Universal Viewer Portable - பன்முக கோப்பு கையாளுனர் மென்பொருள்


கணணியில் ஒவ்வொரு வகையான கோப்புகளையும், வீடியோக்களையும் பார்ப்பதற்கு ஒவ்வொரு மென்பொருளை பயன்படுத்துவோம். புகைப்படங்களைப் பார்க்க ஏதேனும் Image viewer மென்பொருள், text கோப்புகளை பார்க்க Notepad, வீடியோ படம் பார்க்க ஏதேனும் Movie player, ஓபீஸ் கோப்புகளைப் பார்க்க MS Office, Pdf கோப்புகளைப் பார்க்க ஏதேனும் Pdf Viewer மென்பொருள் என்று தனித்தனியாக மென்பொருள்களைப் பயன்படுத்துவோம்.



ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருளா? இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருளில் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கென்று இருக்கும் ஒரு மேம்பட்ட மென்பொருள் தான் Universal Viewer.


இதன் மூலம் எல்லா வகையான மல்டிமீடியா மற்றும் ஆவணங்களை ஒரே மென்பொருளில் பார்த்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பெரும்பாலான கோப்பு வகைகளை பார்க்கும் படி ஆதரிக்கிறது. இதன் மூலம் பார்க்கக்கூடிய கோப்புகளும், அதன் வகைகளும்:
  • Text, Binary, Hex, Unicode: any files, of unlimited size (even 4Gb+ sizes are allowed)
  • RTF, UTF-8: RTF and UTF-8 encoded texts
  • Image: all general graphics formats: BMP JPG GIF PNG TGA TIFF... plus all formats supported by IrfanView/XnView external viewers
  • Multimedia: all formats supported by MS Windows Media Player: AVI MPG WMV MP3...
  • Internet: all formats supported by MS Internet Explorer: HTML PDF XML MHT...
  • Plugins: all formats supported by Total Commander Lister plugins
  • MS Office: all file types of MS Office (if installed): DOC DOCX XLS PPT...
  • Converters: some types can be viewed as plain text: DOC DOCX PDF PPT ODT...

இத்தனை வகையான கோப்புகளையும் ஒரே மென்பொருளில் பார்ப்பதனால் நேரம் செலவிடுவதும் குறையும். வேறு மென்பொருள்களை தேடி அலையவும் தேவையில்லை.


இந்த மென்பொருளை Right click மெனுவில் வரும்படி வைத்துக் கொண்டால் பலவகையான கோப்புகளை எளிதாக விரைவாக திறந்து படிக்கலாம். பயன்படுத்த எளிமையான இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது.
Size:5.19MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget