தி ஹெல்ப் ஹாலிவுட் விமர்சனம்!

வெள்ளைக்காரப் பெண்மணியின் பார்வையில் வீட்டு வேலை செய்யும் இரண்டு கறுப்பினப் பெண்களைப் பற்றிய கதை. 60-களில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையில், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் இன்றும் நிலவி வரும் இனப் பாகுபாடு குறித்து உணர்ச்சிப்பூர்வமாக அலசப்பட்டிருக்கிறது. சட்டங்களோ, திட்டங்களோ இந்த உலகில் சமதர்மத்தை நிலைநிறுத்தி விடாது; நாம் அனைவரும் சமம்
என்ற எண்ணத்தால்தான் இனப்பாகுபாட்டை மாற்ற முடியும் என்ற கருத்தை முன்வைத்துள்ள இந்தப் படத்தை டேட் டெய்லர் இயக்கியிருக்கிறார். முக்கிய வேடங்களில் நடித்துள்ள வையோலா டேவிஸ், ஆக்டேவியா ஸ்பென்ஸர், எம்மா ஸ்டோன் ஆகியோரின் நடிப்பும் நெகிழ்ச்சியான காட்சிகளும் கண்கலங்க வைக்கின்றன. கேதரின் ஸ்டாக்கெட் எழுதிய "ஹெல்ப்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், நாவலை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது என்பதே விமர்சகர்களின் கருத்து.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget