நடிகர்கள்: விகாஷ், சுவாசிகா, ஆர்.சுந்தர்ராஜன், சூரி
ஒளிப்பதிவு: வின்ஷி பாஸ்கி
இசை: வி.ஏ.சார்லி
பாடல்கள்: நந்தலாலா, தமிழமுதன், வசீகரன்
மக்கள் தொடர்பு: சக்திவேல்
தயாரிப்பு: எஸ்.பி பிலிம்ஸ் மற்றும் பெரியம்மாள் கலைக்கூடம்
எழுத்து – இயக்கம்: சீலன்
கல்லூரியில் படிக்கும் விகாஷ், எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன். படிப்பிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுபவன். அதே போல அவனது சுதந்திரத்துக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பது கிடையாது. அப்படி கலகலகப்போடு இருக்கும் அவன் மனதில் வந்து நிற்கிறார் சுவாசிகா. அவனோடு படிக்கும் மாணவி. இருவரும் இரு பக்கமும் காதலை வளர்த்துக் கொள்கின்றனர்.
அவள் காதலை எப்போது தெரிவிப்பாள் என்று காத்திருக்கிறான். அவளும் அந்த நற் செய்தியை சொல்ல வருகிறாள். அவனோ கெட்ட நண்பர்கள் சவகாசத்தால் கெட்ட புத்தகத்தை படித்து மனதை கெடுத்து வைத்து, அவள் அங்குவற காமம் தலைக்கேறி, புத்தி பேதலித்து அவளை அடைய முற்படுகிறான். அவள் இடம் கொடுக்கவில்லை. இப்படி தவறாக நடக்க முயன்ற அவன் முகத்தில் எச்சிலை துப்பி, செருப்பால் அடித்து விட்டு போகிறாள்.
காதலை தெரிவிக்க வந்தவளிடம் காம வெறியில் நடந்து கொண்ட சம்பவத்தை உணர்ந்து வெட்கி தலை குனியும் விகாஷ், அதன் பிறகு என்ன செய்கிறார், சுவாசிகா காதலை ஏற்றுக்கொண்டாரா என்பது கிளைமாக்ஸ்.
நாம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது. நமது நண்பர்களும் நல்லவர்களாக இருக்க வேண்டும். கெட்ட சகவாசத்தால் ஏற்படும் விளைவு இந்த மாதிரிதான் அமையும் என்கிற அற்புதமான கதையை படமாக்கி இருக்கிறார் சீலன். இன்றைய காலகட்டத்துக்கு தேவையான அற்புதமான கதை. அதை இயல்பான காட்சிகளோடு சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள்.
விகாஷ் இயல்பாக நடித்து கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதே போல புதுமுகம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு சுவாசிகா நடிப்பு பலே.
ஷோலோ காமெடி பண்ணுகிற அளவுக்கு நல்ல வாய்ப்பு இருந்தும் சூரி அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்கு பின்னணி இசை ரொம்ப முக்கியம். அவர்கள் விட்ட குறையை இவர்தான் சரி செய்ய வேண்டும். அதை நிறைவாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் வி.ஏ.சார்லி