அறிமுக இயக்குநர் ராம்கி ராமக்கிருஷ்ணன் இயக்கியுள்ள இதயம் திரையரங்கம் படம் நடுத்தர குடும்பத்து படமாக உருவாகியுள்ளது. நமது இதயமே ஒரு திரையரங்கம் போன்றதுதான். அதில் பல காட்சிகள் எப்போதுமே ஓடிக் கொண்டே இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்தே இப்படத்தின் பெயரை வைத்துள்ளேன் என்கிறார் இயக்குநர். எஸ்.ஏ. சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட இயக்குநர்களிடம் 20 படங்களுக்கும் மேல் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள ராம்கி ராமகிருஷ்ணன், இயக்கியுள்ள இப்படத்தில்
ஆனந்த் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கம்பன் கழகம் நாயகி ஸ்வேதா கதாநாயகியாக நடிக்கிறார். நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்ட இப்படம் சிறந்த பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்று உறுதிமொழி அளிக்கிறார் இயக்குநர்.