கே.வி ஆனந்த் இயக்கத்தில் ’மாற்றான்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகிக்கொண்டே இருக்கிறார். சிங்கம்-2, துப்பறியும் ஆனந்த் ஆகிய படங்களை தொடர்ந்து, கமல் நடிப்பில் 1982-ல் வெளியான சகலகலா வல்லவன் படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதித்திருக்கிறார் சூர்யா.
சகலகலா வல்லவன் படமும் பாடல்களும் 80-களில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. அதுமட்டுமில்லாமல் சூர்யா கமலின் தீவிர ரசிகர். சிறிய வயதிலிருந்தே கமல்ஹாசன் நடித்த படங்களை பார்த்து வளர்ந்தவர் சூர்யா. ரஜினியின் ரசிகரான நடிகர் விஜய் ரஜினி நடித்து வெற்றிபெற்ற அண்ணாமலை போன்ற படங்களை ரீமேக் செய்வதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.
அதேபோல் கமலின் ரசிகரான சூர்யா கல்ஹாசனின் படத்தை ரீமேக் செய்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம் நிறுவனத்திடமிருந்து வாங்குமாறு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜாவிடம் சூர்யா கூறியிருக்கிறார்.
ஆனால் ஏ.வி.எம் நிறுவனம் தாங்களே தயாரிப்பதாக கூறி சூர்யாவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்துள்ள ’நேத்து ராத்திரி எம்மா’, ‘நான் தான் சகலகலா வல்லவன்’ போன்ற பாடல்கள், தற்போதைய தொழில்நுட்பத்தில் ரீமேக் செய்யப்பட்டு வரும் போது ரசிகர்களை கவரும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறது படக்குழு.