இன்றைய நடிகர்களுக்கு சவால் விடும் சேரன்!


பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா (21.02.12) காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் திரு சண்முக சுந்தரம், T.K.ராமமூர்த்தி, T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ், திருமதி P.சுசீலா ஆகியோர் கலந்துகொண்டனர். திரு ராம்குமர் கணேசன் கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


நிகழ்ச்சியில் சேரன் பேசும் போது ” இன்றைய நடிகர்கள் பில்லா, மாப்பிள்ளை என்று பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள். அவர்களுக்கு தில் இருந்தால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தையாவது ரீமேக் பண்ணி நடிக்க முடியுமா?" என்று சவால் விட்டார்.


மேலும் அவர் ” சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு நிகரான படம். ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் எடுக்கிறோம் என்று சொல்கிறார்களே, சிவாஜி படம் அளவிற்கு யாராலாவது முயற்சியாவது செய்ய முடியுமா. சிவாஜி சிகிரெட் பிடிக்கும் போது விடும் புகைக் கூட ஒரு விதமான நடிப்பாகத் தான் இருக்கும்.


படங்களில் அவருடைய அழகை பிரதிபலிக்க போட்ட மேக்கப் எந்த ஹாலிவுட் கலைஞரால் போடப்பட்டது. எல்லாமே இங்கிருப்பவர்கள் செய்தது தான்.நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன். இளம் வயதில் எல்லோரும் சிகிரெட் பிடிக்கத்தான் தீப்பெட்டி வைத்திருப்பார்கள். ஆனால் நான் என் தலைவன் சிவாஜி படத்திற்கு உள்ளங்கையில் சூடம் ஏற்றுவதற்காகத் தான் தீப்பெட்டி வைத்திருப்பேன்.


சிவாஜிக்கு சினிமாவில் மட்டும் தான் நடிக்கத் தெரியும். நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அதனால் தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை” என்று கூறினார் சேரன்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget