தமிழில் நடித்து கொண்டே உருமி மலையாள படத்தில் நடித்த ஆர்யாவுக்கு தெலுங்கிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. செல்வராகவன், இரண்டாம் உலகம் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுத்து வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் ஆர்யா. இந்நிலையில் ஆர்யா - ஸ்ரேயா நடித்த சிக்கு புக்கு படமும் இப்போது லவ் டு லவ் என்ற பெயரில் தெலுங்குக்கு டப் ஆகிறது. இதனால் இந்த சூட்டோடு தெலுங்கிலும் தனக்கென்ன ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.