படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ... நாளொரு பரபரப்பு செய்தி தன்னைப் பற்றி வெளியாகுமாறு பார்த்துக் கொள்வதில் பவர் ஸ்டாருக்கே குரு சோனாதான். இன்றைய முன்னணி நாளிதழ் ஒன்றில், அவர் உள்ளாடை அணியாதது கூட செய்தியாகும் அளவுக்கு பரபரப்பைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனா.
அதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது.
எஸ்பிபி சரண் விவகாரத்துக்குப் பிறகு வாய்ப்பின்றிக் கிடந்தவருக்கு, இப்போது வரிசையாக வாய்ப்புகள். பிஸினஸும் பிக்கப் ஆகிவிட்டதாம் (ஃபேஷன் கடைங்க!).
விரைவில் வரவிருக்கும் புதிய படம் சோக்காலியில் சோனாவுக்கு மிக முக்கிய வேடமாம். இதில் அவர் போதும் போதும் என்ற அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறாராம். இவருக்குப் போட்டியாக இல்லை என்றாலும், கூடுதல் கவர்ச்சிக்கு பாபிலோனா வேறு.
சோக்காலி ஒரு ப்ளே பாய் கதை என்பதால், அதற்கேற்ற மாதிரி தாராளம் காட்டியிருப்பதாகவும், இயக்குநர் கேட்டிருந்தால் இன்னும் கூட தாராளமாக நடித்திருப்பேன் என்றும் தெரிவித்தார் சோனா.
அப்படி என்ன கதை?
மீடியா வெளிச்சத்தில் பிரபலமாகத் திகழும் ஒரு ப்ளே பாய், அந்த பாப்புலாரிட்டியை வைத்து எப்படியெல்லாம் பெண்களைச் சீரழிக்கிறான்... பின்னர் அதில் எப்படி சிக்கிக் கொள்கிறான் என்பது கதையாம்.
ஏ சரணா என்ற புதியவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்துள்ளார் எஸ் ஏ ராஜ்குமார்.
சைதன்யா, ஜெ ராம் என புது ஹீரோக்கள், சுவாசிகா, ரித்து என புதிய நாயகிகள்... இவர்களைக் காப்பாற்றத்தான் சோனா!