இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த BitDefender Antivirus நீட்சிகள்


இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே
இருப்பார்கள். உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது, இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று.  இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும். அதுவும் இண்டர்நெட் பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணிணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.
நீங்கள் இணையத்தில் குறிப்பிட்ட தளத்திற்குச் செல்லும் போது அந்த தளம் பாதுகாப்பானதா என்று தெரிந்தால் நல்லது. இல்லாவிட்டால் பலிகொடுக்க வேண்டியது தான். இதைத் தான் URL Scanning என்று சொல்வார்கள். உங்களிடம் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருள் இந்த Internet Sequrity விசயத்தைத் தராமல் இருந்தால் என்ன செய்வது? பாதுகாப்பாக எப்படி இணையத்தைப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் எழலாம்.
இணைய உலவிகளுக்கென BitDefender ஆண்டிவைரஸ் நிறுவனம் TrafficLight என்றொரு நீட்சியை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் நீட்சியை நாம் பயன்படுத்தும் உலவியில் சேர்த்துக் கொண்டால் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. நீங்கள் வேறெந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இதனைத் தாராளமாக பயன்படுத்தலாம். இதன் அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1. விண்டோஸ் கணிணியின் எந்த உலவியையும் ஆதரிக்கிறது. இதற்கு தனிப்பட்ட உலவியைச் சார்ந்து நிறுவாமல் விண்டோஸ் கணிணிக்கு என்று (Windows Installer) நிறுவிக் கொண்டால் உங்கள் கணிணியில் எந்த உலவிக்குச் சென்றாலும் இயங்கும் ( Firefox, opera, IE, Safari, Chrome)
2. நீங்கள் எந்த ஒரு இணையதளத்தையும் அடையும் முன்னரே பாதுகாப்பானதா என்று சோதித்து சொல்லிவிடுகிறது.
3. கூகிள் தேடலைப் பாதுகாப்பானதாக செய்கிறது. கூகிள் தேடலின் போது வரும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் முன்பாக அது பாதுகாப்பான தளமாக இருந்தால் பச்சை நிறத்தில் டிக் செய்யப்பட்டு காட்டுகிறது.
4. இணையத்தில் மால்வேர் மற்றும் போலியான தளங்கள் (Phishing Websites)
போன்றவற்றை முன்கூட்டியே எச்சரிக்கிறது. Phising Sites – சில தளங்கள் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் தளம் போலவே தோற்றமளித்து உங்களின் தகவலையும் பணத்தையும் திருடுவார்கள்.
5. சமுக வலைத்தளங்களில் உள்ள அபாய பக்கங்களையும் எச்சரிக்கிறது.
6. ஒருவேளை குறிப்பிட்ட இணையதளத்தின் சில பக்கங்கள் தீங்கின்றி இருந்தால் அதை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது.
விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டுமே செயல்படுகிற இந்த நீட்சி அருமையான பயன்படுத்திப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
தரவிறக்கச்சுட்டி/ இணையதளம் : Download BitDefender Trafficlite

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget