வலது காதில் வைத்து மொபைல்போன் பேசும் போது மூளையில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓர் பகீர் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. எந்திரத்தனமான வாழ்க்கையில் மொபைல்போன் இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் மொபைல் மயமாக இருக்கிறது. ஆனால்,
மொபைல்போன் பயன்படுத்துவதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதில், ஒரு முக்கிய பாதிப்பை தெரிந்தே ஆக வேண்டும். வலது காதில் வைத்து மொபைல்போன் பேசினால் மூளை பாதிக்குமாம். ஆம்! இதனால் இடது காதில் வைத்து மொபைல் பேசுவதை வழக்கப்படுத்தி கொண்டால் நல்லது என்கிறது அந்த ஆய்வு.
வலது காதில் வைத்து பேசும் போது மொபைல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு, நேரடியாக மூளையை பாதிக்குமாம். இதனால் இடது காதில் மொபைல் வைத்து பேசினால் சிறிது பாதிப்பை தவிர்க்கலாம். இது காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது போன்ற வழி முறை தான்.
இந்த உண்மை அப்போலோ மருத்துவ குழுமத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில் நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்தும் போது இது பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.