கூகுளின் கால்குலேட்டர்

பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும்.
ஆனால் கூகுள் சர்ச் இஞ்சினில் அதன் சர்ச் பாக்ஸினை கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். அரித் மேடிக் பங்சன், டிரிக்னோமெட்ரிக், ஹைபர்போலிக் மற்றும் லாக்ரிதம் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். அளவுகளை மாற்றிக் காணும் வசதியும் இதில் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டு பார்க்கலாம். சர்ச் பாக்ஸில் 100+500-10 என்று கொடுத்து சர்ச் பட்டனை அழுத்தினால் அதற்கான விடை கிடைக்கும். 100ன் லாகிர்தம் வேல்யூ கண்டுபிடிக்க log (100) என டைப் செய்திடலாம். அதே போல cos வேல்யு கண்டுபிடிக்க cos (90) என டைப் செய்து மதிப்பினைப் பெறலாம். கரன்சி மாற்றங்கள், அளவு மாற்றங்கள் ஆகியவை யும் கணக்கிட்டு காட்டப்படுகின்றன. 100 USD in Indian Rupee எனக் கொடுத்தால் அன்றைய கணக்கின்படி இந்திய ரூபாய் மதிப்பு தரப்படும். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget