மேலும் படங்கள் |
எதிர்பார்ப்புகளை இந்த டிரெய்லரும், அதில் கமலின் தோற்றமும், விஸ்வரூபம் என்ற பெயரின் எழுத்துக்களும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கமல் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் நடிப்பையும், விஸ்வரூபம் படம் வந்துள்ள விதம் குறித்தும் அறிந்த ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன், உடனடியாக அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாராம். தனது விருப்பத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக்கேல் வாட்மோரிடம் தெரிவித்துள்ளார். மைக்கேல் வாட்மோர்தான், கமல்ஹாசனின் பல படங்களுக்கு மேக்கப் ஆலோசகர் என்பது நினைவிருக்கலாம்.
வாட்மோர், இந்தத் தகவலை கமலுக்குத் தெரிவிக்க கமலும் இசைவு தெரிவித்தாராம். இதையடுத்து தற்போது அமெரிக்கா சென்றுள்ள கமல், அங்கு பேரி ஆஸ்போர்னுக்குப் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு பதிப்புகளையும் சப் டைட்டிலுடன் ஆஸ்போர்னுக்குப் போட்டு காண்பிக்கிறார்களாம்.
பேரி ஆஸ்போர்ன் ஹாலிவுட்டின் பிரபல முகங்களில் ஒருவர். ஆக்டோபஸ்ஸி, அபோகாலிப்ஸ் நவ், மேட்ரிக்ஸ், லார்ட் ஆப் ரிங்ஸ், பேஸ் ஆப் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆஸ்போர்ன்.
விஸ்வரூபம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்தே வாட்மோர் மூலம் படத்தைப் பார்க்கும் விருப்பத்தை அவர் வெளியிட்டாராம். ஒருவேளை கமல்ஹாசனின் நடிப்பு அவரைக் கவர்ந்து விட்டால் நிச்சயம் கமல்ஹாசனை வைத்து நேரடியாக ஒரு ஆங்கிலப் படத்தை அவர் தயாரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
அப்படி ஒரு வேளை கமல்ஹாசன் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம் உருவானால் அல் பசினோ மாதிரியான வித்தியாசமான நாயகன் வரிசையில், நம்ம ஊர் கமலை ஹாலிவுட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்...
பார்க்கலாம், பேரி என்ன செய்யப் போகிறார் என்று...!