIC APHASIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia
APHASIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia
APHEMIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphasia
ATTENTION DEFICIT HYPERACTIVITY DISORDER (ADHD) - கவனக்குறை மிகைச்சுறுதி
ATTENTION FIELD - கவனக்களம்
AUTISM - மதியிறுக்கம்

BABY-HOOD - குழவிப்பருவம்
BEHAVIOUR - நடத்தை
BIPOLAR MOOD DISORDER - இருமுனைக்கோடி

C - வரிசை
CIRCUMLOCUTION - சுற்றி வளைத்துப் பேசுதல்
CLAIRVAUDIENCE - தெளிவுப்கேட்பு
CLAIRVOYANCE - தெளிவுக்காட்சி
CLAUSTROPHOBIA - மூட்டமருட்சி
CHEMOTAXIS - வேதித்தூண்டலியக்கம்
CHESS-BOARD ILLUSION - சதுரங்கத் திரிபுக்காட்சி
CLASSICAL CONDITIONING - பாரம்பரை நிலைப்படுத்தல் - ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்; எடுத்தக்காட்டாக ஒரு நாய் உணவைக்கண்டு அதைப் பெறாமல் இருக்கும்போது அதன் நாவு ஊறும்
CRIE DU CHAT - பூனைக்கத்து இணைப்போக்கு

A - வரிசை
ABACUS - மணிச்சட்டம்
ABCISSA - கிடைத் தொலைவு
ABELIAN GROUP - அபீலியன் குலம்
ABERRATION - பிழர்ச்சி
ABOVE BOUNDED - மேல்வரம்புடையது
ABRIDGE NOTATION - சுருக்கக் குறிமானம்
ABSOLUTE CONVERGENCE - தனி ஒருங்கல்
ACUTE ANGLE - குறுங்கோணம்
ADJACENT ANGLE - அடுத்துள்ள கோணம்
ADJACENT SIDE - அடுத்துள்ள பக்கம்
ADJOINT, ADJOINT MATRIX - உடனிணைப்பு, உடனிணைப்புக் அணி
ADJUSTED DIFFERENCE - சருசெய்த வேறுபாடு
AFFINE - கேண்மை
AFFINE PLANE - கேண்மைத் தளம்
AGGREGATION - திரள்வு
ALGEBRA - இயற்கணிதம்
ALGEBRAIC SUM - இயற்கணிதக் கூட்டுத்தொகை
ALTITUDE - குத்துயரம்
AMBIGUITY - ஈரடி
APOGEE - சேய்மைநிலை
APOSTERIORI - பிற்கணிப்பு
ARITHMETIC MEAN - கூட்டுச் சராசரி
ARITHMETIC PROGRESSION/SERIES - கூட்டுத் தொடர்
ASCENDING ORDER - ஏறுவரிசை
ASYMPTOTE - அணிகுகோடு
AUTO-CORRELATION - தன் ஒட்டுறவு

B - வரிசை
BACKWARD DIFFERENCE - பின்னோக்கு வேறுபாடு
BALLISTIC CURVE - எறிபொருள் வளைவு
BASE, BASE 2 - அடிப்படை, இரண்டு அடிப்படை
BASE OF A LOGARATHM - மடக்கையடி
BASE VECTOR - அடிப்படைத் திசையன்
BASIS - அடுக்களம்
BASIS VECTOR - அடுக்களத் திசையன்
BINOMIAL - ஈருறுப்பு
BINOMIAL COEFFICIENT - ஈருறுப்புக் கெழு
BINOMIAL OPERATION - ஈருறுப்புச் செயலி
BISECTOR - சமவெட்டி
BOUNDARY CONDITION - வரம்புநிலைக் கட்டுப்பாடு
BOUNDED FUNCTION - வரம்புறுச் சார்பு
BOUNDED SET - வரம்புறுக் கணம்

A - வரிசை
AMBLYGASTER CLUPEOIDES - கீரிமீன் சாளை
ANCHOVIES - நெத்திலி மீன்

B - வரிசை
BABY SHARK - பால் சுறா
BARBER'S KNIFE - அம்பட்டன்வாளை/சொட்டைவாளை
BARILLIUS GATENSIS - ஆட்கான்டி
BARRACUDA - சீலா மீன்
BLOTCHED CROAKER - கோரோவா
BROADFIN SHARK - கோர சுறா
BUTTER FISH - விறால் மீன்

C - வரிசை
CAT FISH - கெளுத்தி மீன்
CHANNA MARULIUS - அவிரி
CHITALA CHITALA - அம்புட்டன் வாழ
CIRRHINUS CIRRHOSUS - வெள்ளை அரிஞ்சான்
CLUPEA ILISHA - ஆற்றுல்லம்
COD - பன்னா மீன்
COROMANDEL FLYING FISH - கோலா
CUTTLEFISH - கனவாய் மீன்

D - வரிசை
DACTYLOPTERUS ORIENTALIS - ஆனதும்பி
DIPLOPRION BIFASCIATUM - அனுவ மீன்

A - வரிசை
AFRICAN MARIGOLD - துலுக்கமல்லிகை
ARTABOTRYS UNCINATUS - மனோரஞ்சிதம்

B - வரிசை
BACHELOR'S BUTTONS - வாடாமல்லி

C - வரிசை
CANANGA ODORATA - கருமுகை
CANANGABAUM - மனோரஞ்சிதம
CLIMBING YLANG YLANG - கருமுகை
CRAPE JASMINE - நந்தியாவட்டை

D - வரிசை
DAFFODIL - பேரரளி
DAHLIA - சீமையல்லி
DAISY - வெளிராதவன், வெளிராதவப்பூ

E - வரிசை
ERVATAMIA DIVARICATA - நந்தியாவட்டை

F - வரிசை
FICUS GLOMATA - அத்திப்பூ
FRANGIPANNI - பெருங்கள்ளி

G - வரிசை
GLORIOSA LILY - கார்த்திகைப்பூ
GOMPHRENA GLOBOSA - வாடாமல்லி

H - வரிசை
HERIUM ODORUM - அலரி
HIBISCUS - செம்பருத்தி

I - வரிசை

J - வரிசை

K - வரிசை

L - வரிசை
LAVANDULA AUGUSTIFOLIA - சுகந்தி
LAVENDER - சுகந்தி
LILY - அல்லி

M - வரிசை
MARIGOLD - செண்டிகைப்பூ
MEMECYLON TINCTORIUM - காசாம்பூ

N - வரிசை
NARCISSUS - பேரரளி
NYPHAEA LOTUS - ஆம்பல்





A - வரிசை
ADSORBSION - பரப்புக்கவர்ச்சி
ACETAL - காடிச்சாராயம்
ACETATE (COMPOUND) - காடியவினம்
ACETATE (GROUP/ANION) - காடியத் தொகுதி/நேர்மின்னூட்டணு - [CH3COO]- நேர்மின்னூட்டணு
ACETALDEHYDE - இருக்கொள்ளிய நீரகநீங்கியம் - வேற்று ஆங்கிலப் பெயர் Ethanal
ACCEPTOR, ACCEPTOR ATOM - ஏற்பி, ஏற்பணு
ACETONE - இரட்டை ஒருக்கொள்ளியக் கொழுக்காடியம் - இதன் ஆங்கிலப் பெயர் Dimethyl Ketone; CH3COCH3
ACCUMULATOR - சேமக்கலம்
ACETYLENE - முப்பிணை இருக்கொள்ளியம் - முறை ஆங்கில வேதிப்பெயர் ethyne
ACIDIMETRY - அமில அளவியல்
ACYL (COMPOUND) - அமிலமவினம் - RCO- உறுப்புக் கொண்டுள்ளச் சேர்மம்; கரிம அமிலங்களிருந்து நீரகவுயிரக உறுப்பு (-OH) நீக்கப்பட்டு பெறும் சேர்மம்
ACYL GROUP - அமிலமத் தொகுதி - RCO- உறுப்பு
ACYL (GENERAL) - அமிலமம்
ACYL HALIDE - அமிலம உப்பீனியினம்
ACYLATION - அமிலமவேற்றம்
ALCOHOL - சாராயம்
ALDEHYDE GROUP - நீரகநீங்கியத் தொகுதி O=CH- தொகுதி; வேற்று பெயர் ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி (formyl group அல்லது methanoyl group)
ALDEHYDE (GENERAL) - நீரகநீங்கியம்
ALIPHATIC COMPOUND - கொழுப்பார்ந்தச் சேர்மம்
ALKALOID - காரப்போலி
ALKANE - ஒருப்பிணைக்கொள்ளியம்
ALKENE - இருப்பிணைக்கொள்ளியம்
ALKYL (COMPOUND) - கொள்ளியவினம்
ALKYL (GROUP) - கொள்ளியத் தொகுதி - CnH2n+1 தொகுதி
ALKYNE - முப்பிணைக்கொள்ளியம்
ALLENE (CLASS OF HYDROCARBONS) - தொடர் ஈரிருப்பிணைக்கொள்ளியம் - -C=C=C- அமைப்பு கொண்ட நீரகக்கரிமம்
ALLENE (COMPOUND) - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம் - முறை ஆங்கிலப் பெயர் (1,2)-propadiene
ALLOTROPE - புறவேற்றுரு
ALLOTROPY - புறவேற்றுமை
ALUMINIUM - அளமியம்
ALUMINIUM HYDROXIDE - அளமியம் நீரகவுயிரகம் - Al(OH)3; முறைப் பெயர் அளமியம் மும்மை நீரகவுயிரகம்
AMETHYST - செவ்வந்திக்கல்
AMIDE (COMPOUND) - நீரகப்பரியவினம்
AMIDE (GENERAL) - நீரகப்பரியம்
AMIDE GROUP - நீரகப்பரியத் தொகுதி - O=CNH தொகுதி; பொதுவாக :O: RCN: (-H) (-R')
AMINE (COMPOUND) - நவச்சியவினம்
AMINE GROUP - நவச்சியத் தொகுதி - :N தொகுதி; இங்கு ':' ஒரு தனியிணை ஆகும்
AMINE (GENERAL) - நவச்சியம்
AMINO ACID - நவச்சியவமிலம் - நவச்சியத் தொகுதி (:N, amine group), ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி (-C=OOH, carboxyl group) கொண்டச் சேர்மம்; பொது வாய்ப்பாடு H2NCHRCOOH, இங்கு R ஒரு நீரகக்கரிமத் தொகுதி
AMORPHOUS SOLID - பொடிமம்
ANABOLISM - வளர்மாற்றம் - சிக்கலான மூலக்கூற்றுகள் இணைசேர்ந்து இன்னும் பெரிய மூலக்கூற்றுகள் உருவாகும் வேதி வினைகள்
ANNEAL, ANNEALING - சீராற்று, சீராற்றல்
ANHYDRIDE - நீரிலி
ANTIMONY - கருநிமிளை
ARAMID - இறுமம்
AROMATIC COMPOUND - வாசனைச் சேர்மம்
ARSENIC - பிறாக்காண்டம்
ARSENIC PENTASULPHIDE - பிறாக்காண்டம் ஐங்கந்தகம் - As2S5
ARSENITE ANION - மூவுயிரகப்பிறாக்காண்ட நேர்மின்னூட்டணு - [AsO3]3-
ARSENITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகப்பிறாக்காண்டவினம்
ARYL (GENERAL) - மணமம்
ASPARAGINE - கிளவரியம் - C4H8N2O3
ASPARTAME - மதக்கிளவரியம் - C14H18N2O5
ASPARTIC ACID - கிளவரியமிலம்
ASPHALT - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர் bitumen
AZIDE ANION - முத்தழைம நேர்மின்னூட்டணு - [N3]-
AZIDE COMPOUND - முத்தழைமவினம்
AZO COMPOUND - இலவணியவினம் - -R-N=N-R'- கொண்டச் சேர்மம், இங்கு R, R' மணம வளையம் (aromatic ring) அல்லது கொள்ளியத் தொகுதிகள் ஆகும்
AZO GROUP - இலவணியத் தொகுதி - -N=N- தொகுதி
AZO DYE - இலவணியச் சாயம்

B - வரிசை
BARIUM - பாரிதவியம்
BENZAL CHLORIDE - பாசிக இரட்டைக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro dimethyl benzene
BENZALDEHYDE - தூபிய நீரகநீங்கியம்
BENZENE - தூபியம்
BENZOIC ACID - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலம்
BENZOATE - தூபியவீருயிரகக்கரிமம் - தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலத்தின் (benzoic acid) உப்பு அல்லது அத்தர் (ester)
BENZYL CHLORIDE - பாசிக ஒற்றையக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro methyl benzene
BERYL - வருணப்பாறை



A - வரிசை
ALLIGATOR - ஆட்பிடியன்
ANACONDA - ஆனைக்கொன்றான்/யானைக்கொன்றான்
ANT-EATER - அழுங்கு
ANTELOPE - இரலை மான், புல்வாய்
ARCHAEOPTERYX - தொன்புள்

B - வரிசை
BABOON - கூர்முசு
BADGER - தகசு
BISON - கழுமாடு
BLACK BUCK - வெளிமான்
BOA - அயகரம்
BOAR - கேழல்/கேழற்பன்றி

C - வரிசை
CANNIBAL, CANNIBALISM - தன்னினத்தின்னி, தன்னினத்தின்னல்
CARNIVORE - ஊனுண்ணி
CHIMPANZEE - மாந்தக்குரங்கு
CHINCHILLA - முயலெலி
CHIPMUNK - செவ்வெளில்
CHUCKWALLA - மலையொந்தி
CIVET - புனுகுப்பூனை
COATI - கோணிநாவி
CONE SNAIL - கொனை நத்தை
COYOTE - வயலோநாய்

 
A - வரிசை
ALBATROSS - அண்டரண்டப்பறவை
ASIAN PARADISE FLYCATCHER - அரசவால் ஈப்பிடிப்பான்
ASIAN WHITE-BACKED VULTURE - மாடுபிடுங்கி
ASHY CROWNED SPARROW LARK - சாம்பல் தலை வானம்பாடி
ASHY PRINIA - சாம்பல் கதிர்குருவி

BAYA WEAVER - தூக்கனாங்குருவி
BLACK VULTURE - மலைப்போர்வை
BLACK-BELLIED TERN - கருப்பு வயிற்று ஆலா
BLUE-ROCK PIGEON - மாடப் புறா
BLYTH'S REED WARBLER - பிளித் நாணல் கதிர்குருவி
BROWN SHRIKE - பழுப்புக் கீச்சான்
BUTTON QUAIL - கருங்காடை

C - வரிசை
CATTLE EGRET - உண்ணிக்கொக்கு
CHOUGH - செவ்வலகி
CITRINE WAGTAIL - மஞ்சள் வாலாட்டி
COOT (COMMON) - நாமக் கோழிம், கரண்டம்
COPPERSMITH BARBET - செம்மார்புக் கூக்குருவான்
CURLEW - கோட்டான்

D - வரிசை
DARTER - நெடுங்கிளாத்தி
DRONGO - கரிச்சான்

A - வரிசை
A POSTERIORI - காரணவியூகம்
A PRIORI - காரியவியூகம்
ACKNOWLEDGEMENT - ஒப்புகை
ACKNOWLEDGEMENT OF DEPT - கடனொப்புகை
ACT - சட்டகை
APPEARANCE - முன்னிலையாதல்
ASSET - சொத்துடைமை
ASYLUM - புகலிடம்

B - வரிசை
BAILABLE OFFENCE - பிணைவிடுக் குற்றம்
BARRISTER - வழக்குரைஞர்
BEARER - கொணர்பவர்
BILL - சட்டகம்
BONA VACATIA - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து
BRIBERY - கைக்கூட்டு/கையூட்டு

A - வரிசை
AMARANTH - முளைக்கீரை
ARTICHOKE - கூனைப்பூ
ASPARAGUS - தண்ணீர்விட்டான் கிழங்கு

B - வரிசை
BEANS - அவரை
BEET ROOT - செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
BITTER GOURD - பாகல், பாகற்காய்
BLACK-EYED PEAS - தட்டைப்பயறு
BOTTLE GOURD - சுரைக்காய்
BROCCOLI - பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS - களைக்கோசு

C - வரிசை
CABBAGE - முட்டைக்கோசு, முட்டைக்கோவா
CARROT - மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
CELERY - சிவரிக்கீரை
CILANTRO - கொத்தமல்லி
CLUSTER BEANS - கொத்தவரை
COLLARD GREENS - சீமை பரட்டைக்கீரை
COLOCASIA - சேப்பங்கிழங்கு
CORIANDER - கொத்தமல்லி



A - வரிசை
ABELMOSCHUS ESCULENTUS - வெண்டை
ABELMOSCHUS MOSCHATUS - கந்துகஸ்தூரி
ABIES WEEBBIANA - தாலிசப்பத்திரி
ABRUS FRUITILOCULUS - வெண்குந்திரி, விடதரி
ABRUS PRECATORIUS - குண்றிமணி
ABULITUM INDICUM - துத்தி
ACACIA ARABICA - கருவெல்லம்
ACACIA CONCUNA - சீக்காய், சீயக்காய்
ACACIA PENNATA - காட்டுசிகை, இந்து
ACACIA POLYACANTHAPOLYCANTHA - சிலையுஞ்சில்
ACALYPHA INDICA - குப்பைமேனி
ACALYPHA PANICULATA - குப்பைமேனி
ACHYRANTHES ASPERA - நாயுருவி
ACORUS CALAMUS - வசம்பு
ADATHODA TRANQUEBARIENSIS - தவசு முருங்கை
ADENAN THERA PAVONIA - மஞ்சாடி, ஆனைக்குன்றுமணி
AEGLE MARMELOS - வில்வம்
AGAVE AMERICANA - ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை
AGAVE SISALANA - கதலை
AILANTHUS EXCELSA - பெருமரம், நாரு
ALANGIUM LAMARCKII - அழிஞ்சில்
ALANGIUM SALVIIFOLIUM - அழிஞ்சில்
ALBIZIA LEBBECK - வாகை
ALBIZIA ODORATISSIMA - கருவாகை
ALFALFA - குதிரைமசால்
ALOE BARBADENSIS - சீமை மூசம்பரம்
ALOE LITTORACIS - மூசம்பரம்
ALOE VERA - சோத்துக் கற்றாழை
ALONITUM HETEROPHYLLUM - அதிவிடயம்
ALTERNANTHERA SESSILIS - பொன்னாங்கண்ணி
ALPINIA GALANGA - அரத்தை
AMARANTHUS SPINOSUS - முள்ளுக்கீரை
AMARANTHUS TRICOLOUR - அரைக்கீரை
AMMNIA VESICATORIUS - நீர்மேல் நெருப்பு
AMOMUM SUBLATUM - பெரிய ஏலக்கி
AMORPHOPHALLUS SYLVATICUS - காட்டுச்சேனை
ANACORDIUM OCCIDENTALE - முந்திரி
ANETHUM SOWA - சதகுப்பை
ANIMATED OATS - (காட்டுக்) காடைக்கண்ணி
ANISOCHILUS CARNOSUM - கர்ப்பூரவள்ளி
ANISOMELES MALABARICA - பேய்மிரட்டி
ANNONA SQUAMOSA - சீத்தா
APONOGETON NATANS - கொட்டிக்கிழங்கு
AQUILARIA AGALLOCHA - அகில், காகதுண்டம்
ARISTIDA SETACEA - துடைப்பம்
ARISTOLOCHIA BRACTIATA - ஆடுதீண்டாப்பாளை
ARUM LYRATUM - கொண்டை ராகிசு
ARUM OOLOCASIA - சேம்பு
ASPARAGUS RACEMOSUS - தண்ணீர்விட்டான் கிழங்கு
ASYSTASIS GANGETICA - நறுஞ்சுவைக் கீரை
ATALANTIA MONOPHYLLA - காட்டு எலுமிச்சை
AVENA SATIVA - (சீமைக்) காடைக்கண்ணி
AVENA STERILLIS - (காட்டுக்) காடைக்கண்ணி
AUDIOGRAPHUS PANICULATA - நிலவேம்பு
AZADIRACTA INDICA - வெம்பு
AZIMA TETRACANTHA - முட்சங்கான்

B - வரிசை
BAMBUSA ARUNDINACEA - மூங்கிலிரிசி
BARINGTONIA ACUTANGULA - செங்கதப்பு
BARINGTONIA RACEMOSA - சமுத்திரப் பழம்
BARLENIA PRIONTIS - செம்முல்லி, காட்டுகானா
BARLERIA CRISTATA - செம்முள்ளி
BASELLA ALBA - பசளைக் கீரை
BASELLA RUBRA - கொடிப்பசளைக் கீரை
BAUHINIA TOMENTOSA - இறுவாட்சி
BERBERIS ARISTATA - மரமஞ்சள்
BIXA ORELLANA - வருகமஞ்சள், மந்திரவஞ்சி
BLUMEA LACERA - காட்டுமுள்ளங்கி
BOERHAVIA DIFFUSA - மூக்குரட்டை
BORASSUS FLABELLIFER - பனை
BOVERHEAVIA REPEN - மூக்கரத்தைக் கீரை
BROYONIA LACINIOSA - ஐவிரலி
BUCHANANIA AXILLARIS - புளிமா
BULLETWOOD - மகிலா மரம்
BUREA FRONDOSA - பலசு



A - வரிசை
APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்

B - வரிசை
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

C - வரிசை
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்

nandaplan.blogspot.com

A - வரிசை
ADVENTITOUS ROOT - இடமாறு வேர்
AERIAL ROOT - விழுது
AESTIVATION - இதழ் அமைப்பு
AGGREGATE FRUIT - திரள் கனி
AMPHIBIOUS PLANT - நிலநீர்த் தாவரம்
ANDROECIUM - ஆண் பகுதி
ANGIOSPERM - விதையுறையுள்ள
ANNUAL - ஒரு பருவச் செடி
ANTHER - மகரந்தப் பை
ASEXUAL REPRODUCTION - கலவா இனப்பெருக்கம்
AUTOGAMY - தன்னினக் கலப்பு
AXIL - கக்கம்


B - வரிசை
BARB - சுணை
BERRY - சதைக்கனி
BIENNIAL - இருபருவச் செடி
BIPINNATE - ஈரிறகு வடிவ
BISEXUAL - இருபால்
BLADE - இலைப்பரப்பு
BRACT - பூக்காம்பிலை
BRACTEOLE - பூக்காம்பு சிற்றிலைக் கிழங்கு
BREATHING ROOT - மூச்சு வேர்
BUDDING - அரும்புதல்
BULB - பூண்டு
BULBIL - கறளைப் பூண்டு
BUTTRESS ROOT - அண்டை வேர்


மார்ச் 30, 2011
 

 

செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

மார்ச் 30, 2011

`உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும்.
புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி’கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்…
`இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ’ – வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், “நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.
`உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு…”
இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்..”எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க”

மார்ச் 30, 2011



வெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால் பயன்
படுத்தப்பட்டது.
உடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.
தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.
ஆல்கஹால் தெர்மாமீட்டர் இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் என்ற பிரெஞ்சுக்காரர் 1731-ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் செல்சியஸ் என்ற வானியலாளர் இதில் முதல்முறையாக `சென்டிகிரேட்’ முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி. கொதிநிலை 100 டிகிரி சென்டி கிரேட்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget