பேஸ்புக்கை அச்சுறுத்தும் புதிய வைரஸ்!


கம்ப்யூட்டரில் வைரஸ் பரவி வருகிறது என்ற செய்தி எவ்வளவு அதிர்ச்சியாக இருந்ததோ, அது போல் இப்பொழுது ஃபேஸ்புக் அதிர்ச்சி காத்திருக்கிறது. வைரஸ் எப்படி பதிவு செய்து வைத்திருக்கும் ப்ரோகிராம்களை அழித்து மாற்றிவிடுகிறதோ! அதே போல் ஃபேஸ்புக் வார்ம், ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டுகளை மாற்றிவிடுகிறது.
இது ஃபேஸ்புக்கில் உள்ள புதிய பிரச்சனை. இந்த ஃபேஸ்புக் வார்ம் 45,000 லாகின் க்ரெடின்ஷியலை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஃபேஸ்புக் வார்ம் வைரஸ் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. ஃபேஸ்புக் வார்மில் இருந்து சிறந்த பாதுகாப்பை பெற ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்த ஃபேஸ்புக் வார்ம் ட்ரோஜன் வைரஸ் அளவுக்கு பாதிக்காது என்றாலும் இதற்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும். ஏனெனில் ஃபேஸ்புக் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் வார்ம் உள்ளதால் வேறு சில பிரச்சனைகள் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படுகிறதா? அல்லது இன்னும் வேறு சில பிரச்சனைகள் உருவாக போகிறதா? என்பதை கொஞ்சம் காத்திருந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget