இன்றைய நாளில் எந்த தளத்துக்கு சென்றாலும் ஒரு நச்சு நிரல் பத்தி தானுங்க பேச்சு! அது வருகின்ற திங்களன்று பல லச்சம் கணிப்பொறியை காவு வாங்க போகிறதாம். இந்த நச்சு நிரலுக்கு அலூரியன் மால்வேர் என்று பெயரிட்டு உள்ளனர். இதனால் பல தளங்கள் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளனர். அன்றைய தினம் இணையம் செயல்படாது என்று பீதியை கிளப்புகின்றனர். ( அப்ப நம்ம பொளப்பு நாறிடுமா!). ஆனால் ஒரு சிலர் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லுகின்றனர்.
இன்டர்நெட் இணைப்பில் பாதிப்பு வந்தால் உடனடியாக சரி செய்ய வாய்ப்புள்ளது. எதற்கும் நாம் உஷாராக இருப்பது நல்லது தானே! பொறுத்திருந்து பார்ப்போம் இது ரகளையா இல்லை கவலையா என்று!
ஏற்கனவே உங்கள் கணிணி இந்த அலூரியன் மால்வேர் நச்சு நிரலால் பாதிக்க பட்டுள்ளதா என்பதை மேற்கண்ட லிங்க் சென்று பார்த்துக்கொள்ளவும்.
உங்கள் கணினி பாதிப்படையவில்லை
|
உங்கள் கணினி பாதிப்புக்கு உட்பட்டுள்ளது
|