விஜய் அடுத்த எம்.ஜி.ஆர் சரியா?


விஜய் ஒரு இந்தியன் ப்ரூஸ்லி - இது போக்கிரி வெற்றிவிழாவில் விஜய்யைப் பற்றி சத்யராஜ் சொன்னது. அரசியல் யூகம் வைத்திருக்கும் சில பெரிய நடிகர்களை பொதுமேடைகளிலும், தனிப்பட்ட கலந்துரையாடல்களிலும் போட்டுத்தாக்கும் சத்யராஜ், விஜய்யை மட்டும் பாராட்டி பேச தயக்கியதே இல்லை.

அதே போக்கிரி வெற்றிவிழாவில் அசின் பேக்குல கைய்ய வெச்சி ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க விஜய், அட! அது தாண்டா நடிப்பு... என்று விஜய்யின் நடிப்பை புகழ்ந்தார் சத்யராஜ். அவர் மகன் சிபிராஜ் தீவிர விஜய் ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்தது. 


சமீபமாக விஜய் டி.வியில் நண்பன் ஸ்பெஷல் ஷோ நடந்தது. அதில் விஜய், ஷங்கர், சத்யராஜ் உட்பட படத்தின் நடிகர்கள் கலந்துகொண்டனர். அந்த ஷோவில் சத்யராஜ் பேசும்போது, என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. நான் ஒரு விஷயத்தை இங்கே சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் அமீர்கான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால். நான் நண்பன் படத்தில் அமீர்கானின் நடிப்பைவிட விஜய்யின் நடிப்பைத்தான் ரசித்தேன் என்று சொல்ல... விஜய்யே கொஞ்சம் அதிர்ந்துபோனார். 


எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, மனசுக்கு பட்டதை பேசுவதற்கு யோசிக்காத ஆள் நான். கன்னத்தை பிடித்து கிள்ளிவைக்கலாம் என்று விஜய்யை பார்க்கும் போது தோன்றும். அது தான் ஒரு ஹீரோவுக்கு ரொம்ப முக்கியம். அது தான் என் தலைவர் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அதற்கு பிறகு அந்த க்யூட்னஸ் விஜய்யிடம் தான் இருக்கிறது அதனால் தான் இதை சொல்கிறேன் என்றார்.  


விஜய்யை அடுத்த எம்.ஜி.ஆர் என பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் தீரிவிர ரசிகரான சத்யராஜ், விஜய்யை அடுத்த எம்.ஜி.ஆர் என புகழ்வது தான் குறிப்பிடத்தக்கது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget