கார்த்தியின் அடுத்தப் படமான ‘சகுனி’ அஜீத் படத்திற்கு நிகராக வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கார்த்தியின் இப்படமும் ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அறிமுக இயக்குநர் சங்கர் தயாள், இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை இந்திய மொழிகளில், எந்த மொழியிகளிலும் எடுக்ககூடிய அளவுக்கு அமைந்திருக்கிறதாம். ஜி.வி. பிரகாஷ் குமார், இசையமைப்பில் உருவாகியிருக்கும்
இப்படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும் அளவுக்கு இனியமையான பாடல்களாக வந்திருக்கிறதாம். அதை ரசிகர்கள் கேட்பதற்கு இன்னும் சில நாட்கள் பொருத்திருக்க வேண்டும். ஆம், சகுனியின் பாடல் வெளியீட்டு விழா வரும் மே 31ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறது.
பிரகாஷ்ராஜ், சந்தானம், ராதிகா, ரோஜா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. ரஜினி, சூர்யா படங்களை அடுத்து மூன்றாவது இடத்தில் கார்த்தி, தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பல கோடி ரூபாய் விலை கொடுத்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஸ்ரீ சாய் கணேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது