பிரணவ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பாகை கே.செந்தில் தயாரிக்கும் படம் ‘கருப்பழகி’. இதில் நாயகனாக புதுமுகம் அமித், நாயகியாக கோவாவைச் சேர்ந்த ஷில்பா நடித்துள்ளனர். யுவராணி, சிங்கமுத்து, அஜய்ரத்தினம், மீராகிருஷ்ணன், விவேக் ஜம்பகி ஆகியோரும் நடித்துள்ளனர். புதுமுகம் ஆதிசிவன் வில்லனாக வருகிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி விஜய் அருண் இயக்குகிறார். ஒளிப்பதிவு மற்றும்
எடிட்டிங்: கண்ணதாசன், இசை: வேலன்.
கிராமத்து மண்வாசனை கொண்ட காதல் கதையாக தயாராகிறது. ஊருக்காகவே வாழும் ஒரு பெண்ணுக்கும் தான் என்ற அகந்தையுடன் வாழும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் அதனால் ஏற்படும் மோதல்களுமே படத்தின் கதைக்களம்.
காரைக்கால், திருநள்ளாறு, தரங்கம்பாடி, நீடாமங்கலம் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.