ஸ்ருதியின் மார்க்கெட்டில் சிறு தூறல்கூட இதுவரை விழவில்லை. முதல்முறையாக கப்பர் சிங் படத்தின் கலெக் ஷன் இவரை அதிர்ஷ்ட ராணியாக்கியிருக்கிறது. கப்பர் சிங்கை இயக்கிய ஹரிஷ் ஷங்கர் அடுத்து ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலும் ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார்.
கப்பர் சிங்குக்குப் பிறகு ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக்க இளம் ஹீரோக்கள் முனைப்பாக உள்ளனர். மேலும் சில புதிய தெலுங்குப் படங்களில் விரைவில் ஒப்பந்மாகயிருக்கிறார் ஸ்ருதி.