காய் ஹார்ட் ஹெம்மிங்ஸ் எழுதிய "த டிசென்டன்ட்ஸ்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். பல கோடி டாலர் மதிப்புள்ள டிரஸ்ட் ஒன்றுக்கு தலைவராக இருப்பவர் மேட் கிங். அரசின் சில சட்ட திட்டங்களின்படி ஏழு வருடங்களுக்குள் அந்த டிரஸ்ட் காலாவதியாகிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் அந்தச் சொத்துகளை விற்று அனைவருக்கும் பிரித்துக்கொடுக்க முடிவெடுக்கிறார் மேட். இந்நிலையில் விபத்து ஒன்றில் படுகாயமடையும் அவரது மனைவி
கோமா நிலைக்குச் செல்கிறார். அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் மூலம் தனது மனைவிக்கு இன்னொருவருடன் உறவு இருப்பதை அறிந்து திடுக்கிடும் மேட் கிங், அதையடுத்து என்ன செய்கிறார் என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் அலெக்ஸாண்டர் பேன். மேட் கிங்காக நடித்துள்ள ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு படத்துக்கு பெரிய பலம்.