பிரகாஷ் ராஜ் ஒரு சாதாரண அரசாங்க ஊழியராக பணியாற்றுகிறார். இவருடைய மகனாக கார்த்திக் தன் தாய் வளர்ப்பின்றி அப்பாவான சுப்ரமணியத்திடம் வளர்கிறான். பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டு, தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறார் சுப்ரமணியம். ஆனால், இதை பற்றி கவலைப்படாமல் கார்த்திக் படிப்பின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறான். சிறு வயதிலிருந்தே தனக்கு பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டின் மீது அளவற்ற ஆர்வம் கொள்கிறான்.
இதனால் எப்போதும் படிப்பில் பின் தங்கிய மாணவனாக இருக்கிறார். இதை அறிந்த சுப்ரமணியம் தன்னுடைய மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலைக்குள்ளாகிறார். இருந்தாலும், மகன் பெரியவனாக வளரும் போது உணர்ந்து கொள்வான் என்று நினைக்கிறார்.
ஒரு சூழ்நிலையில், கார்திக்கின் படிப்பை பற்றி ஆசிரியர் சுப்ரமணியத்திடம் புகார் கூறுகிறார். இதற்கிடையில் சுப்ரமணியத்தின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவராக நளினி (ராதிகா ஆப் தே) அறிமுகமாகிறார். இவர் தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்கிறார்.
கால கட்டத்திற்கு ஏற்ப சுப்ரமணியம் தன்னுடைய மகனின் கிரிக்கெட் ஆர்வத்தை புரிந்து கொண்டு, மகனை ஊக்கப்படுத்துகிறார். பிறகு மாணவ செல்வங்களுக்கு, எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என்று அறிந்து அவர்களை அந்த வழியில் பயணிக்க வேண்டும் என்ற கொள்கையோடு, தற்போதைய கல்வி துறையின் குறைபாடுகளை நீக்க போராடுகிறார்.
அவர் தன்னுடைய போராட்டத்தில் ஜெயித்தாரா..? அல்லது கார்த்திக்கின் கிரிக்கெட் கனவு நிறைவேறியதா..? என்பது தான் கிளைமாக்ஸின் கதை.
படத்தின் நிறை – குறைகள் :
பிரகாஷ் ராஜின் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக உள்ளது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ், தன்னுடைய சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் இசைஞானி இளையராஜாவின் இசை படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. பிரகாஷ் ராஜ் இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.
சில காட்சிகளில் பிரகாஷ் ராஜின் நடிப்பு பேசப்படும் அளவிற்கு இல்லாத்து, படத்திற்கு குறையாக அமைந்தது. கல்வித்துறையின் மீதுள்ள குறைபாடுகள் பற்றி சுப்ரம்ணியம் பாத்திரம் பேசும் வாதங்கள், ஒரு தலையாகவே இருக்கின்றன.