கூகுள் நிறுவனம் தன் புதிய குரோம் பிரவுசர் (பதிப்பு Chrome19.0.1041.0) சோதனைப் பதிப்பினை வெளியிட்டுள்ளது. வேகமான பிரவுசிங் அனுபவத்தினை வழங்குதல், முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்தல் என்ற இரண்டு இலக்குகளில் இதனைத் தயார் செய்துள்ளதாக கூகுள் நிறுவன தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். முன்பு முகவரி கட்டத்தில் இணைய தள முகவரி யினை இடுகையில், அவை ஏற்கனவே குக்கீகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால்,
முழுமையாக நமக்குக் காட்டப்பட்டு, நாம் என்டர் செய்தவுடன் கிடைக்கும். தற்போது முகவரிகளுக்கான சொற்களை இடுகை யிலேயே, அவற்றை உணர்ந்து அந்த இணையப் பக்கத்தினை பின்புலத்தில் காட்டும்படி பிரவுசர் வடிவமைக்கப் படுகிறது. கூகுள் இதனை இன்ஸ்டண்ட் சர்ச் என்ற வசதியாகத் தன் தேடுதளத்தில் கொடுத்தது. இப்போது பிரவுசரில் கிடைக்க இருக்கிறது.
பாதுகாப்பினைப் பொறுத்தவரை, பிரவுசரின் தொழில் நுட்பம் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களை மட்டும் சோதனை செய்திடாமல், தரவிறக்கம் செய்யப்படும் இயக்கத்திற்கான பைல்களையும் (Executable Files) சோதனை செய்து, அவை மோசமானவையாக இருந்தால், தடை செய்திடும்.
மேலே சொல்லப்பட்டவை இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது எனவும், முழுமையான வசதி விரைவில் கிடைக்கும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது.
Size:25.04MB |