கூகுள் தேடு பொறியில் எளிமையாக தேடும் வழி முறைகள்!


கூகுள் தேடல் சாதனமே இன்று, உலகில் அனைவரும் விரும்பிப் பயன் படுத்தப்படும் தேடல் சாதனமாக இயங்கி வருகிறது. மிகக் குறைந்த நேரத்தில், இணையத்தில் இருக்கும் தளங்கள் அனைத்தையும் தேடி, நமக்குத் தேவையான தளங்களின் பட்டியல் தொகுப்பைத் தருவதில், கூகுள் தேடல் சாதனத்தை மிஞ்ச எதுவுமில்லை. இந்த தளத்தில் நம் தேடலை வழக்கமாக மேற்கொள்ளாமல்,
தேடலை செம்மைப் படுத்தினால், கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம். 
link:URL (இணைய முகவரி) =அந்த முகவரிக்கு லிங்க் செய்யப்படும் மற்ற இணையப் பக்கங்களைப் பட்டியலிடும். 
related:URL = முகவரியில் உள்ள இணைய தளத்துடன் சம்பந்தப்பட்ட மற்ற தளப் பக்கங்களைப் பட்டியலிடும். 
site:domain.com "தேடப்படும் சொல்' =தேடலை அந்த கொடுக்கப்பட்ட தளத்துடன் நிறுத்திக் கொள்ளும். 
allinurl:WORDS = இணைய முகவரியில் உள்ள அனைத்து தேடப்படும் சொற்கள் உள்ள தளங்கள் மட்டும் பட்டியலிடப் படும். 
inurl:WORD = like allinurl: மேலே சொல்லப்பட்ட தேடல் போலச் செயல்படும்; ஆனால் முதல் சொல்லுக்கான தேடல் முடிவுகளை மட்டும் கொடுக்கவும். 
allintitle:WORD = தலைப்பில் உள்ள சொற்களுக்கான முடிவுகளை மட்டும் காட்டும். 
intitle:WORD = மேலே சொல்லப்பட்ட தேடலைப் போல இருந்தாலும், அடுத்த சொல்லுக்கான தேடல் மட்டும் மேற் கொள்ளப்பட்டு முடிவுகள் காட்டப்படும். 
cache:URL = கூகுள் ஏற்கனவே, கொடுக்கப்பட்ட தள முகவரி சார்ந்து தன் கேஷ் மெமரியில் வைத்துள்ள பதிப்பினை மட்டும் காட்டும். 
info:URL =இணைய முகவரியைக் கொண்டுள்ள தேடல்கள் சார்ந்தவற்றை மட்டும் பக்கமாகக் காட்டும். கூகுள் தேடல் கட்டத்தில், ஓர் இணைய முகவரியினை டைப் செய்து தேடச் சொன்னால், என்ன தேடல் நடக்குமோ, அதே தேடல் இந்தக் கட்டளைக்கும் மேற்கொள்ளப்படும். 
filetype:SOMEFILETYPE =குறிப்பிட்ட பைல் வகைகளில் மட்டும் தேடப்படும். 
&filetype: SOMEFILETYPE = குறிப்பிடப்படும் பைல் வகையினை மட்டும் விடுத்து, மற்றவற்றில் தேடல் மேற்கொள்ளப் படும். 
site:www.somesite.net“+www.somesite.net”= இந்தக் கட்டளையில், கூகுள் உங்கள் தளத்தின் எத்தனை பக்கங்களை இன்டெக்ஸ் செய்துள்ளது என்று காட்டப்படும். 
allintext:= இணையப் பக்கங்களின் உள்ளாக மட்டுமே தேடல் நடத்தப்படும். அவற்றின் தொடர்பான தளங்களில் தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.
allinlinks: =லிங்க் தொடர்புக்குள்ளாக மட்டுமே தேடல் மேற்கொள்ளப்படும். 
Word A OR Word B =முதல் சொல் அல்லது இரண்டாவது சொல் என ஒன்றுக்கு மட்டும் தேடல் மேற்கொள்ளப்படும். 
Word” OR “Phrase” = தரப்பட்டுள்ள சொல் அல்லது சொல் தொகுதி போலச் சரியாகத் தென்படுபவற்றை மட்டுமே தேடித்தரும். 
Word A Word B = முதல் சொல்லை (word A) கண்டறியும்; ஆனால் இரண்டாவது சொல்லையும் இணைத்து முடிவுகளை வடிகட்டித் தரும். 
Word A +Word B = முதல் மற்றும் இரண்டாவது சொற்கள் இணைந்து கிடைக்கும் இடங்களை மட்டும் தேடல் முடிவுகளாகக் காட்டும். 
~WORD = குறிப்பிட்ட சொல் மற்றும் அதனைப் போன்று பொருள் கொண்ட மற்ற சொற்களுக்காகவும் (synonyms) தேடும். 
~WORD WORD =சொல்லுக்கான அதே பொருள் தரும் சொற்களை மட்டும் தேடிக்காட்டு
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget