அதர்வா படம் ஒப்பனிங்லே ஒரு திரில்லர் கொலையை செய்கிறார். சென்னையில் அமலா பால் எம்.டி ஆக இருக்கும் ஒரு .டி கம்பெனியில் வேலை பார்க்கிறார் அதர்வா. அங்கே அமலா பால் மீது காதல் கொள்கிறார் அதர்வா. இதனால் பெங்களூரில் அமலா பால் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அவருடன் அடிக்கடி போனில் பேசுகிறார். இதை தெரிந்து கொள்ள அமலா பால் முயற்சியில் ஆரம்பமாகிறது பிளாஸ்பேக்..
எப்பொழுதும் தன் அம்மாவை விட்டு பிரியாமல், அவருடைய அரவணைப்பில் வளர்கிறார் அதர்வா. பெரியவன் ஆனதும் வேலைக்காக சென்னைக்கு வருகிறார். அப்போ தான் அமலா பாலை சந்திக்கிறான். அமலா பால் அமெரிக்கா கல்ச்சரில் வளர்ந்த பெண் என்பதால் சின்ன, சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கட்டி பிடிச்சு தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இதை காதல்னு தப்பா நினைத்து கொள்கிறார் அதர்வா.
ஆனால் அமலா பாலுக்கு வில்லனுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில் ஒரு பார்ட்டியில் வில்லனுடைய கூட்டத்துல இருந்து 3 பேர் அமலா பால் கையை இழுத்துவிடுகிறார்கள். இதை பார்த்து கொண்டிருந்த அதர்வா, அவங்க 3 பேரையும் கொலை செய்துவிடுகிறார்.
இப்படி ஒரு சைக்கோ தனமாக காதலிக்கும் அதர்வாவை, அமலா பால் காதலிக்கிறாரா..? இல்லை எப்படி சமாளிக்கிறார்..? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்...
படத்தின் நிறை – குறைகள் :
பானா காத்தாடியில் லவ்வர் பாயாக வரும் அதர்வாவுக்கு இது 2வது படம். இவருடைய அழுத்தமான நடிப்பு கதைக்கு பக்க பலம். இதில் சிட்டி பையனுக்கான அந்தஸ்து படத்தின் மூலம் கிடைத்திருக்கு. அமலா பால்வோட காஸ்டியூம்ஸ் நன்றாக உள்ளது. தேவதை போல வரும் சீனில் டிரஸிங் பிரமாதம். படத்தில் சந்தானம் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
படத்திற்கு தாமரையின் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷின் இசை அற்புதம். ‘ஒரு முறை...’ எனத் தொடங்கும் பாடல் நம்மை ரசிக்க செய்கிறது. சண்டைக்காட்சிகள் வடிவமைத்த விதம், திரைக்கதை, அமலா பாலின் காலை பிடித்து கிதார் வாசிக்கும் காட்சிகளில் இயக்குனர் எல்ரேட் குமார் கைத்தட்டலை வாங்குகிறார்.
படத்தின் சில இடங்களில் லாஜீக் மீறல்கள் ரொம்ப அதிகம். காதலில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே பார்க்கும் படி சில காட்சிகளை அமைத்திருப்பது. அதர்வாவை சைக்கோ தனமாக காதல் செய்ய வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்.
பொதுவாக படத்தை ஒரு முறை சென்று பார்க்கலாம். கல்லூரி மாணவர்கள், காதலர்களுக்கு ஏற்ற படம்.