உலகிலேயே பணக்கார நாடாக கத்தாரை புகழ்பெற்ற போர்பஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் 15 பணக்கார நாடுகளின் பெயரை போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு செல்வச் செழிப்புடன் திகழ்வதற்கு காரணம் அந்நாட்டின் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும்தான் காரணம்.
கத்தார் நாடுதான் 2022-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியையும் 2020 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த உள்ளது.
உலகின் பணக்கார நாடுகள் வரிசையில், லக்சம்பர்க்குக்கு 2-வது இடமும் சிங்கப்பூருக்கு 3-வது இடமும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்ஹாங், சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடம் பணக்கார 15 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
சர்வதேச நிதியம் வெளியிடும் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பின் அடிப்படையில் பணக்கார நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.
பணக்காரர் என்று இருந்தால் ஏழையும் இருந்தாக வேண்டும். உலகின் மிகப் பெரிய ஏழை நாடுகளின் பட்டியலையும் போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் புருண்டி, லைபீரியா, காங்கோ ஆகியவை முன்னணியில் உள்ளன.