நதியை மையமாக வைத்து இயக்கும் பிரமாண்டமான தெலுங்கு படத்தில் சுஜாவாருனி தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் லட்சுமி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பிரமாண்டமான தெலுங்கு படம் குண்டல்லோ கோதாவரி. நதியினை மையப்படுத்தி பிரபல இயக்குனர் கிருஷ்ணவம்சியின் உதவியாளர்- அறிமுக இயக்குனர் குமார் இயக்கும்
இந்தப் படத்தில் வளையல்காரி வேடத்தில் நடிக்கிறார் சுஜாவாருனி. 1980 களில் நடப்பது போன்ற காட்சிகளில் இளையாராஜாவின் பாடல்காட்சியில் நடித்ததை பெரும்பாக்கியமாகக் கருதும் சுஜாவாருனி, “ரசிகர்களின் மனதில் ஆழப்பதியும் வேடம். இளையாராஜாவின் இசையில் வரும் 4 நிமிடப் பாடல் ஒன்றில் ஆடிப்பாடியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்கிறார். ஷார்மி, தீக்ஷா சேத்தை மனதில் வைத்திருந்த இயக்குனர் குமாருக்குப் பார்த்தவுடன் சுஜாவாருனியைப் பிடித்துப்போய்விட அதே வேகத்தில் சூட்டிங்கும் முடித்து வந்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராஜமுந்தரியிலும் ,கோதாவரிக்கரைகளிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளன. ஆதியும் மோகன்பாபுவின் மகள் லட்சுமியும் நாயக- நாயகிகளாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய லட்சியத்தை அடைய வேண்டி மிகவும் தீவிரமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் சுஜா வாருனி. பெயரை மாற்றினால் நம்முடைய நேரம் மாறும் என்கிற மூட நம்பிக்கைக்காக அல்லாமல் முன்பிருந்ததை விட பெருமளவில் தோற்றத்திலும், மனதளவிலும் தான் மாறிய பிறகு தன்னுடைய புது அவதாரத்திற்கு சுஜா வாருனி என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
தன்னை இயக்கிய இயக்குனர்களிடமிருந்தும், தனது சுற்றுப்புறங்களில் இருந்தும் தினம் தினம் நிறையக் கற்றுக் கொண்டிருக்கும் சுஜா வாருனிக்கு கதாநாயகனுடன் இரண்டு பாடலுக்கு நடனம் அப்புறம் நாலு காட்சிகளில் தலையைக்காட்டுவது என்றில்லாமல்… ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் படியான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் லட்சியம். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார்